கனிச்சாறு 8/012
11. பாவேந்தர் விழாப் பாட்டரங்கம்
(தி.பி. 2008 விடை 2 (15.5.77) அன்று பகுத்தறிவாளர்கள் சார்பில் வேலூர்
நகர மன்ற அரங்கில் நடைபெற்ற பாவேந்தர் பிறந்த நாள் விழாப்
பாட்டரங்கத்தின் தலைமையுரை)
முன்னுரை:
பேரன்பு மிக்கவரே! பெரியோரே! எம்மைப்
பெற்றதமிழ்த் தாய்க்குலமே! இளைஞர்களே! வணக்கம்
சேரனொடு சோழனும்நற் பாண்டியனும் சேர்த்துச்
செந்தமிழை வளர்த்தகதை பழங்கதையாய்ப் போக,
வீரமிலா தன்புமிலா தார்வமும்இல் லாது
வீண்பகட்டுக் காரர்களாய் நாம்வாழும் போதில்
‘யாரவன்காண் எந்தமிழைப் பழித்தவன்’என் றொருவன்
இடிக்குரலில் வினாவெழுப்பி எழுகளிறாய் வந்தான்!
இராவணனைச் சாய்த்தஇனம் - எந்தமிழ்மா வீரன்
இரணியனை ஒழித்தகுலம் - ஏற்றமிகு நூலால்
பராவியநம் முன்னோர்கள் வளர்த்திமைபோல் காத்த
பசுந்தமிழைத் தாழ்த்தியதோர் பழிவடவக் கூட்டம்
விராவியநம் பெருமை யெலாம் அடிவெட்டி வீழ்த்த
வீணர்குலம் - நம்நாட்டை வளைத்தழித்த பின்னைத்
திராவிடர்நம் திருநாட்டை மீட்பதற்கிங் கொருவன்
தெள்ளுதமிழ்ப் பாப்பாடி உயிர்த்தெழுந்து வந்தான்!
இன்னலிலே நாம்துயின்ற இழிவுநிலை கண்டே
‘எழுந்திடுக தமிழினமே தமிழினமே’ என்று
மின்னலிலே உயிர்கிளர்ந்து மேனியெல்லாம் பாயும்
மெட்டெடுத்தே உளம்புதுக்கும் உயிர்ப்பாட்டைப்பாடிக்
கன்னலிலே தமிழ்பிசைந்து காதினிக்கக் கூவிக்
கருத்தூட்டி உணர்வூட்டித் தமிழ்மறமும் ஊட்டித்
தென்னவரின் சூம்பிவிட்ட தோள்களிலே வீரம்
தெறித்தொளிரச் செய்யவொரு தீம்புலவன் வந்தான்!
பாழெடுத்த சொற்களிலே பைந்தமிழைக் கொல்லும்
பச்சைவெறிப் பாடல்களைப் பாடும்நரிக் கூட்டம்
காழெடுத்த ஓசையிலே காதறுந்து நின்ற
காலத்தில் - நேரத்தில் - ஈங்கொருவன் தோன்றிச்
சீழெடுத்த வரலாற்றைப் புதுப்பிக்க எண்ணிச்
செந்தமிழிற் சொல்லெடுத்துத் தேனினிமை சேர்த்தே
யாழெடுத்துப் பாட்டிசைத்தான் அவன்புகழைப் பாட
யாப்பொன்று போதாது; பாத்தோப்பே வேண்டும்!
பூவேந்தி மணியேந்திப் பொலிவேந்தி இளமை
பூரிக்கும் மார்பேந்திக் கிளிமொழியும் தோற்கும்
நாவேந்தி இளஎகின நடையேந்திக் கலையின்
நலனேந்தி நச்சரவம் பெண்களின்பேர் ஏந்தி
மூவேந்தைச் சாய்த்(து)அவர்பால் ஆரியத்தை ஊன்றி
முன்னிருந்த தமிழ்க்குலத்தின் சீர்சாய்த்த பின்னைப்
பாவேந்தாய் அக்குலத்தைக் காத்திடற்கு வந்தான்!
‘பாரதிதா சன்’ அவன்பேர்! பாவுலக வேந்தன்!
ஆரியர்பால் ஆங்கிலர்பால் வேற்றினத்தார் பலர்பால்
அழகுதமிழ் சிக்கியதன் சொல்திரிந்து பொருளும்
பூரியர்தம் வடமொழியால் உட்சிதைந்து பலவாய்ப்
புல்லுருவம் கொண்டுநமின் உள்ளுணர்வும் போக்கி
நேரியலா மறைமுகமாய் இனமழியும் போதில்,
நெட்டுயிர்த்துத் தமிழரெலாம் தத்தளிக்கும் நாளில்
சீரியசெம் பாவிசைத்தே இனம்புதுக்க வந்தான்!
செந்தமிழ்பா ரதிதாசப் பாவேந்தன் என்பான்
‘தமிழியக்கம்’ தொடங்கிவைத்தான்! செயல்முறைகள் தந்தான்!
தப்பறைகள் கிழித்தெறிந்தான்; தமிழ்முரசும் ஓச்சி!
அமிழ்தூற்றாய்ப் பாப்பெருக்கி ‘அழகின்சிரிப்’ பீந்தான்!
அழியாநல் இலக்கியமாம் ‘குடும்பவிளக்’ கென்னும்
கமழ்தரும்இல் லறநூலைக் கற்கண்டில் தோய்த்துக்
கசிகின்ற தீந்தமிழால் நாம்சுவைக்கத் தந்தான்!
உமிழ்கின்ற கொச்சைநடைப் பாவலர்தம் வாய்மேல்
உலக்கையடி தந்துமனம் கலக்குறவே வாழ்ந்தான்!
‘பாண்டியனின் பரிசீ’ந்தான்! 'கழைக்கூத்தி காதல்’
‘பாத்தொகுப்பு’, ‘நாடகங்கள்’, எதிர்பாரா முத்தம்’
மூண்டதமிழ் கொழித்துவரும் ‘இசையமுத’ நூல்கள்!
மொய்க்கும் ‘இளை ஞர்விரும்பும் ‘இலக்கியங்கள்’, ‘சேர
தாண்டவமும்’ ‘நற்காதல் நினைவுகளோ’ ‘டமைதி’
‘நல்லதீர்ப்’ பெனும்நூலோ டின்‘குறிஞ்சித் திட்டு’
கீண்டெழுந்த ‘சௌமியன்’ ‘கண் ணகிபுரட்சிக் காப்பியம்'
கெழு ‘மணிமே கலைவெண்பா’ எனும்பலநூல் தந்தான்!
தாயின்மேல் ஆணையிட்டான்! தந்தையின்மேல் ஆணை.
தமிழகமேல் ஆணையிட்டான் செந்தமிழைக் காக்க!
தூயதமிழ் வளர்த்திடுவீர் தோழரீர்என் றிசைத்தான்!
தொல்தமிழர் நாடியெல்லாம் நரம்பெல்லாம் மீட்டி
ஏயநறுந் தமிழுணர்வை ஓடவிட்டான்! தமிழை
‘இகழ்ந்தவனைத் தாய்தடுத்தாலும் விடே’னென் றார்த்தான்!
நாயினுங்கீ ழாய்த்தமிழர் நலிவதுகண் டுள்ளம்
நைந்துருகி ‘உடல்தருவேன் உயிர்தருவேன்’ என்றான்!
வெண்ணிலவும் வானும்போல் வீரனும்வா ளும்போல்
விரிவண்ணப் பூவும்அதன் மணமும்போல் யாழும்
பண்ணிவரும் இசையும்போல், கண்ணும்ஒளி யும்போல்
பைந்தமிழும் தானும்எனப் பண்ணிசைத்துப் பாடி
எண்ணிலவர் உணர்வுளத்தில் செந்தமிழ்த்தீ மூட்டி
எரிகின்ற நெஞ்சின்மேல் - செந்தமிழ்மேல் ஆணை
பண்ணியினப் புரட்சிக்கு நெய்யூற்றி விட்டான்!
பாவேந்தன் பாரதிதா சன்புரட்சி வேந்தன்!
