உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தை இலக்கியம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode

No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

குழந்தை இலக்கியம்

கவிஞர்
வாணிதாசன்
வள்ளுவர் பண்ணை

22, இரண்டாவது முதன்மைச்சாலை

சி.ஐ.டி. நகர், சென்னை-600 035.

நூல் விவரக் குறிப்பு

நூலின் பெயர் : குழந்தை இலக்கியம்
ஆசிரியரின் பெயர் : கவிஞர் வாணிதாசன்
மொழி : தமிழ்
பொருள் : சிறுவர்களுக்கு நல்ல எண்ணங்களும் பரந்த மனப்பான்மையும் நல்ல பண்புகளும் உண்டாவதற்கு ஏற்ற பாடல்கள். பதிப்பு : முதற் பதிப்பு : ஜூன் 1959 2ஆம் பதிப்பு :ஜூலை 1998 நூலின் உரிமை : ஆசிரியருக்கு. நூலின் அளவு : கிரவுன் 1x8 பயன்படுத்திய தாள் : 11.6 கிலோ வெள்ளைத்தாள் பக்கங்கள் : x + 166 அச்சுப்புள்ளிகள் : 12 புள்ளிகள். ஒளி அச்சு : எல்.கே.எம் கம்ப்யூட்டர் பிரிண்ட்ஸ், சென்னை -17. அச்சகத்தார்  : செல்வ விநாயகர் ஆப்செட், சென்னை - 14. நூல் கட்டு : சாதா அட்டை. விலை. : ரூ. 30-00. பதிப்பாளர்: வள்ளுவர் பண்ணை

KUZHANTHAI ILAKKIYAM :KAVIGNAR VANIDHASAN
PRICE Rs.30-00

உட்படங்கள் : அமரர் சாகர் அட்டைப் படம்  : மணியம் செல்வன்

பதிப்புரை

'ழலையர் அறிவு வளர மொழி வளரும்; நலம் வளரும்; நாடு வளரும்; நல்லரசு நிலவும்!' - இது கவிஞர் வாணிதாசருடைய எண்ணம்.

இவ்வெண்ண அடிப்படையில் அவர்கள் அவ்வப்போது சில பாடல்களை எழுதியிருந்தார்கள். அவற்றைத் திரட்டி ஒரு நூலாக வெளியிட்டால் தமிழ்க் குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படும் என்று கருதினேன். என் கருத்து ஈடேற அவரும், அவர்தம் நண்பர்களாகிய திருவாளர்கள் புலவர் தில்லை தா. அழகுவேலனார், வித்துவான் புதுவை பா. முத்து, நா. அறிவழகன் ஆகியோரும் பெரிதும் உதவினார்கள். மிகுந்த பொருட் செலவையும் பாராது இதனை உருவாக்கிக் குழந்தையர் உலகுக்கு அளித்துள்ளேன். அவர்கள் பெறும் இன்பமே என் இன்பமும்!

இந் நூலை வெளியிட்டுக் கொள்ள இசைவளித்த கவிஞர் வாணிதாசர்க்கும், கருத்துரை நல்கிய தமிழ்க் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதர் அவர்கட்கும், ஓவியங்கள் வரைந்து உதவிய சாகர், சரவணன் ஆகியோர்க்கும், இவ்விரண்டாம் பதிப்பில் மேலட்டை ஓவியம் வரைந்து தந்த மணியம் செல்வன் அவர்களுக்கும் நன்றி!

ந. பழநியப்பன்
உரிமையாளர்
வள்ளுவர் பண்ணை

என் உரை

பாட்டும் கதையும் குழந்தைகளுக்குப் பேரின்பம் ஊட்டுவன. பிஞ்சு உள்ளங்களில் இனிய எளிய முறையில் நல்லறிவைச் சேர்க்கும் முயற்சியே இக்‘குழந்தை இலக்கிய’த்தின் குறிக்கோள் ஆகும்.

இதனைத் தமிழகச் செல்வங்களுக்குப் பயன்படும் வகையில் தொகுத்துதவிய என் அருமை நண்பர்கட்கும், கண்கவர் ஓவியங்களை அமைத்தும் அழகுற அச்சிட்டும் நூல் வடிவாகக் கொண்டுவந்த வள்ளுவர் பண்ணை உரிமையாளர் திரு. ந. பழநியப்பருக்கும், கருத்துரை நல்கியுதவிய சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் அகராதித் துறைத் தலைமையாசிரியர் உயர்திரு. டாக்டர் அ. சிதம்பரநாதர், எம்.ஏ., எம்.எல்.சி., அவர்கட்கும் என் நன்றி!

