க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்/5. எதிர்க்காமல் அடங்கினவன்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நியமிப்பதால் அவர்களுக்கு ஏதேனும் பயனுண்டோ என்றோம்.

அவர்கள் வீட்டுக்கு வரியில்லை என்றும், ரோட்டுக்கு வரியில்லை என்றும் சொல்லக் கேள்விப்படுகிறேன் என்றார்.

அப்போது இந்த கமிஷனர்கள் முயற்சி யாவும் சுயனலங்கருதி வீடுகடோரும் வண்டிகொண்டுவருகின்றார்களா பிறர் நலம் கருதியா என்றோம்.

நமது தேசத்தில் பிறர்நலன் கருதி பாடுபடும்படியானவர்களை யான் கண்டதில்லையே என்றார்.

இத்தகைய குணமுடையோர்பால் சுயராட்சியங் கொடுத்தால் என்ன செய்வார்கள் என்றோம்.

வாயாடிகளுக்கு வீடும் வாயிளைத்தவர்களுக்கு பிச்சையேற்கும் ஓடுங் கொடுப்பார்கள் என்று சொல்லிப்போய்விட்டார்.

- 1:28; டிசம்பர் 25, 1907 -


5. எதிர்க்காமல் அடங்கினவன் ஈனசாதியாமோ

நிகழ்ந்த டிசம்பர் மாதம் 31உ செவ்வாய்க்கிழமை வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகை 3-ம் பக்கம் முதற் கலத்தில் கோவிந்ததாஸ் என்னும் ஓரன்பர் எழுதியிருக்குங் கடிதத்தைக் கண்டு மிக்க வியப்புற்றோம்.

அதாவது சீரங்கப் பறையனென்னும் ஒருவனை ஒரு மகமதியன் செருப்பினாலடிக்க அவ்வடிப்பட்டுகொண்டு ஓடிவிட்டானாம் ஏன் ஓடினானென்றால் அவன் ஈனசாதி யானதினாலேயாம். அந்தோ, ஒருவனடிக்க மற்றொருவனடங்கிவிடுவது ஈனசாதிச் செயலா அன்றேல் மோனசாதிச் செயலா என்றுணராது கூறுவது உத்தமமன்று.

அடக்கமென்னுஞ் செயல் மேலோர்களுக்குண்டா, யீனர்களுக்கு உண்டா என்பவை கலை நூற்களில் கல்லாராயினும் தற்காலக் காங்கிரசில் நடந்த கலகத்தையும் அவ்விடமுள்ள மேன்மக்கள் ஒடுங்கிய ஒடுக்கங்களையும் அன்பர் உணர்ந்திரார் போலும், ஈனசாதிகள் ரென்பதையும் மோனசாதிகள் யாரென்பதையும் அன்பர் இனியேனும் அறிந்துக்கொள்ளுவராக,

குறுந்திரட்டு

யீனர்கள் யாவரென்னிலிடுக்கணும் வடுக்கண்செய்வோர்
யீனர்கள் யாவரென்னி லிதயத்தில் வஞ்சமுள்ளோர்
யீனர்கள் கள்ளுஞ் சூது மினவிப சாரமுள்ளோர்
யீனர்க ளினரே யாவரிகனியுதிட்டி ரவ மன்னே
மோனர்கள் யாவரென்னில் மொழிமுதல் மூன்று மாய்ந்தோர்
மோனர்கள் யாரென்னில் முக்குற்றங் கடிந்து நின்றோர்
மோனர்கள் பிணியுமூப்பு மரணமுஞ் செயித்த மேலோர்
மோனர்கள் முனிந்த வாய்மெய், முத்தியு முடையோராமே,

- 1:30; சனவரி 8, 1908 -


6. திரானஸ்வால் ஞானசம்பன்னன்

இம்மாதம் 26உ, புதவாரம் வெளிவந்த “சுதேசமித்திரன்” பத்திரிகையில் ஞானசம்பன்னன் என்னும் கையொப்பம் இட்டு ‘ஐயோ, அநியாயம், அநியாயம்’ என்னும் ஓர்கடிதம் எழுதியிருக்கின்றார், இவரையே தராசுகோலாந் துலாலக்கினாதிபதியென்றும் திரிச்சங்கு மைந்தன் அரிச்சந்திரனுக் கேற்ற சத்திய கீர்த்தியென்றும் கூறலாம் போலும்.

அந்தோ, இவர் எழுதியுள்ள அநியாயக் கடிதம் 64-வது வரியில் “இங்கோ பொறாமைப் பிண்டங்களும் வெள்ளைத் தோல் போர்த்த மிருகங்களும் சுயநலப் பயித்தியங் கொண்ட கண்மூடிகளுமான அற்ப வெள்ளையரே பெரும்பான்மையோரா இருக்கச்சே” என்றும் அதற்குப் பின் வரிகளில் இந்தியர்களில் கனவான்களையும் ஏழைகளையுங் கூலி கூலியென்று அழைத்துவருகின்றார்கள் என்றும் கூலிகளை மட்டிலுங் கூலியென்று அழைக்க வேண்டும் கனவான்களைக் கூலிகள் என்று