கலிங்கத்துப் பரணி/கடை திறப்பு

விக்கிமூலம் இலிருந்து

உடல் அழகு[தொகு]

21.

சூதள வளவெனு மிளமுலைத் துடியள வளவெனு நுண்ணிடைக்
காதள வளவெனு மதர்விழிக் கடலமு தனையவர் திறமினோ. 1

மார்பழகு[தொகு]

22.

புடைபட விளமுலை வளர்தொறும் பொறையறி வுடையரு நிலைதளர்ந்
திடைபடு வதுபட வருளுவீர் இடுகத வுயர்கடை திறமினோ. 2

நடை அழகு[தொகு]

23.

சுரிகுழ லசைவுற வசைவுறத் துயிலெழு மயிலென மயிலெனப்
பரிபுர வொலியெழ வொலியெழப் பனிமொழி யவர்கடை திறமினோ. 3

ஊடிய மகளிர்[தொகு]

24.

கூடிய வின்கன வதனிலே கொடைநர துங்கனொ டணைவுறா
தூடிய நெஞ்சினொ டூடுவீர் உமது நெடுங்கடை திறமினோ. 4

விடுமின் பிடிமின்[தொகு]

25.

விடுமி னெங்கள்துகில் விடுமி னென்றுமுனி வெகுளி மென்குதலை துகிலினைப்
பிடிமி னென்றபொருள் விளைய நின்றருள்செய் பெடைந லீர்கடைகள் திறமினோ. 5

கனவா நனவா[தொகு]

26.

எனத டங்கவினி வளவர் துங்கனருள் எனம கிழ்ந்திரவு கனவிடைத்
தனத டங்கண்மிசை நகந டந்தகுறி தடவு வீர்கடைகள் திறமினோ. 6

ஊடலும் கூடலும்[தொகு]

27.

முனிபவ ரொத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே
முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர் மணித்துவர்வாய்
கனிபவ ளத்தருகே வருதலு முத்துதிருங்
கயல்க ளிரண்டுடையீர் கடைதிற மின்றிறமின். 7

பொய்த் துயில்[தொகு]

28.

இத்துயின் மெய்த்துயிலே என்றுகு றித்திளைஞோர்
இதுபுல விக்குமருந் தெனமனம் வைத்தடியிற்
கைத்தலம் வைத்தலுமே பொய்த்துயில் கூர்நயனக்
கடைதிற வாமடவீர் கடைதிற மின்றிறமின். 8

கனவில் பெற முயல்தல்[தொகு]

29.

இகலி ழந்தரசர் தொழவ ரும்பவனி இரவுகந் தருளு கனவினிற்
பகலி ழந்தநிறை பெறமு யன்றுமொழி பதறு வீர்கடைகள் திறமினோ. 9

முத்துமாலையும் பவளமாலையும்[தொகு]

30.

முத்து வடஞ்சேர் முகிழ்முலைமேன் முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய்
வைத்த பவள வடம்புனைவீர் மணிப்பொற் கபாடந் திறமினோ. 10

ஆத்திமாலையின் மேல் ஆசை[தொகு]

31.

தண்கொடை மானதன் மார்புதோய் தாதகி மாலையின் மேல்விழுங்
கண்கொடு போம்வழி தேடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. 11

படைக்கும் கண்களுக்கும் ஒப்புமை[தொகு]

32.

அஞ்சியே கழல்கெடக் கூடலிற் பொருதுசென்
றணிகடைக் குழையிலே விழவடர்த் தெறிதலால்
வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண்
மடநலீ ரிடுமணிக் கடைதிறந் திடுமினோ. 12

கூடலில் தோன்றும் நிகழ்ச்சிகள்[தொகு]

33.

அவசமுற் றுளநெகத் துயினெகப் பவளவாய்
அணிசிவப் பறவிழிக் கடைசிவப் புறநிறைக்
கவசமற் றிளநகை களிவரக் களிவருங்
கணவரைப் புணருவீர் கடைதிறந் திடுமினோ. 13


கலவி மயக்கம்[தொகு]

34.

கலவிக் களியின் மயக்கத்தாற்
    கலைபோ யகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்!
    நீள்பொற் கபாடந் திறமினோ!.

நனவும் கனவும்[தொகு]

35.

நனவினிற் சயதரன் புணரவே பெறினுநீர்
நனவெனத் தெளிவுறா ததனையும் பழையவக்
கனவெனக் கூறுவீர் தோழிமார் நகைமுகங்
கண்டபின் தேறுவீர் கடைதிறந் திடுமினோ. 15

மகளிர் உறங்காமை[தொகு]

36.

மெய்யே கொழுநர் பிழைநலிய வேட்கை நலிய விடியளவும்
பொய்யே யுறங்கு மடநல்லீர் புனைபொற் கபாடந் திறமினோ. 16

கொழுநர் மார்பில் துயில்[தொகு]

37.

