குடும்பப் பழமொழிகள்/குழந்தைகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

குழந்தைகள்

தகப்பனாவதில் சிரமம் ஒன்றுமில்லை.
- துருக்கி

மூன்று பெண்களுக்கு அப்பால் பிறந்த பையன் பிச்சை

யெடுப்பான்; மூன்று பையன்களுக்கு அப்பால் பிறந்த பெண் இராஜ்யத்தை ஆள்வாள்.
- இந்தியா
உன் மகன் நல்லவனானால், நீ ஏன் சேமிக்க வேண்டும்? உன் மகன் தீயவனானால், (அவனுக்காக) நீ ஏன் சேமித்து வைக்க வேண்டும்?
-( ,, )
இருண்ட வீட்டின் ஒளி-மகன். குழந்தையின் ஓட்டம் தாய்வரைக்கும்.
-( ,, )
பதினாறு வயது வரை மகன், அதற்கு மேல் தோழன்.
-( ,, )
குழந்தைகள் இல்லாத வீடு சுடுகாடு.
-( ,, )
பிரியமுள்ள தந்தையரும் தாயாருமே உண்டு, பிரியமுள்ள பிள்ளைகளும் பெண்களும் இல்லை.
சீனா

பெண் பிறக்கும் பொழுது வெளியே பார்த்துக்கொண்டு

வருகிறாள், பையன் பிறக்கும் பொழுது உள்ளே பார்த்துக் கொண்டு வருகிறான்.
-( ,, )
வானத்திற்கு மணி சூரியன், வீட்டுக்கு மணி குழந்தை.
-( ,, )
குழந்தையில்லாத செல்வன் சீமானல்லன்; செல்வமில்லாது குழந்தைகளை மட்டும் பெற்றவன் ஏழையுமல்லன்.
-( ,, )

உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான வாழ்க்கை

வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு எப்பொழுதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள்.
-( ,, )
விளையும் பயிர் முளையில் தெரியும்.
- தமிழ்நாடு

ஆணை அடித்து வளர்க்க, பெண்ணைத் தட்டி வளர்க்க.

-( ,, )
ஐந்துக்கு மேலே அரசனும் ஆண்டி.
- தமிழ் நாடு
(ஐந்து பெண்களுக்கு மேல் பிறந்து விட்டால், பெற்றோரின் செல்வம் காலியாகும்.)
உன் பையனிடம் உனக்கு அன்பிருந்தால், அவனை அடித்து வளர்க்கவும்; வெறுப்பிருந்தால், தின்பண்டங்களை வாங்கி (அவன் வாயில்) திணிக்கவும்.
சீனா
ஐந்து பெண் குழந்தைகளுள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை.
-( , , )
(குடும்பத்தின் சொத்து விரைவிலே தீர்ந்து விடும்.)
கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
-( , , )
பெண் பிறந்தால், வீட்டுக் கதவு நிலை நாற்பது நாள் அழும்.
-அரேபியா

என் இதயம் என் மகனை நோக்கிச் செல்கின்றது, அவ னுடைய இதயமோ ஒரு கல்லை நோக்கிச் செல்கின்றது.

-( , , )
மகள் இருந்தால், தாய்க்குச் செலவு இருந்து கொண்டே யிருக்கும்.
-ஆர்மீனியா
உன் பிள்ளைகளையும் பெண்களையும் நம்பியிருந்தால், உனக்கு இரு கண்ணும் இல்லை.
-பாமா
(நம்பியிருத்தல் வீண்.)

தானாகத் தடுக்கி விழுந்த குழந்தை அழுவதில்லை .

- கால்மிக்
குழந்தைகள் நிறைந்த வீட்டில் சயித்தான் ஆள்வதில்லை.
-குர்திஸ்தானம்
வீடு என்றால், மூன்று குழந்தைகளாவது இருக்கவேண்டும்.
-( , , )
இளமையிலே குழந்தைகள் நம் கைகளுக்கு வலியளிக்கும், முதுமையிலே மனத்திற்கு வேதனையளிக்கும்.
-ஐரோப்பிய நாடோடிகள்
வைசூரி விளையாடிய பிறகு தான், பெற்றோர்கள் குழந்தையைத் தங்கள் குழந்தையாகக் கணக்கிட வேண்டும்.
- ஆப்கானிஸ்தானம்

நன்றியற்ற மகன் தந்தையின் முகத்திலுள்ள பரு; அதை

அப்படியே விட்டிருந்தால் விகாரம், கிள்ளியெறிந்தால் வலி.
-( , , )
தந்தை அழ நேருவதைவிட, குழந்தை அழுதால் அழட்டும்.
-ஜெர்மனி
குழந்தைகளில்லாமல் வாழ்பவன் தொந்தரவுகளை அறியான், குழந்தைகளில்லாமல் மரிப்பவன் மகிழ்ச்சியை அறியான்.
-( , , )

தாய் தன் குழந்தையைத் தழுவினால், அநாதைக் குழந்தையை ஆண்டவர் தழுவிக் கொள்கிறார்.

