சமுத்திரம் கட்டுரைகள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
சமுத்திரம் கட்டுரைகள்
-சு. சமுத்திரம்
ஏகலைவன் பதிப்பகம்
9, இரண்டாவது குறுக்குத் தெரு,
டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,
சென்னை — 600 041.
✆: 4917594
நூல் : சமுத்திரம் கட்டுரைகள்
முதற் பதிப்பு : டிசம்பர், 1999.
வடிவம் : “டெமி”
பக்கங்கள் : 187+13= 200
விலை: ரூ. 45-00
உரிமை : ஆசிரியருக்கு
வெளியீடு :
ஏகலைவன் பதிப்பகம்
9, இரண்டாவது குறுக்குத் தெரு,
டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,
சென்னை — 600 041.
ஒளி அச்சு:
ஏகலைவன், சென்னை - 41.
அச்சு:
பி.கே. ஆப்செட் பிரஸ்,
சென்னை — 600 013.
குகையாளப் பிறந்தவனே!
என்
குழந்தாய்! எழுந்திரடா!
சாதியான கொடிப்பாம்பு
சதி செய்யும் பாம்பு
தாழக் கிடப்பாரைத்
தற்காப்பதே தர்மம்
மானமாக இருந்தால்
மாளுங்கலி தன்னாலே!
வரலாற்றைத் திருப்பிய ஆன்மீகப் போராளியான வைகுண்ட சாமியின் சில கவித்துவ வரிகளை இங்கே திட்டமிட்டே எடுத்துப் போட்டிருக்கிறேன். அன்று அவர் சொன்னது இன்றும் நடைபெறவில்லை என்பதை நினைக்கும்போது, வேதனை ஏற்படுகிறது.
தனிப்பட்ட முறையில் என் வேதனைக்கு எந்தக் காரணமும் இல்லை. ஒரு பாட்டாளி வர்க்கத்தில் - அதுவும் காய்கறிகளை வண்டியில் ஏற்றிச் சென்று, மாடு தள்ளாடும்போது, அந்த மாட்டை விலக்கிவிட்டு தானே ஒரு மாடாகி, வண்டியை ஓட்டிய ஒரு பாட்டாளியின் மகன் நான். இப்போது எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைவான வாழ்க்கையே. நாடறிந்த எழுத்தாளன். ஆயிரக்கணக்கான தோழர்களின் அன்பைப் பெற்றவன். சொந்த வீட்டோடும், காரோடும், இனிமையான மனைவி, மக்களோடும் எந்தக் குறைவுமின்றி வாழ்கிறவன். ஆனாலும், நான் வேதனைப்படுகிறேன். காரணம்
இளமையிலிருந்தே என் மனதை ஆட்டுவிப்பது சமூகக் காரணிகளே. அன்று, ‘ஃபோர்த் பாம்’ எனப்படும் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது, அப்போதைய அரசியல், சமூக நடவடிக்கைகளால் இந்தத் தமிழகம் எப்படி மனநோயாளி மாநிலமாக மாறக்கூடும் என்று நினைத்து வருந்தினேனோ, அந்த வருத்தம் என் விருப்பதிற்கு விரோதமாக நிறைவேறியிருக்கிறது. அன்று துவங்கிய சினிமாத்தனங்களும், தனிநபர் வழிபாடுகளும், லஞ்ச லாவண்யங்களும் இன்று, பல்கி பரவி இருக்கிறது.
அன்றாவது, எங்கள் தலைமுறைக்கு ஒரு சமூகப் பிரக்ஞை இருந்தது. இன்றைய இளைய தலைமுறையைப்போல் நாங்கள் கணிப்பொறி வகையறாக்களிலும், பொது அறிவிலும், திறமையானவர்கள் அல்ல. ஆனால், எங்களுக்குத் தாய்மொழியான தமிழில் பிழையின்றி எழுதவரும். தமிழ்வழி கல்வியில் படித்தாலும், கல்லூரிக் காலத்திலேயே ஆங்கிலத்தில் தேறி நன்றாக எழுதவரும். ஆனால், இன்றைக்கு ஒரு பட்டதாரி மாணவருக்கு மூன்று வரி தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுத முடியவில்லை. அன்று சினிமா நடிகர்-நடிகைகள் மானத்தை பெரிதாக நினைத்தார்கள். இன்றோ முதலிரவைவிட வெளிப்படையான காட்சிகளைப் பார்க்கிறோம். தமிழ் செத்துச் செத்து, ஒரு புதுத் தொலைக்காட்சி தமிழ் உருவாகி வருகிறது அந்தக் காலத்து வேசிகள் எப்படி மாடங்களில் நின்று சீவி சிங்காரித்து கை ஆட்டுவார்களோ, அப்படிப்பட்ட அறிவிப்பாளத் தனங்கள் இருக்கின்றன. பெண்ணியம் வலுப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில்கூட, பாவப்பட்ட பெண்கள் அவர்கள் விருப்பத்திற்கு விரோதமாக, தொழில் ரீதியில் கொச்சைப்படுத்தப்படுகிறார்கள்.எந்த மாநிலத்திலாவது கட்-அவுட்கள் பெரிதாக இருந்தால் அங்கே தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று அர்த்தம். இங்கே உள்ள தமிழன், அங்கே உள்ள தமிழனையும் சினிமாத்தனமாக்கி விட்டான். எந்த மாநிலத்திலும் நடிகர்களுக்கு சங்கங்கள் வைத்து, தோரணம் கட்டி. கற்பூர ஆராதனை செய்து, அவர்கள் காலடியில் மூளையை அடகு வைக்கும் முட்டாள்தனம் இல்லை. இங்கேதான் இந்த மாநிலம் ஒரு மனநோயாளி பூமியாகிவிட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தத்தம் தகுதிகளால் தனிநபர் வழிபாட்டுக்கு உள்ளானார்கள். ஆனால், இன்றோ தகுதி இல்லாத தலைவரைக்கூட, அவர் பேரை சொல்லி அழைக்க முடியாத அளவிற்கு அடிமைத்தனமான தொண்டர்களும், ஆணவத்தனமான தலைவர்களும் தோன்றி விட்டார்கள். குனிந்து விழுந்தால் இந்த ஆணவக்காரர்களுக்கு அல்லது காரிகளுக்கு கோபம் வரும் என்று அப்படியே தொப்பென்று விழுகின்றவர்களும், நமது பிரதிநிதிகளாக பல்வேறு அவைகளில் இருக்கிறார்கள். அன்று நான் கண்ட விபரீத நிலைமை, இப்போது விபத்தாகியிருக்கிறது. எந்த மண்ணை நேசிக்கிறேனோ அந்த மண்ணில் துகள்கள் கண்ணை உறுத்துகின்றன.
