உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/009

விக்கிமூலம் இலிருந்து

6  மூச்சும் பேச்சும்!

இன்பத் தமிழ்மொழிக் கென்றும்
என் மூச்சும்,
இனிய தமிழ்நாட்டைப் பற்றி
என் பேச்சும்,
அன்பின் பிணைப்பினுக் கென்றன்
கை வீச்சும்,
அடங்காமல் என்றும்இத் தரையில்
நின் றோச்சும்!

-1952

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/009&oldid=1856066" இலிருந்து மீள்விக்கப்பட்டது