காலிங்கராயன் கால்வாய்
காலிங்கராயன் கால்வாய்
ஆசிரியர்
புலவர் செ. இராசு எம். ஏ.,
கல்வெட்டியல் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் 613 005
வெளியிடுவோர்:
கொங்கு ஆய்வு மையம்
5, என்.ஜி.ஓ. காலனி
ஈரோடு 638 009
- முதல் பதிப்பு: 8-7-1987
- விலை: ரூபாய் 10-00
- நூல் கிடைக்குமிடம்:
- கௌரிராசு
சி 1. தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு
தஞ்சாவூர் 613 005
- கௌரிராசு
- வாணி நூலகம்
211 ஏ, கச்சேரி ரோடு
ஈரோடு 638001
- வாணி நூலகம்
- மாருதி பிரஸ்,
173, பீட்டர்ஸ் ரோடு,
சென்னை - 14.
ஒரு கனவு நனவாகியது!
கல்லும் கதைசொல்லும் என்பார்கள்; இங்கே கால்வாய் கதை சொல்லுகிறது. கதை என்றால் கற்பனையா? இல்லை; அவை அவ்வளவும் வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகும்.
வெள்ளோடு உலகபுரம்கரை வெள்ளமுத்துக் கவுண்டன்வலசில் ‘மேட்டாங்காட்டில்’ பிறந்து, திருப்பூர் கருவம் பாளையத்தில் இளமையில் வளர்ந்த நான் தொலைவில் உள்ள நன்செய் வளம் கொழிக்கும் காலிங்கராயன் கால்வாய்மீது காதல் கொண்டதே ஒரு கதைதான்!
என் தாயார் திருமதி நல்லம்மாள் சென்னிமலைக் கவுண்டர் காலிங்கராயன் கால்வாயின் உரிமை ஊர்களில் ஒன்றான சாமிநாதபுரம் ‘மேக்கால்’ வீட்டைச் சேர்ந்தவர்கள்; அத்தொடர்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
என் மாமா, அத்தை, அக்கா ஆகியோர் காலிங்கராயன் கால்வாயின் மடியில் தவழும் சாவடிப் பாளையம் புதூரில் உள்ளனர்.
சாவடிப்பாளையம் புதூர் சென்று காலிங்கராயன் கரையில் மாமாவின் தோட்டத்து மாமரத்தில் மாங்காய் பறிக்கும்போதும், அத்தை வீட்டாரோடு நட்டாற்றீசுவரன் கோயில் செல்லும்போதும் என் மாமாமார்களான சொங்கப்பன், குமாரசாமி, எஸ்.பி. கந்தசாமி ஆகியோர் என்னிடம் இளமையில் கூறியவை:
- ‘இதோ! இந்தக் காலிங்கராயன் கால்வாய் உங்கள் பங்காளி வெட்டியது; இதன் தண்ணீரை நீங்கள் குடிக்கக் கூடாது. இக்கால்வாயில் விளையும் நெல்லைக் கூடச் சாப்பிடக் கூடாது’ என்ற தொடர்கள்! இளமையில் கால்வாய்க் கரையில் எனக்கு அறிவுறுத்தப்பட்ட இச்சொற்களே இவ்வரலாறு உருவாவதற்கு விதையாகியது எனலாம்.
ஞானிபாளையத்தில் நான்காம் வகுப்பை முடித்து ஈரோட்டில் மூத்த சகோதரியார் திருமதி மீனாட்சி சுப்பராயன் அவர்கள் வீட்டிலிருந்து ‘போர்டிங்’ பள்ளிக் கூடம் என அழைக்கப்பட்ட லண்டன் மிஷன் சமுதாய நடுநிலைப் பள்ளியிலும், செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கும்போது ஈரோடு வாட்டர் ஒர்க்சிலும், காரை வாய்க்கால் மைதானத்திலும் சக மாணவர்களோடு காலிங்கராயன் கரையில் விளையாடும்போது மீண்டும் காலிங்கராயன் தொடர்பு எனக்கு ஏற்பட்டது.
