உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/139

விக்கிமூலம் இலிருந்து

136

அன்றாடம் உடற்பயிற்சி செய்குவீர்!


அன்புத் தம்பியே
அருமைத் தங்கையே
அன்றாடம் உடற்பயிற்சி செய்குவீர்!
என்பு வலுப்பெருகும்;
தசைகள் இறுகலுறும்;
எண்ணம் தூய்மையுறும் உய்குவீர்!

ஆடி ஓடி விளை
யாடி அலைந்து வரின்
அரத்த ஓட்டமிகும் உடலிலே!
நாடி நரம்புகளில்
நச்சு வெயர்வை வெளி
யேற உணர்வுமிகும் குடலிலே!

கால்கை மூட்டிணைப்பு
கடுகும் பிடிப்பகலும்!
கண்கள் ஒளிமிகுக்கும் காட்சியில்!
மேனி மினுமினுக்கும்;
மேன்மைக் குணங்கள் மிகும்;
மிடிகள் அகலும்இன்ப மாட்சியில்!

-1987

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/139&oldid=1851546" இலிருந்து மீள்விக்கப்பட்டது