உள்ளடக்கத்துக்குச் செல்

காலிங்கராயன் கால்வாய்/012

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை எண்—1
காலிங்கராயன் கல்வெட்டுக்கள்

திங்களூர் அழகப்பெருமாள் கோயில்
தெற்குச்சுவர்க் கல்வெட்டு

ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மூன்றாவது ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் குறுப்பு நாட்டுத் திங்களூர் சுந்தரபாண்டிய விண்ணகரம் பெருமாள் கோயில் திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நம்பிமார்களுக்கும் இந்நாயனார்க்கும் அமுதுபடியுள்ளிட்டு வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இந்நாட்டுத் தாளூன்றி நீர் நிலத்துக்கும் புன்செய்க்கும் இறுக்கும் கடமை ஒட்டச்சும் காலும் கலமும் நத்தவரியும் அந்தராயகாணம் உப்பாயம் தறியிறை உள்ளிட்ட மேலிறை கீழிறையும் எண்ணெயும் காணியும்ஞ் சாமந்த வேண்டுகோளும் குற்ற தெண்டமும் எலவை ஒகவை மற்றும் எப்பேர்ப்பட்டனவும் உட்பட தந்தோம் இந்நாயனார் அழகப் பெருமாளுக்கு இப்படிக்கு சந்திராதித்தவரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி இவ்வூர் குடியேற்றிக் கொள்க இப்படிக்கு காலிங்கராயன் எழுத்து.

விசயமங்கலம் நாகேசுவரசுவாமி கோயில்
மகாமண்டபம் வடபுறச் சுவர்க் கல்வெட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரிமேல் கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவனேன் எமக்குச் செல்லா நின்ற யாண்டு அஞ்சாவது சகரை யாண்டு ஆயிரத்திரனூத் திரண்டு பெறட்டாசி மாதம் முதல் குறுப்பு நாட்டு விசயமங்கலத்து ஊரும் ஊராளிகளுக்கும் தங்களுடைய வாகைப் புத்தூரில் வடக்கு வாகசைலில் வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடக்கிறதாகக் கேட்டோம் இக்குளம் தங்களூர் நாயனார் திருநாகீசுரமுடையார் திருக்காமக் கோட்டத்து ஆளுடை நாச்சியர்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட வெஞ்சனம் பலபடி நிமந்தத்துக்கு இக்குளம் வீரபாண்டியப் பேரேரி எனவும் இக்குளமும் இக்குளக்கீழ் நிலமும் நீர்யேறிடமெல்லாம் இறையிலி தேவதானமாக விடுக எனத் தோண்டும் வாரம் குடுக்கப் போதுவார்களாகவும் இக்குளக்காலுள்ள அழிவு சோர்வு தாங்களே செய்வார்களாக இப்படி சந்திராதித்தர் வரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி அனுபவிக்கக் கடவதாக நம் ஓலை குடுத்தோம். இப்படியே நந்தமர்ப்பாற்படுத்திக் கொடுக்கவும் இது பன்மாகேஸ்வரர் ரட்சை இவை காலிங்கராயன் எழுந்து......இத்தர்மம் இறங்கப் பண்ணினவன் வழி வழியேழெச்ச மறுவான்.

