உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/134

விக்கிமூலம் இலிருந்து

131

உலகக் கடமைகள்
உடனே தொடங்குக!


இன்னுமேன் உறக்கம்?
இன்னுமேன் தயக்கம்?
எழுக,நீ தம்பி! எழுகவே!
உன்னுடைப் பங்கின்
உலகக் கடமைகள்
உடனே தொடங்கிட முயல்கவே!

உள்ளமும் உடலும்
ஒன்றினை ஒன்றாய்
ஊக்கிட வேண்டும்; உணர்கவே!
எள்ளலும் பகையும்
இருக்கவே செய்யும்;
எதிர்த்திடத் துணிவும் பெறுகவே!

உலகமே மாறி,நீ
ஒருவனாய் நிற்பினும்
உன்னுளம் சரியென நினைப்பதை
இலகு முன் அறிவுடன்
எடையிடு தம்பி!
ஏற்றதென் றால்,உடன் தொடர்கவே!

-1984

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/134&oldid=1851541" இலிருந்து மீள்விக்கப்பட்டது