1959 இல் ஈரோட்டில் ஆசிரியப் பணியுடன் ஆராய்ச்சிப் பணியும் தொடங்கியது. முதல் ஆய்வு காலிங்கராயன் பற்றியதுதான். அமரர் என் குருநாதர் எழுமாத்தூர் வேலம்பாளையம் பெரும்புலவர் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் ஆய்வை ஆசி கூறித் தொடங்கி வைத்தார்கள்.
பழைய நூலகங்கள், ஆவணக் காப்பகம், சுவடி நூலகம், புலவர் இல்லங்கள், கோயில்கள், செவிவழிச் செய்திகள், பெரியவர்களுடன் உரையாடல் மூலம் பல செய்திகள் கிடைத்தன. புலவர்கள் வெ.க. பச்சையப்பன், இரா.சி. சென்னியப்பன் ஆய்வில் உடன் வந்து உதவினர்.
1963ல் குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரி மலரில் ‘காலிங்கராயன் கால்வாய்’ என்ற முதல் கட்டுரையை எழுதினேன். பலர் பாராட்டினர். நூல் வடிவாக்கத் தூண்டினர்.
1966 இல் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கிலும், 1967ல் வெளிவந்த ‘எங்கள் பவானி’ என்னும் நூலிலும், ‘கொங்குமலர்’ ‘கொங்கு நண்பன்’ ‘கொங்கு’ ஆகிய இதழ்களிலும், ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை, சுழற்குழு, ஆசிரியர் மையம் போன்ற இடங்களிலும் விரிவாகப் பல கோணங்களில் காலிங்கராயன் கால்வாய் பற்றி எழுதும், பேசும் வாய்ப்புக் கிடைத்தது. என்றாவது இவ்வரலாறு விரிவான நூல் வடிவம் பெறவேண்டும் என அந்நாளில் பலர் விரும்பினர்.
மக்களிடையே கால்வாய் வரலாறு மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியது. அமரர் வி.எம். கைலாசக் கவுண்டர் அவர்கள் பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வசதி செய்து தந்தார்கள். டாக்டர் எல்.கே. முத்துசாமி, பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் திரு. மோகன்ராஜ் காலிங்கராயர் போட்டியிட்டபோது நான் எழுதிய சிறு நூலை 25000 பிரதிகள் வெளியிட்ட மு. சின்னசாமி, சி. துரைசாமி போன்றவர்கள் இவ்வரலாறு நூல்வடிவம் பெற விரும்பினர். என்பால் அன்பு கொண்டு உரையாடும் போது கருப்பண கவுண்டர், எஸ்.ஆர்.பி. ராஜப்பா, செங்கோட கவுண்டர், ஏ.பி. சின்னசாமி, டாக்டர் பொ. இளங்கோ போன்ற சாத்தந்தை குலப் பெருமக்கள் ‘நூல் எழுதுக’ என்று தூண்டினர். நூல் வடிவம் பெற்று வெளி வரும்போது இப்பெருமக்கள் இன்று இல்லையே என்று ஏங்குகின்றேன். அப்பெருமக்கள் ஆசிதான் என் கனவு நனவாகியதற்குக் காரணமாகும்.
சித்தோடு திரு. குமார நடவரச ஈவப்பனார் அவர்கள் பல்லாண்டுகள் முன்பே வரலாறு நூல் வடிவம் பெற விரும்பினார். பாலமடை அம்மன் கோயில் திருப்பணி செய்த திரு யு.ஆர். சின்னசாமிக் கவுண்டர், டாக்டர் நல்லசாமி, டாக்டர் நடராசன் போன்றவர்கள் இம்முயற்சியை வரவேற்றனர்.
திரு கே.ஆர். நல்லசிவம், எழுமாத்தூர் சென்னியப்பன், சிவகிரி பழனிசாமி ஆகியோர் கொங்கு விவசாயிகள் அனைவரும் ஆதரிக்க வேண்டிய அரிய முயற்சி என்று பாராட்டுரைத்தனர்.