நெரூர் அக்கீனீசுரர் கோயில்
தென்புறத்து மதில் கல்வெட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கிரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் கிழங்கு நாட்டு நெரூரான வீர சோழச் சதுர்வேதிமங்கலத்து உடையார் திரு அக்கினீசுரமுடைய நாயனார் கோயில் தானத்தாருக்கும் இந்நாயனாருக்கும் அமுதுபடி உள்ளிட்டு வெஞ்சனங்களுக்கும் தை மாதத்து நம் பிறந்த நாளில் தீர்த்தம் பிரசாதிக்கக் கட்டின திருநாளுக்கும் இந்நாட்டில் நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த வழிப்போக்கி நத்தமும் நான்கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் நன்செய் புன்செயும் நத்தமும் தோட்டமும் குளமும் குளப்பரப்பும் உள்பட்ட நிலத்தில் பழந்தேவதானம் பள்ளிச்சந்தம் நீக்கி நின்ற நிலம் ஒட்டச்சு ஆராய்ச்சி நத்தவரியும் மண்டல முதன்மை சந்தி விக்கிரகப் பேறுவரியும் மார் வினியோகமும் எலவை உகவை காணிக்கை காலிங்கராயன் வினியோகமும் ஓலைச் சம்படம் அணியில் பொன்வரியும் வேளைக்காரன் சிரக்காரன் கார்த்திகைப்படியும் சானங்கண்மையும் நல்லெருது நற்பசு காணம் நெய் எண்ணையும் உப்பாயம் தறியிறை செக்கிறையும் தட்டொலிப் பாட்டமும் ஈழம் புஞ்சையும் பாமைக்காணம் கீழிறை தோலொட்டும் மன்றுபாடு தெண்டங்குத்தமும் மத்தும் எப்பேர்ப்பட்ட வரிகளும் உள்பட்டது பன்னிரண்டாவது மாசி மாதம் முதல் தேவதானம் இறையிலியாகத் தந்தோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு நான்கெல்லையிலும் திரிசூலக்கல்லு நாட்டி சந்திராதித்தவர் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொண்டு கச்சிராய நல்லூர் என்று குடியேற்றிக் கொண்டு அனுபவிக்க இவை காலிங்கராயன் எழுத்து... யாண்டு 12 நாள் 256...அக்கினீசுரசுவாமி துணை.

எலத்தூர் சோழீச்சுரர் கோயில் கல்வெட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்தி கோனேரிமை கொண்டான் வட பரிசார நாட்டு எலத்தூரு ஊரார்கள் தங்களூருடையாருக்கும் சோளீஸ்வரமுடையாருக்கும் தான் தோன்றீஸ்வரமுடைய நாயனார்க்கும் சாத்துப்படி உள்ளிட்டு வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இவ்வூர்க் கொளம் உடைகுளம்...யிருந்தபடியிலே பத்தினால் சித்தார்த்தியாண்டு முதல் குளம் அடைத்துத் திருத்தி பயிர்செய்து பயிர் செய்யுமளவில் திருத்தின நிலத்துக்கு யி...டை...அந்தராயம் இலவை உகவை காணிக்கை மற்றும் எப்பேர்ப்பட்டனவும் இந்நாள் முதல் யிறையிலியாகக் கொண்டோம் இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொண்டு கொளம் அடைத்துத் திருத்தி பயிர் செய்து கூடிய நிலங்களை கொளத்தைத் தானமாக அனுபவித்துக் கொள்ளவும்...காலிங்கராயன் எழுத்து ஆண்டு 14 நாள் 250.

சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீவேசுரர் கோயில்
அர்த்தமண்டபம் தென்புறம் பட்டிகைவரிக் கல்வெட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரி மேல் கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு ஆண்டு இருபத்தி நாலாவது வீரசோழவளநாட்டு முகுந்தனூருடைய குரக்குத்தளி ஆளுடைய நாயனார் கோயில் தானத்தார்க்கு இந்நாயனார்க்கு அமுதுபடிக்கும் திருநாள் படிக்கும் திருப்பணிக்கும் வேண்டும் வெஞ்சனாதிகளுக்கும் திருமடை விளாகத்துக்கு மேற்கில் நல்லாட்டுக்குளம் அனாதி பாழ்பட்டுக் கெடக்கையில் யிக்குளமும் நீரேறிப் பாயும் நிலமும் திருநாமத்துக் காணியாகக் குடுத்தோம் இதுக்கு இறுக்கும் கடமையில் நிலவச்சு மற்றும் யெப்பேர்ப்பட்ட வரிகளும் கழிச்சுக் குடுத்தோம் யிப்படிக்கு இவ்வோலை பிடி பாடாகக் கொண்டு சந்திராதித்தர்வரை செல்வதாகச் செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்க...இப்படிக்கு காலிங்கராயன் எழுத்து இவை பெருமாள் வீரராசேந்திரச் சோழச் சக்கர வர்த்தி எழுத்தின்படி சிலவு அழிக்க இது பன்மாகேஸ்வரர் ரட்சை இந்த தர்மத்துக்கு விகாதம் பண்ணும் பேர்கள் னாளை நசிச்சு போவார்கள்.