- போலந்து

குடியானவனுடைய குழந்தைகள் அவன் செல்வங்கள் ;

கனவானுடைய குழந்தைகள் அவன் கடன்கள்; பிரபுவின் குழந்தைகள் திருடர்கள்.
-( , , )

[முற்காலத்தில் பிரபுக்கள் குடியானவர்களைத் துன்புறுத்தி, நில புலன்களைத் தாங்களே கைப்பற்றி வந்ததால், இப்பழமொழி அவர்களுக்கு எதிராக எழுந்த துவேஷத்தைக் காட்டுகின்றது.)

அதிகக் குழந்தைகள் இருந்தால், வீட்டுக் கூரை பிய்ந்து போய்விடாது.
-பெல்ஜியம்
ஒரு குழந்தையுடன் நீ நடக்கலாம்; இரு குழந்தைகளுடன் சவாரி செய்யலாம்; மூன்றாகிவிட்டால் , நீ வீட்டோடு இருக்க வேண்டியது தான்.
- இங்கிலாந்து
வளர்ப்பதற்குச் சொந்தக் குழந்தை யில்லாதவன் அதிருஷ்டமில்லாதவன்.
-அயர்லந்து
குழந்தையில்லாதவன் சும்மா குந்தியிருப்பது வீண்.
-அயர்லந்து

சண்டையிட இருவர், சமாதானத்திற்கு ஒருவர்.

-ஸ்காட்லந்து
[குடும்பத்திற்கு மூன்று குழந்தைகள் போதும்.]
கிழவர்களும் குழந்தைகளும் இல்லாத வீட்டில் வேடிக்கையும் கலகலப்பும் இருக்கமாட்டா.
-( , , )

குழந்தை தன்னைத் தூக்கிவைத்துக் கொஞ்சுகிறவரை

அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துவோரை அறியாது.
- வேல்ஸ்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.
- தமிழ் நாடு
உன் குழந்தைகள் தீயோரா யிருந்தால், நீ அவர்களுக்குச் சொத்து வைக்க வேண்டாம்; அவர்கள் நல்லோராயிருந்தால், உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை.
-பல்கேரியா
குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை.
-டென்மார்க்

அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.

- எஸ்டோனியா
பயமில்லாமல் வளரும் குழந்தை பெருமையில்லாமல் மரிக்கும்.
-( , , )
வசந்த காலம் வந்து குழந்தையை முத்தமிடுகிறது, மாரிக் காலம் வந்து அதை வதைக்கிறது.
-( , , )

குழந்தையின் அருமை அடுத்த குழந்தை வரும்வரை.

-( , , )
குழந்தையின் ரொட்டியில் மணல் கலந்திருக்கும்.
-( , , )
பெண் குழந்தை வீட்டிலிருப்பதைக் கொண்டு செல்லும், ஆண் குழந்தை (வெளியிலிருந்து) கொண்டுவரும்.
-( , , )
மகள் உன் முட்டளவு வளர்ந்து விட்டால், அவளுடைய சீதனப்பெட்டி அவள் மார்பளவு உயரம் இருக்க வேண்டும்.
- எஸ்டோனியா
பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம், அவர்கள் விற்பனைக்குரிய பொருள்கள்.
-எஸ்டோயா
குழந்தையும் உதவிதான் செய்கிறது, ஒரு மீனைக் கழுவுவதற்குள், இரண்டு மீன்களைத் தின்னுகின்றது.
-பின்ந்து

