கனிச்சாறு 5/167
தோற்றம்
163
உள்ளமும் உரையும் செயலும்!
உள்ளம்,நன் றானால்,
உரை,தெளிந் திருக்கும்!
கள்ளம் இருந்தால்
கருத்தெலாம் இருளே!
சீரிய சொற்களே
செயல்களுக் கடிப்படை!
கூரிய கருத்தே
குழப்பம் தவிர்க்கும்!
தெளிவான உள்ளமே
தெளிவான கருத்தை
நெளிவுசுழி வின்றி
நேர்மையாய் உணர்த்தும்!
கோணல் உள்ளமே
குழம்பிய உரைதரும்;
நாணுறு செயல்களை
நாட்டினில் விளைக்கும்!
-1982