கனிச்சாறு 5/083
தோற்றம்
80
இருசொல் அழகு!
பசுவை வீட்டில் வளர்ப்ப தேன்?
பச்சைக் குழந்தை அழுவ தேன்?
(பாலுக்கு)
.....................................
.....................................
(பாட்டால்)
மாட்டுக் கஞ்சி நிற்ப தேன்?
மடை மேடை யாவ தேன்?
(கொம்பால்)
மாடிக் கேற முடிவ தேன்?
மல்லி அளந்து காட்ட வேன்?
(படியிருப்பதால்)
நாடு நரகம் ஆவ தேன்?
நல்ல பேச்சு சிதைவ தேன்?
(குடியால்)
இரவில் வெளிச்சம் தெரிவ தேன்?
எல்லாம் உணர்ந்து சொல்வ தேன்?
(மதியால்)
ஏரி நிறைந்து வழிவ தேன்?
எருது பூட்டி உழுவ தேன்?
(மழை பெய்ததால்)
-1960