கனிச்சாறு 5/144
தோற்றம்
141
மண்டையைக் குழப்பும்
மதமும் சாதியும்!
சிட்டுக் குருவியே!
சிட்டுக் குருவியே!
எட்டுத் திசையிலும்
ஏறியும் இறங்கியும்
சுற்றித் திரியும்
சிட்டுக் குருவியே!
உற்றவுன் இனத்தில்
உறவினில் - பிறப்பில், எம்
மண்டையைக் குழப்பும்
மதமும் சாதியும்
உண்டோ உரைப்பாய்,
சிட்டுக் குருவியே!
-1988