மூவேந்தர் மனத்தொட்டில் துயின்றெழுந்தே அன்னார்
முடிமீது காலுதைத்து மடியில்விளை யாடி
நாவேந்தும் முக்கழகப் புலவர்கைத் தவழ்ந்து
நம்காலில் நசுக்குண்டு குற்றுயிராய்க் கிடந்தும்
சாவேந்தா நந்தமிழ்த்தாய் தனைப்பாடிப் பாடிச்
சலிப்படையாப் புலவன்பா ரதிதாசன் என்னும்
பாவேந்தன் திருவுளத்தின் கருத்துநலன் யாவும்
பாவலர்க்கோ உணர்வூற்று! கருத்துமழை! செந்தீ!
இயற்கையினில் அவன்தொட்ட இடமெல்லாம் சிரிக்கும்!
இனப்பேச்சில் அவன்மூச்சின் துடிதுடிப்பும் கேட்கும்!
மயற்கையிலாச் சீர்த்திருத்தம் அவன்பாட்டில் மணக்கும்!
மருண்டிருண்ட நாட்டில்அவன் பாவிளக்கை ஏற்றும்!
முயற்கையைத் தீண்டுதற்குள் முகம்வெயர்த்துக் கொட்டும்
மோழையனின் கோழைமனம் அவன்பாட்டைக் கேட்டால்
பெயற்கைமழை மேகமெனும் பெருங்களிற்றின் தலையைப்
பெயர்த்தெடுக்கும் எண்ணம்வரும் வீரம்வரும் என்பேன்!
அவன்பாட்டில் தமிழ்பொழிந்த அமிழ்தமழை போல்
அன்றிருந்திந் நாள்வரைக்கும் அணியணியாய் நிற்கும்
எவன்பாட்டில் தமிழ்பொழிய நாம்கண்டோம்? கேட்டோம்
இதுவரைக்கும் இருந்ததில்லை; இனிமேலும் இல்லை!
சிவன்முதலாய் வீற்றிருந்த கழகமெனச் சொன்னார்!
செந்தமிழ்மேல் பாவேந்தன் உயிர்கிடந்து தூங்கி
உவந்துநிறை வுற்றதுபோல் ஒருபுலவர் வாழ்வும்
ஓ! ஓ! ஓ! எனவியந்து போற்றும்படி இல்லை!
‘கரும்புதந்த தீஞ்சாறே, கனிதருவின் சுளையே
கவின்முல்லை வெண்ணகையே’ எனும்பாட்டில் தமிழை
விரும்பியவன் ‘அன்பே,அன் பே!யன்பே!’ என்று
விளித்திடுங்கால், உயிருடலம் அனைத்துந்தமி ழாக
அரும்பிமலர்ந் துலகமெலாம் அளாவியிருப் பதுபோல்
அரியவுணர் வொன்றுநம்மின் உள்ளத்தில் தோன்றும்!
பெரும்புதுமை இதுவன்றோ? எப்புலவன் தமிழைப்
பேச்சுக்கும் மூச்சுக்கும் ‘அன்பே’என் றழைத்தான்?
இவ்வாறாய்ப் பாவேந்தன் கருத்துநலன் எல்லாம்
எடுத்தெடுத்து நீங்களெல்லாம் சுவைக்கும்படி ஈவர்,
இவ்வாறு தமிழ்ப் புலவர் - இன்றமிழ்ப்பா வாணர்;
இருந்துநலங் கேட்டிடவும் யான்வேண்டு கின்றேன்!
ஒவ்வாத பாடல்பல கேட்டிருப்பீர்! உங்கள்
உள்ளமெல்லாம் நாறடிக்கும் அப்புலவர் கூட்டம்!
அவ்வாறாய் இப்புலவோர் பாடஅறி யார்கள்!
அருந்தமிழ்கே ஒளிசேர்க்கும் புலவரிவர் காண்பீர்!
பின்னுரை:
பாவேந்தர் கருத்துநலன் பாப்புலவர் சொன்னார்!
பழகுதமிழ்ச் சொல்லருமை கேட்டிருந்தோம் நாமும்!
பூவேந்தும் நறுந்தேனைச் சுவைத்திடுந்தே னீக்கள்
போலன்றோ நாம்சுவைத்தோம்! புலவரெலாம் வாழ்க!’
சாவேந்திச் சென்றதெனப் பாவேந்தைச் சொன்னார்!
சரியில்லை என்போம்நாம்! செந்தமிழ்த்தீம் புலவர்
நாவேந்தி வாழ்கின்றார் பாவேந்தர்! உண்மை!
நாடெல்லாம் வீடெல்லாம் அவர் வாழ்கின் றாரே!
செந்தமிழ்க்கே அவர்பிறந்தார்; செந்தமிழ்க்கே வாழ்ந்தார்;
செந்தமிழ்க்கே மூச்சுயிர்த்தார், செந்தமிழ்க்கே பேசிச்
செந்தமிழ்க்கே அவருழைத்தார்; செந்தமிழாய் நின்றார்;
செந்தமிழ்க்கே ஒளியேற்றிச் செந்தமிழ்க்கே மாய்ந்தார்!
செந்தமிழ்க்கே பாவேந்தால் செழும்பெருமை அன்றோ!
செந்தமிழ்க்கே நாமிருப்போம் என்னில்அவர் கொடையே!
செந்தமிழ்க்கே வாழ்ந்தவரும் செத்தொழிவ துண்டோ?
செந்தமிழும் வாழும்வரை அவர்தமிழும் வாழும்!
1. இயற்கை
இருக்கின்ற பாவலர்கள் இருகோடி என்றால்
இயற்கைப்பா வலர்அவருள் இருபதுபேர் இருப்பர்!
கருக்குழியில் ஒளியேறி உணர்வேறித் திருவில்
கற்பனையாம் பொலிவேறிப் பாட்டுணர்வும் ஏறி,
உருக்கொண்டு தாய்மடிமேல் வீழ்ந்தபின்னே அவளின்
ஒளிமார்புக் காம்புவழித் தமிழேறிப் பாய்ந்தால்,
தெருக்கடையில் இறங்குகையில் பாட்டுவரும் தெளிவீர்!
தெம்மாங்கு செந்நாவில் எழுந்துவிளை யாடும்!
அன்னவரைத் தாம்இயற்கைப் பாவலர்கள் என்போம்!
அப்படித்தான் ‘கனகசுப்பு ரத்தினம்’ பாவேந்தன்!
இன்னவரைப் போல் இயற்கை இயற்றிவைத்த பேருள்
இவரவரின் ஆசானுக் காசான்என் றுரைப்போம்!
முன்னவரைப் பாரதியைக் குறைசொல்ல வில்லை!
மூச்சிலிவர் தமிழுயிர்த்தால் பேச்சிலவர் என்போம்!
என்னபடி பார்த்தாலும் பாரதிபாட் டுக்கே
ஏழுபடி மேலிருக்கும் பாவேந்தன் பாட்டு!
நடுநிலையில் லாமலிதை நாம்சொல்ல வில்லை!
நாமவரின் வழிவந்த நன்றியுரை இல்லை!
கெடுநிலையில் பார்ப்பனர்கள் பாவேந்தர் பாட்டைக்
கீழ்வைத்துப் பேசுகின்றார்; நாமவர்க்குச் சொல்வோம்!
தொடுநிலையில் பாட்டுணர்வில் தோய்கின்ற நிலையில்
தூய்தமிழை மனங்கொண்டு பாடுகின்ற நிலையில்
நெடுநிலையில் மலைப்புனலாய்ப் பொழிந்திருக்கும் நிலையில்
நிலைத்திருக்கும் நிலையினிலே பாவேந்தன் வெல்வான்!
தன்விளக்கம் பாடுகின்றான் பாவேந்தன் இங்கே!
தமிழ்ப்புலவன் செம்மாப்பைக் கேளுங்களிப் பாட்டில்!
‘சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்
இன்விளக்கம்! இதுவாகும் ‘இயற்கைதந்த உயிர்நான்’
என்றுரைக்க வில்லையவன்; புனைந்தஉயிர் என்றான்!
