உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/075

விக்கிமூலம் இலிருந்து

72

இல்லை!


சிற்றெறும்புக் கூட்டத் திலே
சோம்பல் இல்லை இல்லையே!
கற்றுத் தேர்ந்த கூட்டத்திலே
கயவர் இல்லை இல்லையே!

குலைக்கும் நாய்கள் என்றுமே
கடிப்ப தில்லை இல்லையே!
அலைகள் என்றும் கடலிலே
அடங்கல் இல்லை இல்லையே!'

பொய்யை வைக்கும் நெஞ்சுள்ளார்
பிழைப்ப தில்லை இல்லையே!
மெய்யைச் சொல்லும் நல்லவர்
மாள்வ தில்லை! இல்லையே!

-1960

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/075&oldid=1850937" இலிருந்து மீள்விக்கப்பட்டது