உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/078

விக்கிமூலம் இலிருந்து

74

பன்னாடைப் புலவர்!

இலக்கணத்துப் புலியென்பார்; இலக்கியத்துத்
தூணென்பார்; இறுமாப் புற்றுத்
துலக்கமிலா வெற்றறிவால் பிறர்தம்முன்
துகளென்பார்; தொண்டு பேணார்!
விலக்கவிலாச் சூழ்நிலையால் ஒரோவொருகால்
வினைமுடிப்பின் வியப்பார் தம்மை!
கலக்கலுறும் பன்னாடைப் புலவரிவர்;
உண்மையர்க்குக் காற்கீழ்ப் புல்லே!

-1966

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/078&oldid=1858040" இலிருந்து மீள்விக்கப்பட்டது