உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 6/030

விக்கிமூலம் இலிருந்து

27

நாணமென்ன?


நானிருக்க என தாசைக்கு துணை நீயிருக்க
நமைச் சுற்றிலும் சோலை யிருக்க
நட்ட நடுவினில் நீயிருக்க - இன்னும்
நாணமென்ன உனக்கானதென்ன - இளம்
நல்லிடையினை வந்து ஈந்திடடி
தேனிருக்கும் மலர் வாயிருக்கும் மனம் உள்ளிருக்கும்
தின்றிடத் தீராப் பசியிருக்கும் - இரு
குன்றெனத் தோள்களி ரண்டிருக்கும் - இனித்
தேவையென்ன உனக் கானதென்ன - இசைத்
தென்றலென வந் திணைந்திடடி!

வானிருக்க நமைச் சுற்றிலும் வல்லிருள் போர்த்திருக்க
வட்டநில வெழில் தானிருக்க - காதல்
வாட்டிடும் எண்ணம் நமக்கிருக்க - இன்னும்
வெட்கமென்ன உனக் கானதென்ன என்றன்
பக்கலில் வந்தெனைத் தொத்திடடி
கானிருக்கும் மலர் வாறியிறைக்கும் மணமிருக்கும் குளிர்
காற்றடிக்கும் படி ஊற்றிருக்கும் அதை
மாற்றிடக் காதற் கனப்பிருக்கும் - நிற்கத்
தயக்கமேன் உனக் கான தென்ன இளம்
ஆரணங்கே யிதழ் மாந்திடடி!

-1954 (?)

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_6/030&oldid=1854079" இலிருந்து மீள்விக்கப்பட்டது