கனிச்சாறு 5/131
தோற்றம்
128
பிறப்பினை வரலாறாக்கிடுவாய்!
ஊரில் உலகில் ஆயிரம் நடக்கும்!
ஒன்றையும் பெரிதாய் எண்ணாதே! - உன்
உளத்தைச் சேறாய்ப் பண்ணாதே! - முன்
பாரினில் வாழ்ந்த பயனுடை யோரின்
பாதையில் நீயும் நடையிடுவாய்! - உளப்
பதைப்புக் கென்றும் தடையிடுவாய்!
நெஞ்சில் நினைவுகள் ஆயிரம் மலரும்!
நிலைப்பன எண்ணி எடையிடுவாய்! - உள
நேர்மையை என்றும் கடைப்பிடிப்பாய்!
பிஞ்சில் பழுத்தே உதிர்ந்து போகாதே!
பிழையெனக் கண்டதை நீக்கிடுவாய்! - உன்
பிறப்பினை வரலா றாக்கிடுவாய்!
-1983