உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/179

விக்கிமூலம் இலிருந்து


உண்மைக் கென்றும்
மதிப்புண்டு, நல்ல
உழைப்புக் கென்றும்
விளைவுண்டு!
திண்மைக் கென்றும்
துணிவுண்டு, மனத்
தெளிவுக் கன்பின்
கனிவுண்டு!

பொறுமைக் கென்றும்
வழியுண்டு, உளப்
பொறாமைக் கென்றும்
நலிவுண்டு!
வெறுமைக் கென்றும்
இழிவுண்டு!, நல்ல
விளைவுக் கென்றும்
புகழுண்டு!

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/179&oldid=1852059" இலிருந்து மீள்விக்கப்பட்டது