கனிச்சாறு 5/112
தோற்றம்
109
உழைக்காமல் பயன் இல்லை!
பள்ளியை நோக்கி
நாளும் ஓடுவாய்!
பையினுள் சுவடிகள்
பொத்தகம் தூக்குவாய்!
அள்ளி,உண் ணாமலே
பசியும் அடங்குமா?
ஆவலாய்க் கற்காமல்
அறிவூறுமா?
உழுகின்ற நோக்கோடு
கலப்பையை ஏந்தினாய்!
உழைக்காமல் விதைக்காமல்
பயன்எதிர் பார்க்கிறாய்!
நிழலென்று சொன்னாலே
உடலும் குளிருமா?
நெருப்பென்று சொன்னாலே
குளிர் போகுமா?
உண்மையை உணராமல்
உழைப்பை இகழ்கிறாய்;
ஊமையாய் இருந்தே
துறவி என்கிறாய்!
அண்மையில் இருப்பதே
சேய்மை ஆகுமா?
ஆழப் படுத்தாமல்
நீர் ஊறுமா?
-1975