வாழ்க குழந்தைகள்! வாழ்க தமிழ் மொழி! வாழ்க நம் நாடே!

சேலியமேடு
15-6-1959

வாணிதாசன்

சென்னைப் பல்கலைக் கழக
ஆங்கிலத் தமிழ் அகராதித் துறைத் தலைமை ஆசிரியர்,
உயர்திரு. டாக்டர். அ. சிதம்பரநாதர், எம்.ஏ.எம்.எல்.சி.,
அவர்கள் அளித்த
கருத்துரை

கவிஞர் வாணிதாசன் தமிழுலகுக்கு இப்போது புதுவதாகப் புனைந்து அளித்துள்ள “குழந்தை இலக்கியம்” என்ற தலைப்பில் வந்துள்ள பாடல்களைப் படித்து இன்புற்றேன். சிறு குழந்தைகளுக்கேற்ற பாடல்கள் சிலவும், வயதேறிய குழந்தைகளுக்கேற்ற பாடல்கள் சிலவும் இத்தொகுப்பிற் காணப்படுகின்றன.

கவிதைக்குப் பொருள் எதுவாகவும் இருக்கலாம். இதனைப் பற்றிப் பாடுவதால் கவி சிறப்புறும், இதனைப் பற்றிப் பாடுவதால் கவி சிறப்புறாது என்று கூறுதல் பொருந்தாது. எதனைப் பற்றிப் பாடினாலும், பாடிய முறையைப்பற்றி நோக்குவதுதான் பொருத்தம். அம்முறையில் இப்பாடல் தொகுப்பினை நோக்கினால், திரு. வாணிதாசனின் கவிதைத்திறம் நன்கு விளங்கும்.

நிலவினைப்பற்றிப் பலர் பாடியுள்ளார்கள். இந்தக் கவிஞர்,

”உலகிற் கல்லார் உன்னிடத்தில்,

ஒளவைக் கிழவி உண்டென்பார்;
நிலவே!அந்தக் கிழவிக்கு

நீரும் சோறும் கொடுப்பதியார்?”
எனப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த கருத்தோடு இவ்வாறு பாடும் அதே நேரத்தில், குழந்தைகளுடைய நிலையிலேயே தம்மை வைத்துக் கொண்டு, கவிஞர்,
“தம்பி, தங்கை உனக்குண்டோ?

சாதி, சமயம் உனக்குண்டோ?
வம்பு வேண்டாம், என்தம்பி

வாட்டம் தீர்க்க வருவாயே!”

எனவும் பாடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திங்களில் ஒளவைப் பாட்டி இருக்கிறாள் என்றும், மங்கை ஒருத்தி கைராட்டினம் சுற்றுகிறாள் என்றும், மான் உண்டென்றும் பலர் பலர் கருதி வந்த கருத்துக்களின் பொருந்தாமையைப் புலப்படுத்தி, மக்களுக்குள் உள்ள சாதி சமய வேறுபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இப்பாடற் பகுதிகளில் கவிஞர் குறிப்பாக உணர்த்தி யுள்ளமை பாராட்டத்தக்கது.

இத்தொகுப்பில் வந்துள்ள சிற்றுார் பேரூர் பற்றிய வருணனைகள் முழுதும் படித்துச் சுவைக்கத் தக்கன. சிற்றுாரைச் சிற்றுாராகவும் பேரூரைப் பேரூராகவும் இவர் படம் பிடித்துக் காட்டும் பெற்றியைப் போற்றுதல் வேண்டும்.

“மாட்டை ஓட்டும் ஒருபிள்ளை!

மனையைக் காக்கும் ஒருபிள்ளை!
வீட்டிற் சமைக்கச் சுள்ளிதனை

வெளியில் தேடும் ஒருபிள்ளை!”

என வரும் பாட்டைப் படித்தால், சிற்றுார்க் காட்சி வெளிப்படும் என்பது உண்மை. சிற்றுாரில் அன்பும் வலிவும் அடக்கமும் வாய்மையும் உண்டு என்பதனையும், பேரூரில் வம்பும் தும்பும் வழிப்பறிக் கொள்ளையும் தெருப்புழுதியும் நிறைய உண்டென்பதையும் கவிஞர் விளக்கி உள்ள முறையைக் கண்டுதான் துய்க்கவேண்டும், பேரூரில்,

“உணவு விடுதி பலஉண்டே!

