உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/128

விக்கிமூலம் இலிருந்து


124

புரட்சி செய் தம்பி, கனல்போல!


மின்னலாய் மின்னு!
இடியாக இடி!
மேலேறு தம்பி மேலேறு!
இன்னலாய் வாழும்
ஏழையர்க் கெல்லாம்
எப்போது விடிவது? வழிகூறு!

புயலாகச் சீறு!
பொழுதாகக் காய்ச்சு!
புரட்சி செய் தம்பி, கனல்போல!
வயலாக விளைந்தாலும்
வாய்க்காது, உழவர்க்கு!
வழிபறிப் பாரைத் தீய், அனல்போல!

-1986

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/128&oldid=1839637" இலிருந்து மீள்விக்கப்பட்டது