போக வமளிக் களிமயக்கிற் புலர்ந்த தறியா தேகொழுநர்
ஆக வமளி மிசைத்துயில்வீர் அம்பொற் கபாடந் திறமினோ. 17

பிரிவாற்றாமை[தொகு]

38

ஆளுங் கொழுநர் வரவுபார்த் தவர்தம் வரவு காணாமல்
தாளு மனமும் புறம்பாகச் சாத்துங் கபாடந் திறமினோ. 18

ஒன்றில் இரண்டு[தொகு]

39.

உந்திச் சுழியின் முளைத்தெழுந்த உரோமப் பசுந்தா ளொன்றிலிரண்
டந்திக் கமலங் கொடுவருவீர் அம்பொற் கபாடந் திறமினோ. 19

சிறைப்பட்ட மகளிர் நிலை[தொகு]

40.

மீனம்புகு கொடிமீனவர் விழியம்புக வோடிக்
கானம்புக வேளம்புகு மடவீர்கடை திறமின். 20

மகளிரை கப்பப்பொருளாக அளித்தல்[தொகு]

41.

அலைநாடிய புனனாடுடை யபயர்க்கிடு திறையா
மலைநாடியர் துளுநாடியர் மனையிற் கடைதிறமின். 21

தோளைத் தழுவி விளையாடல்[தொகு]

42.

விலையி லாதவடம் முலையி லாடவிழி குழையி லாடவிழை கணவர்தோள்
மலையி லாடிவரு மயில்கள் போலவரு மடந லீர்கடைகள் திறமினோ. 22

கன்னடப் பெண்டிரின் பேச்சு[தொகு]

43.

மழலைத்திரு மொழியிற்சில வடுகுஞ் சிலதமிழுங்
குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின். 23

தழுவிய கை நழுவல்[தொகு]

44.

தழுவுங் கொழுநர் பிழைநலியத் தழுவே லென்னத் தழுவியகை
வழுவ வுடனே மயங்கிடுவீர் மணிப்பொற் கபாடந் திறமினோ. 24

மகளிர் புன்னகை[தொகு]

45.

வேகம் விளைய வருங்கொழுநர் மேனி சிவந்த படிநோக்கிப்
போகம் விளைய நகைசெய்வீர் புனைபொற் கபாடந் திறமினோ. 25

உறக்கத்திலும் முகமலர்ச்சி[தொகு]

46

சொருகு கொந்தளக மொருகை மேலலைய ஒருகை கீழலைசெய் துகிலொடே
திருவ னந்தலினு முகம லர்ந்துவரு தெரிவை மீர்கடைகள் திறமினோ. 26


நெஞ்சம் களிப்பீர்[தொகு]

47

முலைமீது கொழுநர்கைந் நகமேவு குறியை
முன்செல்வ மில்லாத வவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவி டத்தே
கண்ணுற்று நெஞ்சங்க ளிப்பீர்கள் திறமின். 27

மதர்விழி மாதர்[தொகு]

48

கடலில் விடமென வமுதென மதனவேள் கருதி வழிபடு படையொடு கருதுவார்
உடலி னுயிரையு முணர்வையும் நடுவுபோய் உருவு மதர்விழி யுடையவர் திறமினோ. 28

பிறைநிலவும் முழுநிலவும்[தொகு]

49

முறுவன் மாலையொடு தரள மாலைமுக மலரின் மீதுமுலை முகிழினுஞ்
சிறுநி லாவுமதின் மிகுநி லாவுமென வருந லீர்கடைகள் திறமினோ. 29

திருகிச் செருகும் குழல் மாதர்[தொகு]

50

முருகிற் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிருந்
திருகிச் செருகுங் குழன்மடவீர் செம்பொற் கபாடந் திறமினோ. 30

கொழுநரை நினைந்தழும் பெண்கள்[தொகு]

51

மெய்யில ணைத்துருகிப் பையவ கன்றவர்தா
மீள்வரெ னக்கருதிக் கூடல்வி ளைத்தறவே
கையில ணைத்தமணற் கண்பனி சோர்புனலிற்
கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்றிறமின். 31

ஊடன் மகளிர்[தொகு]

52

செருவிள நீர்பட வெம்முலைச் செவ்விள நீர்படு சேயரிக்
கருவிள நீர்பட வூடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. 32

நடந்துவரும் அழகு[தொகு]

53

அளக பாரமிசை யசைய மேகலைகள் அவிழ வாபரண மிவையெலாம்
இளக மாமுலைக ளிணைய றாமல்வரும் இயன லீர்கடைகள் திறமினோ. 33

இதழ் சுவைத்தல்[தொகு]

54

மதுர மானமொழி பதற வாள்விழிசி வப்ப வாயிதழ்வெ ளுப்பவே
அதர பானமது பான மாகவறி வழியு மாதர்கடை திறமினோ. 34

வேதும் மருந்தும்[தொகு]

55

தங்குகண் வேல்செய்த புண்களைத் தடமுலை வேதுகொண் டொற்றியுஞ்
செங்கனி வாய்மருந் தூட்டுவீர் செம்பொ னெடுங்கடை திறமினோ. 35

வேதும் கட்டும்[தொகு]

56

பொருங்கண் வேலிளைஞர் மார்பி னூடுருவு புண்கள் தீரவிரு கொங்கையின்
கருங்கண் வேதுபட வொற்றி மென்கைகொடு கட்டு மாதர்கடை திறமினோ. 36

