குடும்பப் பழமொழிகள்/குலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

குலம்

ஒவ்வொரு பிச்சைக்காரனும் எவனோ ஓர் அரசனின் வழி வந்தவன், ஒவ்வோர் அரசனும் ஒரு பிச்சைக்காரனின் வழிவந்தவன்.
- இங்கிலாந்து
குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன்; கிழங்கைப் போலவே, அவன் பெருமையும் மண்ணுக்குள் மறைந்திருக்கும்.
-( , , )
தாய் வெங்காயம், தந்தை உள்ளிப்பூடு, அவன் மட்டும் ரோஜா அத்தர்!
- துருக்கி
ஆயன் மகன் ஆயன்.
- ரஷ்யா