என்விளக்கம்! உணர்ந்தீரா? இருக்கும் உயிர் யாவும்
இயற்கைத்தாய் செய்தெடுத்து வீசிவிட்ட உயிராம்!
என்வியப்பு! பாவேந்தன் உயிரைமட்டும் நன்றாய்
எழில்சீர்த்தி அறம்செழுமை வீரத்தொடு புனைந்தாள்!
பாவேந்தன் சொல்லுகின்றான்; யாரிவன்போல் சொன்னார்!
பாருங்கள் மேன்மேலும் அவன்கையின் வண்ணம்!
நாவேந்திப் பிறர்சொன்னால் உணர்வேந்திச் சொல்வான்!
நல்லதமிழ் பிறர்சொன்னால் உயிர்த்தமிழைச் சொல்வான்!
காவேந்திக் கொண்டிருக்கும் பூவேந்தித் தேனைக்
களிமதர்ப்பக் குடித்திசைக்கும் தேனீப்போல் தமிழன்
ஈவேந்தித் தருகின்றான் செந்தமிழாய்! பாவாய்!
இயற்கையினை இவனைப்போல் படம்பிடித்த தெவரே?
‘கடல்நீரும் நீலவானும் கைகோக்கும்’ என்றே
கற்பனைக்கும் கற்பனையாய் யார்சொன்னார்! கேட்பீர்:
‘கடல்நீரும் நீல வானும்
கைகோக்கும்! அதற்கி தற்கும்
இடையிலே கிடக்கும் வெள்ளம்!
எழில்வீணை! அவ்வீ ணைமேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
நரம்பினை அசைத்தின் பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி
உடலிலவன் நறுந்தென்றல் உணர்வுபெற்றுப் பேசும்
ஒருபாட்டைக் காட்டுகிறேன் கேளுங்கள் நன்றாய்!
“களிச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்
துளிச்சிறு மலர்இ தழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளையா டிப்போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்
அடல்மிகுந்த கடுங்காட்டை அவன்காட்டு கின்றான்!
ஆனைஒன்றே இளமரத்தை முறித்திடுமாம் - பாரீர்!
“ஆனைஒன் றிளம ரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்
புலிஒன்று தோன்றும்; பாம்பின்
பானைவாய் திறக்கக் கண்டு
யாவுமே பறக்கும்! கன்றோ
மானைக்கா ணாது நிற்கும்!
தொடவில்லை; தொட்டாலே விடவில்லை என்பார்;
தொடாததெதும் பாவேந்த னிடமில்லை என்பேன்!
கூரையின்மேல் குரங்கூசல் காட்டுகின்றான் காணீர்!
குறத்தியர்கள் ஒளியழகைப் பேசுவதைக் கேளீர்!!
“செருந்தி, ஆச்சா, இலந்தை
தேக்கீந்து கொன்றை யெல்லாம்
பெருங்காட்டின் கூரை! அந்தப்
பெருங்கூரை மேலே நீண்ட
ஒருமூங்கில்; இருகு ரங்கு
கண்டேன் பொன்னூசல் ஆடல்!”
‘குறத்தியர் கவண்எ டுத்துக்
குறிபார்க்கும் விழி,நீ லப்பூ!
எறியும்கை செங்காந் தட்பூ
நீரையவன் காட்டுகின்றான்! அந்நீரில் மேயும்
நெளிவை அவன் காட்டுகின்றான்! அருவியதும் பாரீர்!
‘பெருஞ்சிங்கம் அறைய வீழும்
யானைபோல் பெருகிப் பாய்ந்து,
வரும் வெள்ளம்!’
“இருகரை ததும்பும் வெள்ள
நெளிவினில் எறியும் தங்கச்
சரிவுகள்! நுரையோ முத்துத்
தடுக்குகள்! சுழல்மீன் கொத்தி
மரகத வீச்சு! நீரில்
மிதக்கின்ற மரங்க ளின்மேல்
ஒருநாரை வெண்டா ழம்பூ!"
அருவிகள் வயிரத் தொங்கல்!
அடர்கொடி பச்சைப் பட்டே!
குருவிகள் தங்கக் கட்டி!
நீரினுள்ளே கதிர்நுழைந்து நெளிவதைச்சொல் கின்றான்!
நீங்களுந்தாம் பார்த்திருப்பீர்! நினைவுவந்த துண்டா?
‘பின்னிய ஆடை காற்றில்
பெயர்ந்தாடி அசைவ தைப்போல்
நன்னீரில் கதிர்க லந்து
வேரினுள்ளே தமிழ்பாய்ந்தால், தமிழெருவைப் போட்டால்
விளைவெல்லாம் தமிழ்ப்பாதான்! வேறென்ன தோன்றும்?
தோற்றுகதிர் கடல்மிசையில் எழுந்ததுவும் தங்கத்
தூறல்வந்து விழுந்ததென்பான்! ஒளிவெளியாம் என்பான்!
‘மேற்றிசையில் அனற்காட்டில் செம்பரிதி வீழ்ந்து
வெந்துநீ றாகாமல் இருத்தல்வியப்’ பென்பான்!
ஏற்றுகின்ற உவமையெல்லாம் இயற்கையினைக் காண்பான்!
எடுத்துக்காட் டங்கொன்றும் இங்கொன்று மாக!
போற்றுங்கள் கேட்டுவிட்டுச் சிறந்திருந்தால்! அன்றேல்
புலவன்எவன், மற்றவனைக் காட்டிவிட்டுப் போங்கள்!
“உரித்தநற் றாழம் பூவின்
நறும்பொடி உதிர்ந்த தைப்போல், பெருமணல்’
"முதலைகள் கிடப்பதைப் போல்
சின்னதும் பெரிதுமான வெடிப்புகள்!”
‘கீரியின் உடல்வண் ணம்போல்
மணல் மெத்தை’
‘காலுக்குப் புன்னையிலை போலும் செருப்பு’
‘வெண்தா மரையில் விளையாடும் வண்டுபோல்
கண்தான் பெயர,நீ என்ன கருதுகின்றாய்?” தாலாட்டு
‘புன்னை மலர்க்காம்பு போன்றதோர் சிற்றடிப் புறா!
கிளிக் கழுத்தின் பொன்வரிபோல் அரும்பும் மீசை!’
‘பொரியலோ பூனைக்கண் போல் பொலிந்திடும்’
‘கறந்தபால் நிறந்திகழ் கவின்உடை பூண்ட
மருத்து வச்சி’
‘காட்டுமுயற் காதிலையும் களியானைத் துதிக்கை
அடிமரமும் வானில்
நீட்டுகிளை கொய்யா?’
‘ஓடுபிளந்தசெம் மாதுளைபோல் உதடு’
‘காதோரத்து வண்டுவிழி’
‘ஓடை மலர்முகம்’
(முழுப்பாட்டு வேண்டுமா?)
“ஓடு பிறந்தசெம் மாதுளை போல் உதட்டில்
உள்ளம் விளைத்தநகை மின்னவும் - கா
தோரத்து வண்டுவிழி ஓடை மலர்முகத்தில்
ஓடிஎன் உளங்கவர்ந்து தின்னவும்
காடு சிலிர்க்கும்படி மேலாடு முன்தானை
காற்றோடு காற்றாகப் பின்னவும்
காதற் கரும்பொன்று காலிற் சிலம்பணிந்து
கடிதில் இடைதுவள ஆடியதோ என்னவும்
ஆடற்கலைக் கழகு தேடப் பிறந்தவள்
ஆடாத பொற்பாவை ஆடவந்தாள்!”
“எளிய நண்டின் கட்சிறிய களாக்கனி”
“குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீறல்கள்போல்’
துத்திக்காய் போலச் சுடர்முகச் சுருக்கம்’
“மீன்வலை சேந்தும் கயிற்றை வேய்ந்த வளையம்போல்
(தேன்குழல்
“தாழையின் முள்போல் தகுசீ ரகச்சம்பா!”
