குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்/கண்காட்சி உடற்பயிற்சிகள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

11. கண்காட்சி உடற்பயிற்சிகள்

(FANCY DRILLs or SET DRILLS)

உடற்பயிற்சிகளை, எந்த வித உபகரணமும், இன்றி செய்வதை வெறுங்கைப் பயிற்சிகள் (Free Arm Type Exercises) என்பார்கள்.

உடற்பயிற்சிகளை கனம் நிறைந்த எடைகளை கையில் வைத்துக்கொண்டு செய்வதை எடைப் பயிற்சிகள் (Weight Training) என்பார்கள்.

சிறுசிறு இலேசான, வண்ணம் நிறைந்த உபகரணங்களை (Equipment) வைத்துக் கொண்டு செய்யும் உடற்பயிற்சிகளை கண்காட்சி உடற்பயிற்சிகள் (Fancy Drills) என்கிறோம்.

இதை எண்ணிக்கை மூலமாகவும்(On Counts) செய்யலாம். இசை மூலமாகவும் செய்யலாம்.

பள்ளி விழாக்களிலும், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போதும், மற்றும் சமூக விழாக் காலங்களிலும் செய்து காட்டுகிற போது, இப்பயிற்சிகள் எடுப்பாகவும் சிறப்பாகவும் அமைந்து விடுகின்றன.

1. கொடிப் பயிற்சிகள் (Flag Drills)

2. நாலடிக் கம்புப் பயிற்சிகள் (Wand Drills)

3. டம்பெல்ஸ் பயிற்சிகள் (Dumbells)

4. பிரம்பு வளையப்பயிற்சிகள் (Hoop Drills)

5. நீண்ட கம்புப் பயிற்சிகள் (Pole Drills)