குடும்பப் பழமொழிகள்/ஆரோக்கியம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆரோக்கியம்

நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமானம்.

-ஜப்பான்

ஆரோக்கியமுள்ளவனுக்குத் தினசரி திருமணம்தான்.

- துருக்கி

முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி-இவை உள்ள இடத்தில் வைத்தியருக்கு வேலையில்லை.

- ஜெர்மனி
மக்கள் ஆரோக்கியமாயிருந்தால், வைத்தியர்களுக்கு நோய் வரும்.
-( , , )
இரவில் ஓர் ஆப்பிளை உண்டு வந்தால், பல் வைத்தியருக்கு நம்மிடம் வேலையில்லை.
- இங்கிலாந்து

சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார்.

-இதாலி
செல்வமில்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே பாதி நோயாகும்.
-( , ,)
உடல் நலமுள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான்.
- துருக்கி
ஒரு வேளை உணவை இழத்தல் நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது.
-ஸ்பெயின்
இரவுச்சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம்.
-லத்தீன்
நன்றாயிருக்கும் உடலிலேயே நல்ல மனம் தங்கியிருக்கும்.
- ஜெர்மனி
உடல் நலமாயிருக்கும் பொழுதே நோயைப்பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்.
-( , ,)

ஐந்துக்கு எழுந்திரு, ஒன்பதுக்கு உணவருந்து, ஐந்துக்குச் சாப்பிடு, ஒன்பதுக்கு உறங்கு.

-ஃபின்லந்து
ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால், எல்லாமும் குறைவு என்று பொருள்.
-ஃபின்லந்து
உணவு, அமைதி, முகமலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலைசிறந்த மருத்துவர்கள்.
- இங்கிலாந்து
தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்தெழுவான்.
-( , ,)
நல்ல மனைவியும் உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்
-( , ,)
முன்னிரவில் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் அறிவும் பெருகும்.
-( , ,)
வைத்தியர்களைவிட உணவுமுறை அதிகக் குணமுண்டாக்கும்.
-( , ,)

நீண்ட நாள் வாழ்வதற்குக் கதகதப்பான உடையணியவும்

மிதமாக உண்ணவும், நிறைய நீர் பருகவும்.
-( , ,)
மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திரு, இரவு உணவுக்குப்பின் ஒரு மைல் நட.
-( , ,)
குளிர்ச்சியான தலையும், சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை.
-( , ,)
ஆரோக்கியமுள்ள உடல் ஆன்மாவுக்கு விருந்து மண்டபம்; நோயுள்ள உடல் அதன் சிறைக்கூடம்.
-பேக்கன்