“விழுந்துபடும் செங்கதிரை வேல்துளைத்த தைப்போல்
உழுந்து வடை”
“ஆனை அடிபோல் அதிரசம்”
“கொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல்...பிட்டு”
“எருமைமுது கென்புபோல் பண்ணிய
தங்கமணிக் கோவை”
“முல்லையரும்பாம் குருவியின் மூக்கு!
மல்லி பிளந்தது போன்றததன் கண்!”
இப்படியாய் உவமைநலம் எடுத்தெடுத்துச் சொல்வான்!
எல்லாமும் இயற்கையிலே விளைந்துவந்த ஆக்கம்!
தப்படியாய் அடித்துவிட்டுத் தம்மடிக்கே ஒப்பத்
தமுக்கடிக்கக் காசுகொடுத் தோரிருவர் வைக்கும்,
செப்படியாட் டப்புலவன் பாவேந்தன் அல்லன்!
சீர்த்தி, அறம், செழுமையொடும் இயற்கைபுனை மேலோன்!
மப்படிக்கே மயிலாடல் உண்மையதாம் என்றால்,
மனங்களிக்கப் பாவேந்தன் பாடியதும் உண்மை!
ஒன்றுரைப்பேன் நீங்களதை உணர்ந்துகொளல் வேண்டும்!
உலகமெலாம் அலைந்தாலும் இப்புதுமை காணீர்!
துன்றிருளும் தூங்குகின்ற இடங்காட்டு வீரா?
தோதுபல ஆய்ந்தாலும் தோற்றுத்தான் போவீர்!
இன்றன்றாம்; இனியன்றாம்; எந்நாளும் இதுபோல்
எப்புலவ னும்காட்டான் இயற்கைசெயும் கூத்தை!
ஒன்றன்மேல் ஒன்றடுக்குந் தாமைரைப்பூ விதழ்க்குள்
உறங்குகின்ற ருளை எவன் காட்டிவிட்டுப் போனான்?
பாடலினைக் கேளுங்கள்; ‘அடுக்கிதழ்த்தா மரைப்பூ
இதழ்தோறும் அடிப்புறத்தில் படுத்திருப்பாய் நீதான்”
ஓடவிழ்க்க வெளிப்படுமோர் ஒளிமுத்தம் போல
இயற்கையின துண்மையெலாம் கண்டுகண்டே உரைத்தான்!
தேடரிதாம் சொற்களெலாம் பாவேந்தன் உள்ளம்
தேடிவந்து குடிபுகுந்து தேவைவரும் போதில்
மூடரிதாம் வாயில்வழி தூவல்வழி யாக
மூண்டுவரும் பாட்டாகப் பாரதிதா சற்கே!
2. இனம்
இயற்கையினை ஒருவாறாய் ஈங்கெடுத்துச் சொன்னேன்!
இனம்பற்றிக் கூறுமவன் கருத்துநலன் கேட்பீர்!
செயற்கையிலாப் புலவனவன்! செந்தமிழ்த்தேன் ஊற்று!
செப்புகின்றான் கேளுங்கள்! எண்ணுங்கள் இதனை!
“தமிழர்நாம் என்றால் நம்பால்
தமிழ்உண்டா? ஒழுக்கம் உண்டா?
அமைவுறச் சிறிது முண்டா
அன்றைய மறத்த னந்தான்?
கமழ்ந்திடல் உண்டா கல்வி?
கலைநலம் உண்டா? நெல்லின்
உமிமுனை அளவி லேனும்
மயற்கையுள்ள தமிழினத்தின் முன்வந்து நின்று
மற்றொன்றைக் கேட்கின்றான்! சொல்லுங்கள் பார்ப்போம்.
“வெள்ளையன் ஆட்சி தொலைத்தோம்! - இனி
வேற்றுமை யுற்றுக் கிடந்தால்
எள்ளி நகைபுரி யாரோ? - நமை
இப்பெரு வையத்தில் உள்ளோர்?
முயற்கையை யானைக்கை போல்மிகவே நீட்ட
முயல்கின்றோம் முயல்கின்றோம்? தோற்றுப்போ கின்றோம்.
அதைக்கண்டு வருந்துகின்றான் பாவேந்தன் இங்கே!
அப்பாட்டில் அவன் ஏக்கம் கனவெல்லாம் தோன்றும்!
“சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?
சமயம் சாதி தவிர்வ தெந்நாள்?”
“வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொ ணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளுநாள் எந்நாள்? உள்ளம்
இதைக்கண்டு கொண்டோம் நாம்? என்செய்தோம்? இங்கே
ஏற்றத்தாழ் வொழிந்ததுவா? சாதிகள் மாய்ந் தனவா?
கதைக்கின்றோம் பாடுகின்றோம்! பாவேந்தன் சொன்ன
கருத்துக்கும் மதிப்பில்லை! விழாவெடுப்போம்! அதனால்
புதைக்கின்றோம் அவன்பெருமை! புகழ்ச்சிவெறுஞ் சொல்லா?
புரட்சிசொன்னான்! மருட்சியுற்றோம்! இருட்காட்டில் வாழ்வோம்!
‘இருட்டறையில் உள்ளதடா உலகமெலாம் சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றான்’ என்றான்!
திருட்டுக்கூட் டம்தமிழர் கூட்டமென்று சொல்வேன்.
தில்லுமல்லுக் கூட்டந்தான்; இல்லையென்று சொன்னால்
குருட்டடியாய்ப் பாவேந்தன்பாட்டையெல்லாம் கூட்டங்
கூட்டந்தோ றும்சொல்லிப் பெரும்புலவர் போல
மருட்டுவமா மக்களைநாம்? சொன்னவற்றுள் ஒன்றை
மதிப்பிற்கே னும்செய்து பெருமைபெற் றோமா?
இனம்பாடி இனம்பாடி இனம்விழிக்கும் என்றே
எதிர்பார்த்தான் எதிர்பார்த்தான்! இனும்விடியவில்லை!
மனம்போன படிவாழ்ந்து மாக்களினும் கேடாய்
மண்ணுலகில் தமிழினந்தான் பின்னடைந்த தென்று
பெனம்பெரிய பெருமையினை நாம்வாங்கிக் கொண்டோம்!
பேசுகின்றோம்! வீசுகின்றோம்! பெருத்தநடை போட்டோம்!
இனும்திருந்த வில்லையெனில் என்றுந்திருந் தோம்நாம்!
‘இன்னலிலே துயில்கின்றோம்’ பாவேந்தன் சொல்வான்!
“இன்னலிலே தமிழ் நாட்டினிலே உள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்!
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கி,என்
இன்பத்தில் தூங்கிடலாம்! ‘இன்னல்களுக் கிடையில்
என்தமிழ் மக்கள்துயில் கின்றனரே’ என்றான்!
துன்பத்தில் தூங்குபவன் நோயாளி, பேதை!
‘துயின்றிருந்தார் என்தமிழ் மக்க’ளெனும் கூற்றில்
என்புதுமை காட்டுகின்றான்? தெரிந்தீரா? மற்ற
இனமக்கள் எல்லாரும் விழித்திருக்கின் றாராம்!
‘என்மக்கள் மட்டும்துயில் கின்றார்’என் கின்றான்!
இதனாலே கழிவிரக்கம் கொள்கின்றான் நம்மேல்!
நம்மினத்தை அன்னவன்போல் விழிக்கவைக்கும் முயற்சி
நாளைவரை எப்புலவன் தமிழகத்தில் செய்தான்!
வெம்மனத்தைக் கொண்டுள்ளோம்! வீண்வாழ்க்கை வாழ்வோம்!
விடியாத மூஞ்சிகளாய்த் தூங்குகின்றோம் இன்னும்!
அம்மணமாய் நம்முன்னர் அலைந்தவர்கள் எல்லாம்
அழகழகாய் உடையுடுத்தே உலகஉலாப் போந்தார்!
கும்மிருளில் குருட்டாட்டம் போடுகின்றாேம்! ஐயோ!
‘கும்பிக்குச் சோறு’என்றால் தாயினைவிற் கின்றோம்!
3. சீர்திருத்தம்
அடுத்தபடி பாவேந்தன் சீர்திருத்தம் சொல்வான்!
