கனிச்சாறு 4/147
தோற்றம்
143
நெருப்பு உழைப்பு அல்லவோ
சிறப்புகள் நிகழ்த்தும்!
இருப்பதில் குறைசொல்ல
எல்லார்க்கும் தெரியும்!
விருப்பமில் லாததை
வெறுப்பதும் இயல்பே!
உருப்படி யாய்எதும்
உருவாக்கல் கடினம்!
நெருப்புழைப் பல்லவோ
சிறப்புகள் நிகழ்த்தும்!
உண்மையும் உறுதியும்
ஒழுக்கமும் உழைப்பும்
திண்மையும் நேர்மையும்
தெளிவுளமும் அன்றோ
அண்மையும் சேய்மையும்
ஆக்கங்கள் செய்யும்!
பெண்மையர் ஆண்மையர்
பிரிவின்றி செய்க!
-1992