கனிச்சாறு 5/039
தோற்றம்
36 ஆசை!
பாப்பா வுக்குப் பால் குடிக்கக்
கொள்ளை ஆசை! - எங்கள்
பாட்டிக் கென்றும் கதை சொல்லக்
கொள்ளை ஆசை!
அம்மா வுக்குப் புடவை மேலே
கொள்ளை ஆசை! - எங்கள்
அப்பா வுக்கு மீசை மேலே
கொள்ளை ஆசை!
தாத்தா வுக்குப் பேரன் மேலே
கொள்ளை ஆசை! - இந்தத்
தங்கைக் கென்றும் பாட்டுப் பாடக்
கொள்ளை ஆசை!
-1969