மூடன் தன் குதிரையைப் புகழ்வான், பயித்தியக்காரன்

தன் மருமகளைப் புகழ்வான், அறியாதவன் தன் மகளைப் புகழ்வான்.
-( , , )
ஒற்றைக் குழந்தை கடவுளின் தண்டனை.
-ஹங்கேரி
ஆந்தையும் தன் மகனை இராஜாளி என்றே கருதுகின்து.
-( , , )
தூங்கும் பொழுது சிரிக்கும் குழந்தை தேவர்களுடன் விளையாடுகின்றது.
இதாலி
குழந்தைகள் இல்லாதவனுக்கு அன்பு புரியாது.
-( , , )
அதிருஷ்டமுள்ளவர்கள் மணமாகி மூன்றாம் மாதம் குழந்தையை அடைகிறார்கள்.
-லத்தின்
அதிருஷ்டமுள்ளவனுக்கு முதற் குழந்தை பெண்ணாயாருக்கும்.
-போர்ச்சுக்கல்
மகளின் குழந்தைகள் தன் குழந்தைகளைவிட அருமையானவை.
-ரஷ்யா
நீ தகப்பனாகாமலே வாழ்ந்தால், நீ மனிதனாக இல்லாமலே மரிப்பாய்.
-( , , )
பெண்பிள்ளை கலியாணப் பருவமடையும் பொழுதுதான் பிறந்தவளாகிறாள்.
-( , , )
குழந்தைகளை இதயத்தால் நேசிக்கவும்; ஆனால் கைகளால் பயிற்சி அளிக்கவும்.
-ரஷ்யா
விவாகமான பெண் குழந்தை பக்கத்து வீட்டுக்காரரைப் போலத்தான்.
-( , , )
குழந்தையின் கையும் பன்றித் தொட்டியும் நிறைந்தேயிருக்க வேண்டும்.
- -சுவிட்சர்லந்து
உலகிலே ஒரு குழந்தையை விட்டுச் செல்பவன் நித்தியமாக வாழ்கிறான்.
-ஆப்பிரிகா
முதற் குழந்தை தந்தைக்குத் தோழன்.
-( , , )
குழந்தைகள் தெய்வத்தோடு பேசுகின்றன.
-( , , )
கேள்விகள் கேட்கும் குழந்தை மூடக் குழந்தையன்று.
-( , , )

பெரிய நகருக்குச் சென்றிராத குழந்தை தன் தாய்தான்

தலை சிறந்த சமையற்காரி என்று சொல்லும்.
-( , , )
முதலாவது செல்வம் குழந்தைகள், இரண்டாவதுதான் பணம்.
-( , , )
குழந்தை, ஒட்டகக்கழுத்து மாதிரி, எங்கு வேண்டு மானாலும் நுழையும்.
-( , , )
குழந்தைகளில்லாத எலி ஆற்றோரம் வீடு கட்டிக்கொள்ளும்.
-( , , )
மனிதக் குஞ்சுகள் பறக்க நாளாகும்.
-( , , )
குழந்தைகளே ஏழைகளின் செல்வங்கள்.
- இங்கிலாந்து
குழந்தைகளுக்குச் செவிகள் அகலமானவை, நாவுகள் நீளமானவை.
-( , , )

புறாக்கள் கடலைகளைக் கொத்துவது போல், குழந்தைகள் வார்த்தைகளைக் கொத்தி யெடுத்துக் கொள்ளும்.
குழந்தைகள் இளமையில் தாயிடம் பால் குடிக்கின்றன, முதுமையில் தந்தையிடம் (அறிவுப்) பால் குடிக்கின்றன.

-இங்கிலாந்து

குழந்தை யில்லாதவனுக்கு அன்பு என்ன என்று

தெரியாது.
-( , , )
குழந்தையைக் கொண்டாடினால், தாயின் அன்பைப் பெறலாம்.
-( , , )
இரண்டு தொட்டில்களை ஆட்டுவதைவிட, ஒரு கலப்பையால் உழுவது மேல்.
-( , , )
குழந்தைக்கு முதற்பாடம் பணிவு.
-( , , )
தீப்பட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும்.
-இங்கிலாந்து
நாவை அடக்கப் பழக்கிய குழந்தை விரைவிலே பேசக் - கற்றுக் கொள்ளும்.
-( , , )

குழந்தை பேசுவதெல்லாம் அடுப்பங்கரையில் கற்றவை.

-( , , )
தந்தை அழுவதைவிட, குழந்தை அழுவது மேல்.
-( , , )
குழந்தைகளும் கோழிக் குஞ்சுகளும் எப்பொழுதும் தின்று கொண்டே யிருக்கவேண்டும்.
-( , , )
பகுத்தறிவு உறங்கும் காலம் குழந்தைப் பருவம். -
-ரூஸோ

செல்லக் குழந்தைக்குப் பல பெயர்கள் இருக்கும்.

- டென்மார்க்

குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர்.

-( , , )
அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்பொழுதும் மோசமான குழந்தைகள்.
- ஜெர்மனி
பெற்றோர்கள் நூற்பதைக் குழந்தைகள் கழியில் சுற்ற வேண்டும்.
-( , , )
குழந்தைகளோடு சேர்ந்து விளையாடினால், அவர்களை எப்படியும் திருப்பலாம்.
-ஜெர்மனி
குழந்தை அழாவிட்டால், தாய்க்கு ஒன்றும் புரிவதில்லை.
-ரஷ்யா
குழந்தையை அடித்து வளர்க்காதவன், பின்னால் தன் மார்பிலே அடித்துக் கொள்ள நேரும்.
-துருக்கி