உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 6/027

விக்கிமூலம் இலிருந்து

24

வளைத்தாய்; வளைத்தேன்!


வில்வளைத்தாய்; பின்னுன்
விழிவளைத்தாய்! அன்பென்னும்
சொல்வளைத்தாய்; இன்பத்
தொகைவளைத்தாய்!, யானுமென்
கைவளைத்தேன்; மின்னல்
இடைவளைத்தேன்; கைக்குளுன்றன்
மெய்வளைத்தேன்; தேன்சுவைத்தேன் மேல்!

-1954

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_6/027&oldid=1854076" இலிருந்து மீள்விக்கப்பட்டது