கனிச்சாறு 5/073
தோற்றம்
70 ஆலமரம்!
ஆல மரத்தின் நிழலில் வந்தே
ஆயிரம் பேர் தங்கலாம்!
ஆல மரத்தின் விதையைப் பார்க்க
கடுகைப் பெரிய தென்னலாம்!
மிகவும் சிறிய விதையில் தோன்றும்
மிகவும் பெரிய மரத்தைப் போல்
மிகவும் சிறியர்_செயலை
மாநிலத்தில் _லாம்!
விரித்த கிளைகள் தாங்கி நிற்கும்
விழுதைப் போலும் உதவியைப்
புரிந்து வாழ வேண்டும் நம்மைப்
பெற்றவர்க்கு என்றுமே!
-1960