உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/077

விக்கிமூலம் இலிருந்து

74  அழிவு!

புழுவைக் கொல்ல பூச்சி!
பூச்சியைக் கொல்ல பாச்சை!
பாச்சையைக் கொல்ல பல்லி !
பல்லியைக் கொல்ல தேரை!
தேரையைக் கொல்ல பாம்பு!
பாம்பைக் கொல்ல கீரி!
கீரியைக் கொல்ல நரி!
நரியைக் கொல்ல ஓநாய்!
ஓநாயைக் கொல்ல கரடி!
கரடியைக் கொல்ல புலி!
புலியைக் 'கொல்ல யானை!
யானையைக் கொல்ல அரிமா!
அரியைக் கொல்ல மாந்தன்
மாந்தனைக் கொல்லும் எல்லாம்! -1960

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/077&oldid=1850939" இலிருந்து மீள்விக்கப்பட்டது