உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/137

விக்கிமூலம் இலிருந்து

132

பொங்கல் வாழ்த்து!


தங்கக் கதிர் முற்றித் தாழ்ந்தபின் போயதனைப்
பொங்குங் களிப்பிற்பொன் நெல்லாக்கிக் - சங்கொலிகை
மங்கையர் நல்லுலக்கை மாற்றிப்பின் புத்தரிசிப்
பொங்கியராய்ப் பொங்கிடுவார் நெஞ்சு!

தூய்மைப் புதுப்பானை தன்னில் அறிவென்னும்
தூய்மைப்பால் ஊற்றியுடன்
வள்ளுவர்சொல் - வாய்மைப்பால்
வார்த்தன்பும் சேர்த்து வகைசெய்து நற்பண்பைச்
சேர்த்துலகு பொங்கிடுக நன்கு!

-1954

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/137&oldid=1858194" இலிருந்து மீள்விக்கப்பட்டது