உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/021

விக்கிமூலம் இலிருந்து

18

திறந்திருக்கும்!

திறந்திருக்கும், மற்றோரின்
துயர்காண, விழிகள்!
தீராத வெறுப்புற்றோர்க்
கின்மொழிகள் கூறத்
திறந்திருக்கும் என்றன்வாய்!
தெளிவான புலமைத்
திறமுடையார், அறமுடையார்
கூறுமொழி கேட்கத்
திறந்திருக்கும் இருசெவிகள்!
தேடிவரு வோர்க்குத்
திறந்திருக்கும் எனதில்லம்!
திறந்திருக்கும் படையல்!
சிறந்திருக்கும் உள்ளங்கட்
கெங்கும், எக்காலும்
செறிவன்பைச் செலுத்துவதற்குத்
திறந்திருக்கும் நெஞ்சே!

-1965

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/021&oldid=1856159" இலிருந்து மீள்விக்கப்பட்டது