உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/154

விக்கிமூலம் இலிருந்து

150

பெரும்பயன் பெறு!


உலகம் பெரிது; வானம் பெரிதே;
உன்னுயிர் அவற்றுள் ஓர் அணுவே!
உலகப் பொருள் ஒவ்வொன்றும் அறிவே!
உன்அறிவு அவற்றுள் ஒருதுளியே!
உலகின் அசைவில் உன்னுடை அசைவோ
ஒருசிறு இயக்கம்; எனவே, நீ
உலகத் துயிர்ப்பில் பெரும்பயன் பெறவே
ஒருநொடிப் பொழுதும் ஓயாதே!

1968

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/154&oldid=1851905" இலிருந்து மீள்விக்கப்பட்டது