குடும்பப் பழமொழிகள்/சுற்றம்

விக்கிமூலம் இலிருந்து

சுற்றம்

அன்புள்ள அந்நியனும் நமக்கு உறவு தான். - இந்தியா

உறவுள்ள இடத்தில் பகையும் இருக்கும். -( , , )

உதிர்ந்த இறகைப் பசை வைத்துத்தான் ஒட்டவேண்டும்!

-ஆப்பிரிகா

நம் உறவினர்கள் செழிப்பாயிருப்பார்களாக, நாம் அவர்களிடம் செல்லாமல் இருப்போமாக! -போலந்து

அத்தையோடு நீ உண்ணலாம், ஆனால் தினமும் போய் உட்காரக் கூடாது. - இங்கிலாந்து

அதிக உறவினர், அதிகத் துன்பம். - பிரான்ஸ்

நமக்குக் காசு நிறைய இருந்தால், அத்தை பிள்ளைகளும், அம்மான் பிள்ளைகளும் கிடைப்பார்கள். - இதாலி

நீ உன் மனைவியை நேசித்தால், அவளுடைய உறவினரையும் நேசிக்க வேண்டும். -யூதர்

உறவினர் செல்வமடையும் பொழுதுதான் நாம் அவர்களை மதிக்கிறோம். -( , , )

உதிரம் நீரைவிடச் சூடுள்ளது. -எஸ்டோனியா

மிக நெருங்கிய பந்துக்களின் துவேஷமே அதிகமா யிருக்கும். - லத்தீன்

உறவினரைப் போய்ப் பார்த்து வரலாம், அவர்களுடனே வசித்திருக்க முடியாது. - அமெரிக்கா

சிறு புண்களையும் ஏழை உறவினரையும் ஒருபோதும் அலட்சியம் செய்யக் கூடாது. -சுவீடன்

உன் உறவினரே உன்னைக் கொட்டும் தேள்கள். -எகிப்து