விழுதலும் எழுதலும்[தொகு]

57

இடையி னிலையரி திறுமிறு மெனவெழா எமது புகலிட மினியிலை யெனவிழா
அடைய மதுகர மெழுவது விழுவதாம் அளக வனிதைய ரணிகடை திறமினோ. 37

சிலம்புகள் முறையிடல்[தொகு]

58

உபய தனமசையி லொடியு மிடைநடையை ஒழியு மொழியுமென வொண்சிலம்
பபய மபயமென வலற நடைபயிலும் அரிவை மீர்கடைகள் திறமினோ. 38

பெண்ணுக்கும் பொன்னிக்கும் ஒப்புமை[தொகு]

59

பூவிரி மதுகரம் நுகரவும் பொருகய லிருகரை புரளவுங்
காவிரி யெனவரு மடநலீர் கனகநெ டுங்கடை திறமினோ. 39

வண்டுகள் கூந்தலிற் பந்தலிடல்[தொகு]

60

களப வண்டலிடு கலச கொங்கைகளின் மதியெ ழுந்துகனல் சொரியுமென்
றளக பந்திமிசை யளிகள் பந்தரிடும் அரிவை மீர்கடைகள் திறமினோ. 40

விழி சிவக்கும் உதடு வெளுக்கும்[தொகு]

61

வாயிற் சிவப்பை விழிவாங்க மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி யமுதளிப்பீர் துங்கக் கபாடந் திறமினோ. 41

கலவியில் நிகழ்வன[தொகு]

62

கூடு மிளம்பிறையிற் குறுவெயர் முத்துருளக்
கொங்கை வடம்புரளச் செங்கழு நீரளகக்
காடு குலைந்தலையக் கைவளை பூசலிடக்
கலவி விடாமடவீர் கடைதிற மின்றிறமின். 42

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்தது[தொகு]

63

காஞ்சி யிருக்கக் கலிங்கங் குலைந்த கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி யிருக்கக் கலிங்கங் குலைந்த களப்போர் பாடத் திறமினோ. 43

கருணாகரனின் போர்ச்சிறப்பு[தொகு]

64

இலங்கை யெறிந்த கருணா கரன்தன்
    இகல்வெஞ் சிலையின் வலிகேட்பீர்
கலிங்க மெறிந்த கருணா கரன்றன்
    களப்போர் பாடத் திறமினோ. 44

நினைவும் மறதியும்[தொகு]

65

பேணுங் கொழுநர் பிழைகளெலாம்
      பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்!
      கனப்பொற் கபாடந் திறமினோ. 45

உறவாடும் மாதர்[தொகு]

66

வாச மார்முலைகண் மார்பி லாடமது மாலை தாழ்குழலின் வண்டெழுந்
தூச லாடவிழி பூச லாடவுற வாடு வீர்கடைகள் திறமினோ. 46

வாய் புதைக்கும் மடநல்லீர்[தொகு]

67

நேயக் கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கு மடநல்லீர் மணிப்பொற் கபாடந் திறமினோ. 47

மதியொளிக்கு நடுங்குவீர்[தொகு]

68

பொங்கு மதிக்கே தினநடுங்கிப் புகுந்த வறையை நிலவறையென்
றங்கு மிருக்கப் பயப்படுவீர் அம்பொற் கபாடந் திறமினோ. 48

தேயும் குடுமி[தொகு]

69

வருவார் கொழுந ரெனத்திறந்தும் வாரார் கொழுந ரெனவடைத்துந்
திருகுங் குடுமி விடியளவுந் தேயுங் கபாடந் திறமினோ. 49

புலவியும் கலவியும்[தொகு]

70

ஊடு வீர்கொழுநர் தங்கள் பான்முனிவொ ழிந்து கூடுதலி னுங்களைத்
தேடு வீர்கடைகள் திறமி னோவினிய தெரிவை மீர்கடைகள் திறமினோ. 50

கண்ணின் இயல்பு[தொகு]

71

பண்படு கிளவியை யமுதெனப் பரவிய கொழுநனை நெறிசெயக்
கண்கொடு கொலைசெய வருளுவீர் கனக நெடுங்கடை திறமினோ. 51

தரையில் விரல் எழுதுவீர்[தொகு]

72

பிழைநி னைந்துருகி யணைவு றாமகிழ்நர் பிரித லஞ்சிவிடு கண்கணீர்
மழை ததும்பவிரல் தரையி லேயெழுதும் மடந லீர்கடைகள் திறமினோ. 52

குலோத்துங்கன் போன்றீர்[தொகு]

73

நக்காஞ் சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனைவிட்
டக்கா னகத்தே யுயிர்பறிப்பீர் அம்பொற் கபாடந் திறமினோ. 53

பூவும் உயிரும் செருகுவீர்[தொகு]

74

செக்கச் சிவந்த கழுநீருஞ் செகத்தி லிளைஞ ராருயிரும்
ஒக்கச் செருகுங் குழன்மடவீர் உம்பொற் கபாடந் திறமினோ. 54