உறங்கும் விடுதி பலஉண்டே!
உணவுக் காக எச்சிலையை

ஓர்ப்பாய்ப் பொறுக்கும் உயிர்உண்டே!"

எனக் கவிஞர் கூறியுள்ள இடத்தில், காசு உள்ளவர்கள் உணவு விடுதிகளில் உண்டு உறங்கி மகிழ்வார்களாக, எச்சிலைப் பொறுக்குதற்காக ஏமாந்து காத்து நிற்கும் மக்கள் சிலர் உள்ளார்களே என்ற இரக்கக் குறிப்புப்படக் கவிஞர் சொல்லியுள்ள விதத்தினை நினைத்து நினைத்து நான் மகிழ்கிறேன்.

சிறுவர்களுக்கு மெய்ப்பொருளாவது கல்வி என்பதும், பெரியோரைக் கண்டால் அவர்கள் 'வணக்கம்' எனச் சொல்ல வேண்டும் என்பதும், வழியில் ஒரமாய்ச் செல்ல வேண்டும் என்பதும், பள்ளிக்கு வேளைகடந்து செல்லக் கூடாது என்பதும், கற்றுத் தெளிவுபெற்று நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதும் எத்துணை இனிமையாகக் கவிஞரின் பாடல்களில் அமைந்துள்ளன!

தொட்ட தொட்ட இடத்தில் எல்லாம். தமிழ்மணம் நூலில் கமழக் காண்கிறேன் என்றாலும், "தாய்மொழியே தமிழ்" என்ற தலைப்பில் வரும் பாடல்களில் அத்தென்றல் வீசக் காண்கிறேன். தமிழ்மொழியினுடைய சிறப்புப் பண்புகள் எல்லாம் “தமிழ் மொழி” என்ற தலைப்பிலும், தமிழ்நாட்டின் சிறப்புக்கள் எல்லாம் “தமிழ்நாடே” என்ற தலைப்பிலும் அழகொழுக எழுதப்பட்டுள.

பள்ளிக்கூடத்திற் படிக்கும் சிறுவர்கள் வயதான பிற்பாடு பாரினை ஆள வேண்டுமென்று நினைப்பவர்கள், பாரினை ஆள வேண்டியவர்கள், கல்வி பயிலுங்கால் படிப்பில் உன்னிப்பாக இல்லாதொழிந்தால், நாளை எவ்வாறு பாரையோ, ஊரையோதான் ஆளமுடியும் என்ற வினாவினை எழுப்புகின்ற கவிஞர், “எப்படி ஆள்வீர்?” என்ற தலைப்பிலே அமைந்துள்ள பாடல்களைப் படிக்குந்தோறும் படிக்குந்தோறும் கவிதையின்பத்தையும் கவிதையின் பயனையும் ஒருவர் அடையாதிருத்தல் இயலாது.

எடுத்துக்காட்டுக்களாகச் சிலவற்றைச் சுட்டிக்காட்டினேன். இக்கவிஞர் இயற்கைப்பொருள்களைப் பற்றியும், செயற்கைப் பொருள்களைப் பற்றியும், விலங்கைப் பற்றியும், பறவைகளைப் பற்றியும், மக்களைப் பற்றியும், மொழியைப் பற்றியும் எவ்வளவு சிறப்புறப் பாடியுள்ளார் என்பதை அறிய வேண்டுவோர் நூலினை வாங்கி ஒதினால் கட்டாயம் உணர்வார்கள் என்பது உறுதி.

பொருத்தமான நல்ல படங்களோடும், நல்ல கட்டிடத்தோடும், அட்டைப் படத்தோடும் கொட்டை அச்செழுத்துக்களில் கண்கவர் வனப்பமைய இதனை வெளியிட்டுள்ள ‘வள்ளுவர் பண்ணை’யாரைப் பாராட்டுகிறேன்.

இவைபோன்ற நூல்கள் தமிழ்ப் பெற்றோராற் பொதுவாகவும், தமிழ்ச் சிறுவர்களாலும் ஆசிரியர்களாலும் சிறப்பாகவும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

சென்னை-5
17-11-1959 அ. சிதம்பரநாதன்

உள்ளுறை
பக்கம்
I.
.  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .  .
1
II.

9
III.

33
IV.

47
V.

61
VI.

79
VII.

95
VIII.

117
IX.

127
X.

149
"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தை_இலக்கியம்&oldid=1519905" இலிருந்து மீள்விக்கப்பட்டது