உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/130

விக்கிமூலம் இலிருந்து

127

புரட்டர் உலகம் இதுவடா!


பொய்யும் புளுகும்
புனைவும் நிரம்பிய
புரட்டர் உலகம் இதுவடா! - இதில்
மெய்யும் ஒழுங்கும்
மேன்மை உறுவது
மிகவும் கடினம் உணரடா!

கையும் களவும்
காழ்ப்பும் உடைய
கழிசடை மாந்தர் வாழ்கிறார்! - இவர்
செய்யும் வினையும்
செருக்கும் நிறைந்தே
சீர்மை மாந்தர் தாழ்கிறார்!

-1983

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/130&oldid=1851537" இலிருந்து மீள்விக்கப்பட்டது