உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/108

விக்கிமூலம் இலிருந்து

105  ஆடுக ஊஞ்சல்!

அன்புப் பாப்பா
அழகுப் பாப்பா
ஆடுக ஊஞ்சல்!

அசையும் காற்றின்
திசையில் நீந்தி
ஆடுக ஊஞ்சல்!

இன்பத் தமிழே
எழிலோ வியமே
ஆடுக ஊஞ்சல்!

இளமைக் கால்கள்
வளமை பொலியும்
ஆடுக ஊஞ்சல்!

வானில் அலையும்
வட்ட நிலாவே
ஆடுக ஊஞ்சல்!

வனப்பும் உரமும்
நினைவும் பெருகும்
ஆடுக ஊஞ்சல்!

மானின் கன்றே
மகிழம் பூவே
ஆடுக ஊஞ்சல்!

துள்ளும் அலையே
துடிக்கும் விழியே
ஆடுக ஊஞ்சல்!

தோன்றும் இன்பம்
ஊன்றும் எழிலும்
ஆடுக ஊஞ்சல்!

எள்ளின் பூவே
இசைக்கும் குயிலே
ஆடுக ஊஞ்சல்!

இடையும் சிறுக்கும்
இருவிழி குளிரும்
ஊஞ்சல்!

-1974

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/108&oldid=1851248" இலிருந்து மீள்விக்கப்பட்டது