அத்தனையும் நாம் கேட்டோம்; கேட்டுநடந் தோமா?
உடுத்தபடி உண்டபடி உறங்கியுறங் கியராய்
உயிர்த்துயிர்த்துச் சாகின்றோம்! உருப்படியாய் வாழோம்!
மடுத்திடுவீர் பெண்கள்நலம் பேசுகின்றான்; நாமும்
மாரடித்துப் படிக்கின்றோம்; நொண்டி நொண்டி நடப்போம்!
கொடுத்தாலும் வாங்குகிலோம்; கொண்டாலும் காக்கோம்!
குலம்பிழைக்கப் பெண்களைநாம் வாழவைப்போம், கேட்பீர்!
‘இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இலேசுவழி ஒன்றுண்டு; பெண்களைஆ டவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்!
தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா?
செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல்
அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால்
அமைதியுல குண்டாகும்!' - பாவேந்தன் சொல்வான்!
‘பெண்டாட்டி என்று பெயரடைந்த நாள்முதலே
ஒண்டொடிக்கும் சொத்தில் ஒருபாதி உண்டுரிமை!
தன்மனைவி செத்தால்தான் வேறுமணம் தான் செயலாம்!
இன்னல் மனைவிக் கிழைத்தால் கொலைக்குற்றம்’
‘ஆணுயர் வென்பதும் பெண்ணுயர் வென்பதும்
தீண்டாமை பற்றியெல்லாம் மிகத்தெளிவாய்ச் சொன்னான்!
திராவிடர்தம் இனத்தலைவர் நம்பெரியார் சொன்ன
வேண்டாமைப் பட்டியல்கள் அனைத்தையும் பாட்டாய்
ஆரியர்கள் வெலவெலக்க ஆக்கியவன் தந்தான்!
தீண்டாதார் எனுமவரும் பிறரும்ஓர் தாயின்
திருவயிற்றில் வந்தவரன் றோ?’ என்றே கேட்டான்!
ஈண்டெல்லாம் பெருச்சாளி கோயில்நுழை கையிலே
இவர்க்குமட்டும் கோயில்விலக் கேனென்றார்ப் பரித்தான்!
“நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில் அக் கோயிலிலே - கண்டும்
ஒத்தபிறப்பின ரைமறுத் தீர்உங்கள்
கோயிலின் வாயிலிலே!’
‘ஏகபரம் பொருள் என்பதை நோக்க - எல்
லாரும் உடன் பிறப்பே! - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
லே,உள்ள தோ சிறப்பே!’
‘இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்
சாதியொழிப் பதும்தமிழை வளர்ப்பதுமே நம்மோர்
செயவேண்டும் சீர்த்திருத்தம் எனத்தெளிவாய்ச் சொன்னான்.
‘சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல்மற் றொன்று!
பாதியை நாடு மறந்தால் - மற்ற
சாதியொழி யாதஒரு மக்களினந் தன்னில்
சரிநிகர்த்த வாழ்வெங்ஙன் அமைந்துவிடும் - என்றான்.
“சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?
சமயம் சாதி தவிர்தல் எந்நாள்?’
‘என்றுதான் சுகப்படுவதோ? - நம்மில்
யாவரும் சமானம் என்ற நன்னிலை யில்லை அந்தோ
ஒன்றுதான் இம் மானிடச் சாதி -இதில்
சாதியொழி யாநிலையில் குடியரசால் என்ன
சாய்த்துவிடப் போகின்றோம்? சட்டங்கள் வேண்டும்!
மீதிவகைத் திருத்தமெனப் பட்டியல்கள் சொல்வான்!
மேம்பட்ட புலவனவன் பாடுவது கேட்பீர்!
‘நாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள்
நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்!
காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே
நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி
ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே!
உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்!
கேட்டையினி விலைகொடுத்து வாங்கோமே;சாதி
‘ஒருகடவுள் உண்டென்போம்; உருவணக்கம் ஒப்போம்;
உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழிந்தால்;
திருக்கோயில் தொழிற்சாலை’ என்றவனும் சொல்வான்!
தீமைதரும் தொல்லைகளை உடன்மாற்றக் கேட்டான்.
திருமணத்தும் சீர்திருத்தம் வேண்டுமென்று சொல்லித்
‘திராவிடர்க்குப் புரட்சியான திட்ட’மொன்று தந்தான்
ஒருமணத்தை ஆதரித்தான்! மறுமணத்தை ஏற்றான்.
உயர்காதல் போற்றுதற்குத் கருத்தடையை ஏற்றான்.
‘காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம்! இதிலென்ன குற்றம்?
சாதலுக்கோ பிள்ளை? அன்றித் தவிப்பதற்கோ’ என்று
சாட்டையடி யாய்க்கேட்டான் பல்லாண்டு முன்பே!
தீதில்லாப் பொதுவுடைமை வேண்டுமெனச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்களை உலகறிய வேண்டும்!
‘புதியதோர் உலகுசெய் வோம் -கெட்ட
போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்!’
‘எல்லார்க்கும் எல்லாம் என் றிருப்ப தான
இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்!’
‘எல்லார்க்கும் தேசம்! எல்லார்க்கும் உடைமையெலாம்!
கோதில்லா நெஞ்சத்தின் உயர்கருத்தாம்! இவற்றைக்
கோணல்உல கம்ஏற்று, நிலைநிமிரல் வேண்டும்!
‘கட்டாயக் கல்வியொடு பணிவேண்டும்’ என்பான்!
‘கல்விதராக் கசடர்க்குத் தூக்குமரம்’ என்றான்!
‘திட்டமிட்டுத் தொழிலாளர் ஒன்றுபடல் வேண்டும்,
தீங்குவரும் இல்லையென்றால்’ என்றறிக்கை செய்வான்!
‘வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால்!
கூடித் தொழில் செய்யாக் குற்றத்தால் இன்றுவரை
மட்டமெனத் தமிழ்மொழியை மதிக்கின்ற செயலை
மடமையெனக் கடிந்தொதுக்கித் தமிழர்களைப் - பார்த்துத்
திட்டமிட்ட படைவேண்டும் தமிழ்காக்க என்றான்
தெருவிலுள்ள பலகைகளில் தமிழ்வேண்டும் என்றான்!
‘வாணிகர்தம் முகவரியை வரைகின்ற பலகையில் ஆங்
கிலமா வேண்டும்?
மாணுயர்ந்த செந்தமிழால் வரைக என அன்னவர்க்குச்
தனித்தமிழை வற்புறுத்தித் ‘தமிழியக்கம்’ செய்தான்!
தான்தொடக்கத் தெழுதிவிட்ட கலவைநடை போல
இனித்தாளில் எழுதிடுவ தில்லையெனச் சொன்னான்!
எம்மொழிக்கும் தமிழ்மொழியே தாய்மொழியென் றார்த்தான்!
தனித்தமிழை வற்புறுத்திப் பாவேந்தன் சொன்ன
தங்கவரிப் பாடல்களை நம்மிளைஞர் பாடிப்
பனித்தமிழை உலகமெலாம் பரப்பிடுதல் வேண்டும்!
பாவேந்தன் பாடுகின்றான் செவிமடுத்துக் கேட்பீர்!
‘தொண்டர்படை ஒன்றமைத்துத் தமிழ்எதிர்ப்போர்
தொடர்ந்தெழுதும் ஏட்டையெல்லாம்
கண்டறிந்த படிஅவற்றை மக்களெல்லாம்
‘ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக்
கற்கையிலும் எந்த நாளும்
தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின்
பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்!’
‘வடமொழியும் பிழைத்தமிழும் பெருகிவிட்டால்
வருநாளில் தமிழழியும் வடமொழிமே லோங்கும்’
‘பிறமொழிக்குத் துணைநின்றும் தமிழ்மொழியின்
பீடழிக்கத் துணைநின்றும் தமிழ்மொழியின்
சிறுமையுறு வடமொழிக்குக்
கழகங்கள் இங்கமைத்தும் தீங்கு செய்வார்’
‘நற்றமிழில், தமிழகத்தில் நல்லெண்ணம்
இல்லாத நரிக்கூட்டத்தைக்
கற்றுவைக்க அமைப்பதினும்
மொழிநிலையிற் பாவேந்தர் தமிழர்க்குச் சொன்ன
முழுக்கருத்தும் தமிழர்களின் உளத்திருத்தல் வேண்டும்!