குன்னத்தூர் இலட்சுமி நாராயணப்
பெருமாள் கோயில் கல்வெட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கிரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் குறுப்பு நாட்டுக் குன்றத்தூர் இலட்சுமி நாராணப் பெருமாள் வீரபாண்டிய விண்ணகரம் பெருமாள் கோயில் திருப்பதியாருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் இந்நாயனாருக்கு அமுதுபடி உள்ளிட்ட வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இந்த நாட்டில் காடு பிடித்து அழித்துக்கொண்டு நாடாக்கின வெள்ளிரவெள்ளி நான்கெல்லைக்குட்பட்ட நீர் நிலமும் காடும் குளமும் குளப்பயிராய் உள்பட்ட நிலத்தில்...சந்திராதித்தர் வரை செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொண்டு குடியேற்றி அனுபவிக்கவும் இவை காலிங்கராயன் எழுத்து.

கொடுமுடி அம்மன் சந்நிதி கருவறைக் கல்வெட்டு

......திருப்பாண்டிக்கொடுமுடியாளுடைய நாயநார்க்கு தேவஸ்தானம் விதரியான திருச்சிற்றம்பல நல்லூரில் வெள்ளைக்குளம் வரகுணன் நெறையுங்காலம் ஒடைவு குலைவுப்பட்டு இப்பறம் கெடக்கையில் அடைத்து நீர்நிலம் பயிர்செய்யும் அளவில் பண்ணிரண்டு அடிக்கோலால் அயினூறு குழிகொண்டது ஒரு மாவாக திருப்பாண்டிக் கொடுமுடியில் பல நாயனார்க்கு விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் நாயனார்க்கு முற்றூட்டு கையில் நெலம் இருபது மாவும் திருப்பாண்டிக் கொடுமுடியாருக்கு விதரியான திருச்சிற்றம்பலநல்லூர் நாயனார்க்கு இவை இறையிலிக்குட்பட்ட நிலம் நாலு மாவும் மேல்கரை அரைய நாட்டாருக்கும் நகரத்தாருக்கும் இறையிலி நீக்கி இவ்வூர் குடிநீங்காத் தேவதானமாக திருப்பாண்டிக் கொடிமுடியாருக்கும் விதரியான திருச்சிற்றம்பல நல்லூர் உடையார்க்கும் இறையிலி தேவஸ்தானமாகக் குடுத்தது யாண்டு ஆறாவது நாள் முப்பத்தாறாவது இவை சுந்தரபாண்டியக் காலிங்கராயன் எழுத்து.

வெஞ்சமாங்கூடலூர்க் கல்வெட்டு

ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறபன் மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குல சேகர தேவர்க்கு யாண்டு நாலாவது வைய்யாசி மீ 25 தேதி ஆளுடையார் திருவெஞ்சமாங்கூடலூர் ஆளுடைய நாயனார்க்கு கோயில் ஆதிசண்டேசுவர தேவர்களுக்கு கோயில் கணக்கு ஸ்ரீ காரியஞ் செய்வார்க்கு விலைப் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது தட்டையூர் நாட்டு நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த நத்தம் பூத்துரை செல்லவான கண்ணப்ப நல்லூருக்கு எல்லை துறையூருக்கு வடக்கு இந்நான்கெல்லையும் எல்லைக்குட்பட்ட நிலமும் நஞ்சையும் புஞ்சையும் நத்தமும் குளமும் குளப்பரப்பும் கீழ்நோக்கிய கிணறும் மேல் நோக்கிய மரமும் இதில் எப்பேர்ப்பட்ட வரியும் மண்டல முதல் மகமையும்......வைய்யாசி முதல் தேவதானமாக இறையிலியாகத் தந்தோம்......யாண்டு 4 நாள் 267...இவை காலிங்கராயன் எழுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=காலிங்கராயன்_கால்வாய்/012&oldid=1841444" இலிருந்து மீள்விக்கப்பட்டது