உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/093

விக்கிமூலம் இலிருந்து

90  துன்பத்திற்குத் துவளாதே!

துன்பம் வரும்போழ்தில் - நீ
துவண்டு விடவேண்டா!
இன்பம் வரும் பின்னே - என
எண்ணியிரு தம்பி!

சூழ்ச்சி பிறர் செய்வார் -
சோர்ந்து விடல் தீது!
தாழ்ச்சி வரும் முன்னே - நீ
தப்பி விடல் நன்று!

வாய்மைஉளம் கொண்டே - உன்
வாழ்வில் நலம் தேடு!
தூய்மைமனம் கொண்டோர் - ஒரு
தோல்வி பெறல் இல்லை!

செல்வ வளம் எல்லாம் - நிலை
தேய்ந்து விடல் நேரும்!
கல்வி வளம் என்றும் உனைக்
காத்து வரும் தம்பி!

-1968

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/093&oldid=1851215" இலிருந்து மீள்விக்கப்பட்டது