அழிநிலையில் உள்ளதமிழ் அழியஅழி யத்தான்
ஆன்றஇனம் அழிந்துவரும் உண்மையிது காண்பீர்!
விழிநிலையில் வைத்துதமிழ் காத்துவரல் ஒன்றே
வீழ்ந்தஇனம் மீண்டுமெழ வாய்ப்புநல்கும் என்பேன்!
பழிநிலைக்கே ஆளாக வேண்டாமே தமிழர்!
பாழ்விழுந்தால் தமிழினமே படிப்படியாய் மாளும்!
4. நாடு
இனியவனும் நாடுபற்றி எடுத்துரைத்த வெல்லாம்
இங்கெடுத்துக் கூறிவிடல் எளிதிலைகாண் பெரியீர்!
‘எனையீன்ற தந்தைக்கும் தாயினுக்கும் மக்கள்
தமையீன்ற தமிழ்நாடு தனக்குமென்ற னாலே
தினையளவும் நலமேனும் கிடைத்திடுவ தென்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாளாம்’ என்றே
பனிமொழியில் சூளுரைத்துப் பால ந்தன் சொன்னான்!
பாவலருள் எவரிந்த உரைசொன்னார்? பாரீர்!
எரிகின்ற நெஞ்சின்மேல் ஆணையிட்டுச் சொன்னான்!
இனியெங்கள் ஆட்சியிந்த நாட்டிலென்றே உரைத்தான்
எரிசருகு தமிழர்களை எதிர்த்திடுவோர் என்றான்!
இன்னுமவன் நாடுபற்றிச் சொன்னமொழிகேட்பீர்!
‘தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்!
செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!’
‘ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்கு
உவப்புடன் நான் சேர்ப்பேன்’
‘செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்த தென்று
புரிகின்ற தமிழ்ப்போர்க்குப் புதுப்புரட்டுக் காரர்
புலைமனத்தால் தடையிடுவார் நாம்அஞ்சல் வேண்டாம்.
சரிகின்ற தமிழினத்தைக் காத்திடுதற் கென்றே
சாகாத உணர்வுடைய இளைஞர்க்கிவை சொல்வான்!
‘தமிழ்நிலத்தில் தமிழான பயிர்விளைச்சல் குறைவு!
தமிழ்நிலத்தில் அயல்மொழியாம் களைவிளைச்சல் மிகுதி!
தமிழ்நிலத்தில் தமிழ்க்கொள்கை எனும்விளைச்சல் குறைவு!
தமிழ்நிலத்தில் அயற்கொள்கைக் களைவிளைச்சல் மிகுதி!
‘தமிழ்நிலத்தில் தமிழ்ஒழுக்கப் பயிர்விளைச்சல் குறைவு!
தமிழ்நிலத்தில் அயலொழுக்கக் களைவிளைச்சல் மிகுதி!
தமிழர்களே களைநீக்க வேண்டாமா? உங்கள்
சமையஉளத் தாலன்றித் தமிழ்உளத்தால் சொல்க!’
‘தாய்த்திருநா டுயர்வெய்தும் நாளெந் நாளோ?
வாய்த்தசெல்வம் அத்தனையும் ஏழையர்க்கே உதவும்
வழிசெய்ய வேண்டுமெனத் தமிழரைக்கேட் கின்றான்!
நோய்த்தமிழர் நோயுள்ளம் நோய்நீக்கி - நாட்டின்
நொடிவெல்லாம் நீங்கிநலம் பெறுதலென்றோ என்று
வாய்த்தமிழில் பாடியுளம் ஏங்கித்தவித் திட்டான்!
வருங்காலக் கனவுநலம் கூறுகின்றான் கேட்பீர்!
‘என்னருமைத் தமிழ்நாட்டை எழிற்றமிழால் நுகரேனோ?
செவியில் யாண்டும்
கன்னல்நிகர் தமிழிசையைக் கேளேனோ? கண்ணெதிரில்
தன்னேரில் லாததமிழ்த் தனிமொழியாய்க் காணேனோ?
இவ்வை யத்தில்
முன்னேறும் மொழிகளிலே தமிழ்மொழியும் ஒன்றெனவே
முழங்கே னோநான்!’
5. வீரம்
வீரம்அவன் பாக்களிலே செறிந்தோடி நிற்கும்!
விளையாட்டுத் தமிழ்ப்பேச்சும் வெந்தணலாய்க் காய்ச்சும்!
ஈரம்அவன் தமிழ்ப்பாட்டில் இருந்தாலும் எதிரி
எலும்பினையும் நீறாக்கும் சொற்கள்விளை யாடும்!
பாருங்கள் வகைக்கொன்றாய்ப் பாவேந்தன் உள்ளம்
பகைமுன்னம் கனல்கக்கும் வரிகளைச்சொல் கின்றேன்!
சேருங்கள் ஒருமனமாய்! ஓருடலாய்! உயிராய்!
செந்தமிழின் பெரும்படையில் சேருங்கள் இனியே!
‘தமிழர்க்குத் தொண்டுசெயும் தமிழனுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்’.
‘இருளினை வறுமை நோயை
இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக்குன் றைநான்
ஒருவனே எதிர்ப்பேன்’
‘செழிப்போரே! இளைஞர்களே!
தென்னாட்டுச் சிங்கங்காள்!
எழுகநம் தாய்
மொழிப்போரே வேண்டுவது!
தொடக்கஞ்செய் வீர்வெல்வீர்!
மொழிப்போர் வெல்க!’
‘கடல்போலும் எழுக! கடல் முழக்கம்போல்
கழறிடுக! தமிழ்வாழ் கென்று!
கெடல் எங்கே தமிழின் நலம்? அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’
‘அரசிருந்த தமிழன்னை ஆட்சியிலே
சூழ்ச்சி செய்யும் ஆட்கள் யாரும்
எரிசருகு! தமிழரிடை எழுச்சியுறும்
தமிழார்வம் கொழுத்த தீ!தீ!’
‘சிம்புட் பறவையே சிறகை விரி!எழு!
.....................................................
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!’
‘மனிதரில் நீயும்ஓர் மனிதன்; மண்ணன்று!
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து உலகத்தை!
இதுதான் உன் வீடு’
“சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செயப் புறப்படு வெளியில்!’
‘கைவிரித்து வந்த கயவர் நம்மிடைப்
பொய்விரித்து நம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பாரெனில்
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!’
‘தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்’
‘தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே’
‘உயர்தமிழ் உயர்நடை உயர்தனி வீரம்
எப்படித்தீ எழுப்புகின்ற செழுங்கூர்மைச் சொற்கள்!
ஈட்டியென - வேல்களென எதிரிகளின் நெஞ்சில்
அப்படியே போய்ப்பாய்ந்து குலைநடுங்க வைக்கும்!
அலையலையாய்த் தமிழினத்தின் வெற்றிகளைக் குவிக்கும்!
இப்படியார் எழுதியவர்? இழிவயிற்றுப் பசிக்கே
எழுதிநலந் தேடிடவே எல்லாரும் பாடி
முப்படியாய்த் தமிழ்நலத்தை தமிழினத்தைத் தீய்த்தார்!
மூண்டுவந்த எரிமலையாய்ப் பாவேந்தன் எழுந்தான்!
கம்பன்முதல் கண்ணனுக்குத் தாசன்வரை எல்லாம்
‘கவி’யெழுதிப் பாட்டெழுதி உடல்வளர்த்த நாட்டில்
கொம்புயர்ந்த காளையென அரிமாவே என்ன
கொடுமுடியில் வீழ்ந்தஇடி முழக்கத்தைச் செய்து
நம்பிறழ்ந்த நிலையினையும் நம்மிழிவும் போக்க
நானென்றே எழுந்துவந்தான் பாவேந்தன் போல
சிம்புள்எது? வேங்கைஎது? அடடா,ஓ!சீ!சீ!