மேலே குறிப்பிட்ட சங்கதிகளிலிருந்து, நமது தமிழனை மீட்டு, பெரியவர் என்று வியக்காமலும், சிறியவர் என்று இகழாமலும் இருக்கவேண்டுமென்று நமது முன்னோர்களான கணியன் பூங்குன்றனும், வைகுண்டர், வள்ளலார் போன்றவர்களும் அறிவுறுத்தியதை, செயலாக்க வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டதை காட்டுவதற்கே இந்த கட்டுரைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பு, பல தோழர்கள், கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் மாதிரியல்ல. சாமான்யர்களுக்காக ஒரு சாமான்யன் மேற்கொண்ட கருத்துப் பகிர்வே இது.
எனவே, இன்றைய தமிழனை மீட்டு நாளைய நல்லதோர், வல்லதோர் தாயகத் தமிழனை உருவாக்க இப்போதே முயல வேண்டும். இல்லையானால் எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் குண்டர்களின் குண்டு கலாச்சாரத்திற்கு பலியாகலாம். இதற்கு ஒரு கலாச்சார புரட்சி தேவைப்படுகிறது. இல்லையானால் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தாயகத் தமிழனும், தமிழும் காணாமல் போய்விடுவார்கள்.
இதையே, வாழ்க்கையின் மாலைப் பொழுதில் உள்ள இந்த தாயகத் தமிழ்ச் சமுதாயத்தின் தொண்டனாக கருதும் நான், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு உயிலின் வரைவுபோல் எழுதி முடிக்கிறேன்.
எனது கட்டுரைகளை பிரசுரித்த-பிரசுரிக்கும் அத்தனை பத்திரிகைகளுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
தோழமையுடன்,
சு. சமுத்திரம்.
ஏகலைவன் வெளியீடுகள்
| சிறுகதைத் தொகுப்புகள் | |
| 1. ஒரு மாமரமும், மரங்கொத்திப் பறவைகளும் | ரூ. 40-00 |
| 2. கோரைப்புற்கள் | ரூ. 35-00 |
| 3. ஈச்சம்பாய் | ரூ. 35-00 |
| 4. ஆகாயமும் பூமியுமாய்... | ரூ. 40-00 |
| 5. சிக்கிமுக்கிக் கற்கள் | ரூ. 35-00 |
| நாவல்கள் | |
| 1. மூட்டம் | ரூ. 30-00 |
| 2. பாலைப்புறா | ரூ. 75-00 |
| கட்டுரைத் தொகுப்புகள் | |
| 1. எனது கதைகளின் கதைகள் | ரூ. 45-00 |
| 2. சமுத்திரம் கட்டுரைகள் | ரூ. 45-00 |
| 3. சு. சமுத்திரத்தின் சிறுகதை இயக்கம் (முனைவர் நளினிதேவி) |
ரூ. 35-00 |
கிடைக்கும் இதரப் பதிப்பகங்கள்
மணிவாசகர் பதிப்பகம்,
8/7, சிங்கர் தெரு,
பாரிமுனை, சென்னை - 600 108.
கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (CLS)
பார்க் டவுன், சென்னை - 600 003.
வானதி பதிப்பகம்,
13, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை - 17.
விஜயா பதிப்பகம்,
20, ராஜவீதி, கோவை - 641 001.
| 1. | 1 |
| 2. | 9 |
| 3. | 14 |
| 4. | 19 |
| 5. | 25 |
| 6. | 29 |
| 7. | 35 |
| 8. | 41 |
| 9. | 48 |
| 10. | 55 |
| 11. | 66 |
| 12. | 73 |
| 13. | 80 |
| 14. | 88 |
| 15. | 93 |
| 16. | 98 |
| 17. | 104 |
| 18. | 110 |
| 19. | 115 |
| 20. | 122 |
| 21. | 128 |
| 22. | 147 |
| 23. | 153 |
| 24. | 162 |
| 25. | 168 |
| 26. | 179 |
