உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/177

விக்கிமூலம் இலிருந்து

170

‘பாவியக் கொத்து’ நூலுக்கு படையல்


பெற்றீர்; மகிழ்ந்தீர்; பெயரிட்டீர்; பீடுதமிழ்
கற்று மகிழநறுங் கல்விதந்தீர்; வற்றாத
அன்புமிகக் காட்டினீர்; அன்றன்றும் பாராட்டி
என்பும் நெகிழ எனைவளர்த்தீர்; பின்பு தமிழ்த்
தொண்டுசெயக் கண்டுந் துணைநின்றீர்; தூயவுளங்
கொண்ட துரைசாமி, குஞ்சம்மாள் உங்கட்கே
பூப்படையல் வாடிவிடும்; பொன்படையல் மங்குமென்று
பாப்படையல் செய்தேன் பணிந்து!

-1962

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/177&oldid=1858371" இலிருந்து மீள்விக்கப்பட்டது