சீரழியும் உடலுக்குள் மானமன்றோ வீரம்!
6. தமிழ்
செந்தமிழ்மேல் பாவேந்தன் வைத்தபெரும் அன்பைச்
சிறுமைபெற வெறியென்னும் வெறிநாய்கள் மட்டும்
தந்தம்மொழி மேல்வைக்க விலையாஇந் நாட்டில்!
தாய்மொழிமேல் அன்புவைத்தே இனம்பேணல் தீதா?
இந்திமொழி மேலவர்கள் வெறியின்றித் தானோ
‘எல்லாரும் இந்திபடித் திடுக’என மொழிவார்!
சொந்தமொழிக் குயர்வின்றி இனந்தாழும் போது
சொத்தைமொழி பிறமொழியைப் போற்றுவதே தீது!
பாவேந்தன் தமிழ்க்காதல் இயற்கை; அதில் தாழ்ச்சி
பகருவதே தாய்மொழிமேல் பற்றற்ற செய்கை!
ஈவேந்தும் தாயன்பு கொழித்திடும்தாய் மொழியில்!
எந்தாய்மேல் பற்றுவைக்கும் உணர்வு,வெறி என்றால்
சாவேந்தும் அக்கொள்கை; சழக்கேந்தி வீழும்!
சரிநிகர்க்கும் தாய்மொழியும் பிறமொழியும் என்றே
நாவேந்திக் கூறிடினும் ஒப்பிவிடோம் யாங்கள்!.
நந்தமிழர் முன்னேற்றம் செந்தமிழ்முன் னேற்றம்!
நேற்றுவந்த இந்திமொழி தேசமொழி என்றால்,
நிலத்துமொழி யாவினுக்கும் தாயாகி நிற்கும்
ஊற்றுமொழி, உணர்வுமொழி, உண்மைமொழி, இந்த
உலகத்து மொழிகளுக்கும் மூத்தமொழி, மேலோர்
ஏற்றமொழி, இயற்கைமொழி, இனியமொழி, பண்டை
இலக்கியமும் இலக்கணமும் செறிந்தமொழி, இன்னும்
வேற்றுமொழி யாவையுமே கருவுயிர்க்காப் போதில்
விளைந்துபெரு மரமாகி நிற்குமொழி தமிழாம்!
செந்தமிழைத் தாய்மொழியென் றொருமுறையால் மட்டும்
சிறப்பதன்மேல் சாற்றவில்லை; தாய்ஊமை யானால்
சொந்தமென ஒன்றிருக்கும்; உயர்வென்றால் சரியோ?
சொல்லுகின்ற சிறப்பெல்லாம் உலகப்பே ரறிவோர்
தந்தசிறப் பன்றோ?நம் தாய்என்றால் மட்டும்ன்ளது
தகுதியிலாப் பெருமையெலாம் உரிமையென்றே ஆமோ?
முந்துசிறப் பெனில்உலகம் ஒப்புதல்வேண் டாமோ?
முத்தமிழின் முழுச்சிறப்பில் எந்தவற்றைச் சொல்வீர்?
பலரறியும் வாய்ப்பொன்றால் ஒருமொழியைப் பிறரும்
படித்தறிய வேண்டுமெனில் அறிவுக்குயர் வெங்கே?
பலரறியும் கீழ்மைக்கும் மேன்மேலும் மேலும்
பல்வகையால் அதிகார வாய்ப்பளிப்ப தென்றால்
சிலரறியும் சிறப்புக்கும் கீழ்மைவா ராதோ?
சிந்தனைக்கும் உயர்வுக்கும் மற்றென்தான் பெருமை?
பலரறிவ தென்றில்லை; உங்கள்கர வெல்லாம்
பைந்தமிழ்க்குச் சிறப்புவரக் கூடாதென் பதுவே!
செந்தமிழ்க்கு வாய்ப்பளித்திங் குலகறியச் செய்தால்,
செத்தமொழி வடமொழிக்கும் இந்திக்கும் என்று
சொந்தநலம் ஒன்றிருக்கக் காணார்கள் யாரும்!
சோற்றுநலம் பெரிதென்பார் இங்கிருப்ப தாலே
எந்தமிழைப் பிறரறிய வாய்ப்பின்றிச் செய்தார்!
எதனிலுமே உயர்வுக்கே வாய்ப்பளிக்கும் ஆள்வோர்
செந்தமிழ்க்கு வேண்டாதார் - ஆரியர்என் பதனால்
சிறுமைக்கே வாய்ப்பளித்துப் பெருமைதனை யழிப்பார்!
எப்பெருமை சாற்றிடினும் ஆரியர்க்குச் சிறுமை
இம்மிவரக் கூடாதென் பதுவடவர் கொள்கை!
எப்பொழுதும் வடவோரே தலைமைதாங் குவதால்
எப்பொழுதும் தமிழுக்கே வாய்ப்பளிப்ப தில்லை!
இப்பொருளை - இவ்வுணர்வை - எந்தமிழர் எக்கால்
ஏற்றறிந்து கொள்வாரோ அப்பொழுதே தமிழ்க்கும்
முப்படியும் வாய்ப்புவரும்; இனமும்முன் னேறும்!
முன்னிழந்த பெருமையெலாம் பின்னெழுந்து சேரும்!
ஈங்கிதைத்தான் பாவேந்தன் எடுத்துரைக்கக் கேட்டோம்!
ஏற்றமிகு பாக்களினால் மாற்றம்வரக் காணோம்!
ஆங்கதையே பெருமையெனக் கருதிவிட்ட ததனால்
அவன்கருத்தை விட்டுவிட்டே அவன்பெருமை ஆர்ப்போம்!
தூங்குகின்றோம்; தூங்குகின்றோம்; தூங்குகின்றோம் இன்னும்!
தொடையினிலே கயிறுபிறர் திரிக்கத்தூங் குகின்றோம்!
ஏங்கினவன் பாவேந்தன்! எடுத்தெடுத்துச் சொன்னான்!
எந்தமிழர் கேளார்கள் எனவறிந்தும் சொன்னான்!
மன்றிருந்த தமிழ்வாழ இனம்வாழ, இங்கே
மலிந்திருந்த வளமெல்லாம் என்றென்றும் வாழ,
அன்றிருந்த பெருமையெலாம் நினைவூட்டிச் சொன்னான்;
அணுஅணுவாய் எந்தமிழர் சிதைந்தகதை சொன்னான்!
வென்றிருந்த தமிழ்ஒருகால் வீரம்எனும் கொம்பில்
வீறுபெறும் கொடியாகப் பறந்தகதை சொன்னான்!
இன்றிருக்கும் தமிழனுக்கோ சோற்றுருண்டை மீதில்
இருந்துவரும் ஆசையிலே எதையெண்ணிப் பார்ப்பான்?
‘செந்தமிழே உள்ளுயிரே நறுந்தேனே என்றன்
செயலெல்லாம் மூச்செல்லாம் உனக்களித்தேன் யானே!
நைந்தாய்,நீ எனில்நைந்து போகுமென்றன் வாழ்வே
செந்தமிழில் இக்கருத்தை அவனெழுத வில்லை!
செங்குருதிச் சேற்றினிலே எலும்பொடித்துத் தோய்த்தே
எந்தமிழர் உணரட்டும் வாழட்டும் என்றே
எழுதிவிட்டுப் போனாபுழுதியிலே போட்டோம்!
நல்லுயிரும் வல்லுடலும் செந்தமிழும் மூன்றும்
நான்நானென் றார்த்தெழுந்தான்; வீண்வீணாய்ப் போனான்!
சொல்லிலுயிர் கலந்தெழுதி மூச்சினிலே பாடிச்
சோர்ந்தவினம் ஆர்த்தெழவும் பார்த்திருந்தான் காலம்!
வெல்லுமடா எந்தமிழும்! வெற்றிநிலை வாய்க்கும்;
வீணரல்லர் தமிழர்’என வீறுபெறச் சொன்னான்!
