உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/066

விக்கிமூலம் இலிருந்து


63

இந்த உலகம் !


இந்த உலகம்
இயற்கை உலகம்!
-ஆனால் இன்றோ
செயற்கை உலகம்!
மந்தம் இன்றி
வினைபடு உலகம்!
-ஆனால் இன்றோ
புனைபடு உலகம்!

இந்த உலகம்
எழில்மிகு உலகம்!
-ஆனால் இன்றோ
தொழில் மிகு உலகம்!
சொந்த நலன்கள்
சூழ்ச்சிகள் உலகம்!
-எனவே இஃதொரு
தாழ்ச்சிகள் உலகம்!

இந்த உலகம்
ஏர்த்தொழில் உலகம்!
-ஆனால் இன்றோ
போர்த்தொழில் உலகம்
வந்தவர் எவரும்
வாழ்ந்திலா உலகம்!
-ஆயினும் ஆசையில்
தாழ்ந்திலா உலகம்!

-1980

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/066&oldid=1839423" இலிருந்து மீள்விக்கப்பட்டது