சீர்மிகு காலிங்கராயர் வழித்தோன்றலாகத் தோன்றிய ஊத்துக்குளி ஜமீன்தார் நற்பண்புகளின் நாயகர் அன்புருவாகிய அமரர் திருமிகு அகத்தூர் முத்துராமசாமிக் காலிங்கராயர் அவர்களால் இந்த வரலாறு பாராட்டப் பெறும் பேறு பெற்றது. அவர்களின் அன்புத்துணைவியார் ஊத்துக்குளி ஜமீன்தாரினி அருள் உருவாகிய அன்பு அன்னை திருமதி ருக்மணி காலிங்கராயர் அவர்களும், அவர்கள் மக்களும் இந்நூல் வெளிவர நல்லூக்கம் அளித்து உதவி செய்தனர்.
காலிங்கராயன் கால்வாய் வரலாற்று நூலை வெள்ளோடு இராசாக்கோயில் குடமுழுக்கு விழாவில் வெளியிடக் குழுவினர் அன்புடன் அனுமதி அளித்தனர்.
நூல் நன்கு வெளிவர திருவாளர்கள் ஓ.எஸ். ரங்கசாமிக் கவுண்டர், கே.சி. சுப்பையா, கே. சண்முக ராமசாமிக் கவுண்டர், எஸ்.கே. கிருஷ்ணசாமி சகோதரர்கள், பி. சுப்பிரமணியம், அய்யாசாமிக் கவுண்டர் ஆகியோர் அரிய ஆலோசனைகளை வழங்கினர். தென்முகம் வெள்ளோடு உலகபுரம், கனகபுரம், தேவணம் பாளையம் கரைப் பெருமக்கள் வரலாற்று நூல் வெளிவருவதில் மிகவும் ஆர்வம் காட்டினர்.
கலைமகள் அருங்காட்சியகப் பட்டயங்கள் சிலவற்றைப் பார்வையிட கலைமகள் நிருவாகி செல்வி முத்தையா அவர்கள் அனுமதியளித்தார்கள்.
பேராசிரியர் முனைவர் எ. சுப்பராயலு கே. ராஜன் ஆகியோர் அரிய ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நூலை வெளியிடத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமிகு ச. அகத்தியலிங்கம் அவர்கள் அன்புடன் அனுமதி அளித்தார்கள்.
இந்நூலை விரைவில் அச்சிட எல்லா ஏற்பாடுகளையும் விரைந்து செய்து உதவியவர்கள் சென்னை மாருதி அச்சக உரிமையாளர்கள் திருவாளர்கள் வி. ஸ்ரீதர், வி. பார்த்திபன் ஆகியோர். ஓவியர் ஆனந்தன் உரிய காலத்தில் உதவிகள் புரிந்தார்.
மேற்குறிப்பிட்ட அனைவருக்கும், இன்னும் இந்த வரலாறு தொடர்பாக உதவிபுரிந்த அத்துணைப் பெருமக்களுக்கும் என் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
கொங்கு ஆய்வு மையம் மூலம் கொங்கு நாடு பற்றிய பல நூல்கள் வெளிக்கொணரவும், கொங்குக் கலைக்களஞ்சியம் தயாரிக்கவும் எண்ணம் உள்ளது. கொங்கு நாட்டு வள்ளல்கள், பெருமக்கள், பொதுமக்கள் என் வரலாற்று முயற்சிகளை ஆதரிப்பார்களாக!
தஞ்சாவூர்
30-6-87
அன்பன்,
செ. இராசு
பொருளடக்கம்
| | 9 |
| | 18 |
| | 26 |
| | 35 |
| | 54 |
| | 61 |
| | 70 |
| | 81 |
| | 91 |
| | 105 |
| | 114 |
பிற்சேர்க்கை
| | 119 |
| | 125 |
| | 129 |
| | 146 |