மெல்லமெல்ல நந்தமிழர் அவன்பாடல் கேட்டார்!
வேற்றுமொழிக் காரனுக்கே அதையெடுத்து விற்றார்
தமிழையவன் காதலித்தான் அடடா,ஓ அடடா!
தமிழினத்தைக் காதலித்தான் அட்டா,ஓ அடடா!
தமிழையவன் தாயென்றான் அட்டா,ஓ அடடா!
தமிழினத்தை உயிரென்றான் அடடா,ஓ அடடா!
தமிழையவன் இறையென்றான் அடடா,ஓ அடடா!
தமிழினத்தை உடலென்றான் அடடா,ஓ அடடா!
தமிழையவன் காதலித்தும் தமிழினத்தைப் பார்த்தும்
தமிழாகிப் போனானே அடடா,ஓ அடடா!
‘கனியிடையில் ஏறிவரும் சுளையினையும் முற்றற்
கழையிடையில் ஊறிவரும் சாற்றினையும் வண்ணப்
பனிமலரில் ஏறிவரும் தேனினையும் காய்ச்சும்
பாகிடையில் ஏறிவரும் சுவையினையும் ஆங்கே
நனிஆக்கள் பொழிதருதீம் பாலினையும் தென்னை
நல்கியதோர் குளிர்மையிள நீரினையும் முற்றும்
இனியனஎன் பேன்எனினும் எந்தமிழை என்றன்
மேலுமவன் செந்தமிழ்மேல் கொண்டிருந்த அன்பால்
மிழற்றுகின்ற செழும்பாடல் அவன்தமிழில் கேட்பீர்!
“அரும்பு தந்த வெண்ணகையே!
அணிதந்த செந்தமிழே, அன்பே!”
‘மடுத்துமகிழ் நறுந்தேனே,
வரைந்துமகிழ் ஓவியமே, அன்பே!’
‘கண்டுவந்த திருவிளக்கே,
களிப்பருளும் செந்தமிழே, அன்பே!’
‘உடலியக்கும் நல்லுயிரே,
உயிரியக்கும் நுண்கலையே
கடலியக்கும் சுவைப்பாட்டே,
கண்ணான செந்தமிழே, அன்பே!'
‘ஐயத்திற் கறிவொளியே,
ஏலும்வகை நூறுமுறை அன்பன்பே என்றே
இன்னுயிரைப் பிழிந்தூற்றித் தமிழ்வடித்த தாரே?
நாலுவகை நூல்களையும் படித்திருப்போம்! 'தமிழே
நான்தும்பி பூக்காடு நீ' யென்ற தாரே?
பாலிடையில் துளிநஞ்சா? பாவேந்தன் பதைத்தான்!
பைந்தமிழில் மொழிக்கலப்பைச் சாடுவதைக் கேட்பீர்!
‘தாய்ப்பாலில் நஞ்செனவே தமிழில்வட
மொழி சேர்த்தார் தவிர்தல் வேண்டும்!
தமிழ்ப்புலவர் தனித்தமிழில் நாடகங்கள்
படக்கதைகள் எழுதல் வேண்டும்!’
‘முதல்நூலை அயலான், நஞ்சால்
‘தனித்தியங்கும் தன்மை தமிழினுக் குண்டு’
கமழும்உன் தமிழினை உயிரென ஓம்பு;
காணும் பிறமொழிக ளோவெறும் வேம்பு;
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு;
நம்உரிமை தனைக் கடித்ததப் பாம்பு!'
‘தனித்தமிழில் இந்நாட்டுத் தக்கபுதுக்
காப்பியம்நன் னூல் இயற்ற
நினைப்பாரேல் நம்புலவர், நிலவாவோ
ஆயிரநூல் தமிழகத்தே!'
‘அறிவிப்புப் பலகையெலாம் அருந்தமிழ்ச்சொல்
ஆக்குவதே அன்றி அச்சொல்
குறைவற்ற தொடராகக் குற்றமற்ற
சொல்லாக அமையுமாயின்
மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த்தாய்?
தமிழ்மக்கள் மகிழ்ந்தி டாரோ?’
‘தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால்
தமிழ்வளர்ச்சி பற்றியவன் சாற்றுகின்றான் கேளீர்!
தமிழல்லால் முன்னேற்றம் சிறிதுமில்லை என்பான்!
‘நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனும்
தமிழ்அல்லால் நம்முன்னேற்றம்
அமையாது; சிறிதுமிதில் ஐயமில்லை, ஐயமில்லை
அறிந்து கொண்டோம்'
'இன்பத் தமிழ் குன்றுமேல் - தமிழ்
நாடெங்கும் இருளாம்!’
‘மொழியென்றால் உயிரின் நரம்பு . நம்
முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு’
‘தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்
அறிவுயரும் அறமும் ஓங்கும்!
இமயமலை போலுயர்ந்த ஒருநாடும்
‘தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர் - பெறத்
தக்கதோர் கட்டாயம் ஆக்கிவிட்டால்
போய்விடும் கல்லாமை’
‘செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரொடு மிளகின் சாறும்
நம்மதுரஞ்செய் கிழங்கு - காணில்
நாவில் இனித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா - உயிரை
தமிழ்வளர்ச்சி யாலிந்த வையகமே உயுமாம்!
தண்டமிழ்ப்பா வேந்தனவன் சொல்லுவதைக் கேட்பீர்!
‘வையகமே உய்யுமாறு வாய்த்த தமிழ்
தமிழ்வளர்ச்சித் திட்டமொன்றே அவனின் தமிழ்இயக்கம்
‘தமிழியக்கம்’ நூல்போதும் அவன்பெருமை சாற்ற!
தமிழ்வளர்க்காத் தமிழினமோ தான்வளர்தல் இல்லை!
தன்மொழி,கா வாதஇனம் வளர்ந்ததுண்டோ உலகில்!
‘ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம்
ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்’!
‘உன்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற
வெற்றியெலாம் உன்றன் வெற்றி’
‘அரசினரின் மொழியாக, அரசியலார் மொழியாக
அரசியல் சார்
வரிசையுறு சட்டமன்றின் மொழியாக, வையம் அறி
மொழியாகத்
திருமலிந்த தமிழ்மொழிதான் ஆகும்வகை நம்புலவர்
சேர்ந்து தொண்டு
புரிகஎன வேண்டுகின்றோம்! பொழிகஎன வேண்டுகின்றோம்
இறுதியிலே உங்கட்குச் சொல்லுகின்றேன் பெரியீர்!
எந்தமிழத் தாய்மாரே! இளைஞர்களே! தமிழீர்!
உறுதியிலே நமக்குய்தி உண்டென்றால் முதலில்
உய்தியுற வேண்டும்தமிழ்! உலகுணர வேண்டும்!
வெறுமுடலில் ஓடுமுயி ரோடுகலந் தோடி
விரிந்துசெலும் நாடிநரம் பெலும்பிலெலாம் தமிழே
மறுவின்றித் திகழ்ந்துணர்வாய்ப் பாய்ந்தோடல் வேண்டும்!
மாபெரிய தமிழினமும் மிகச்செழிக்க வேண்டும்!
வரம்பொன்றால் தமிழ்வரம்பு! வாழ்வும்நமக் கதுவே!
வல்லுணர்வால் பாவேந்தன் முழங்குகின்றான் கேளீர்!
உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்குத் தீமை
ஒருநிலையில் நேர்ந்ததென நாமுரைக்கக் கேட்டால்
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாய்
நண்ணிடவும் வேண்டும்; செயல் முன்னிடவும் வேண்டும்!!
இரும்பன்றோ நம்தோள்கள்! எழவேண்டும் அன்றோ?
எந்தமிழப் பாவேந்தன் இடிமுழக்கம் கேளீர்!
‘ஆழிநிகர் படைசேர்ப்பாய்! பொருள் சேர்ப்பாய் இன்பத்தை
ஆக்குவிப்பாய்
ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும்
உணர்ச்சி கொண்டே!’
“நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு!
பொன்மொ ழிக்குநீ, புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
செந்தமிழ்ச் சொல்லால் செயலால்