கனிச்சாறு 4/093
தோற்றம்
89
நெறி காணீரே !
கல்லாலும் செம்பாலும் பண்ணிவைத்த
படிவத்தைக் ‘கடவுள்’ என்றே
நல்லாவின் பாலாலும் நெய்யாலும்
வழிபாடு நாளும் செய்தே
எல்லாரும் அவர்பெற்ற மாந்தரென்பீர்!
ஆனாலும் எண்ணற் றோரைச்
சொல்லாலும் மக்களெனச் சொல்லுகிலீர்;
தாழ்த்துகின்றீர்; நெறிகா ணீரே!
-1960