திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 48: வரிசை 48:




; இதன்பொருள்:
; இதன்பொருள்: மருண்மாலை= மயங்கிய மாலாய்;
:புன்கண்ணை= நீயும் எம்போலப் புன்கண் உடையாய் இருந்தாய்;
:நின் துணை எம் கேள் போல் வன்கண்ணதோ= நின் துணையும் எந்துணை போல வன்கண்மையுடையதோ, கூறுவாயாக, எ-று.



; உரை விளக்கம்:
; உரை விளக்கம்: மயங்குதல் பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண்-ஒளியிழத்தல். அதுபற்றித் துணயும் உண்டாக்கிக் கூறினாள். எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. எமக்குத் துன்பம் செய்தாய், நீயும் இன்பம் உற்றிலை என்னும் குறிப்பால் வாழி என்றாள்.




வரிசை 67: வரிசை 70:




; இதன்பொருள்: பனி அரும்பிப் பைதல்கொள் மாலை= காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை;
; இதன்பொருள்:
:துனி அரும்பித் துன்பம் வளர வரும்= இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்துதோன்றி அதற்குளதாம் துன்பம் ஒருகாலைக்கொருகால் மிக வாரா நின்றது, எ-று.


; உரை விளக்கம்:


; உரை விளக்கம்: குளிர்ச்சி தோன்ற மயங்கி வருமாலை என்னும் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி-உயிர்வாழ்தற்கண் வெறுப்பு. அதனால் யான் ஆற்றுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.




வரிசை 88: வரிசை 92:




; இதன்பொருள்: மாலை= காதலர் உள்ளபொழுதெல்லாம் என்னுயிர் தளிர்ப்ப வந்தமாலை;
; இதன்பொருள்:
:காதலர் இல்வழி= அவரி்ல்லாத இப்பொழுது;
:கொலைக்களத்து ஏதிலர் போல வரும்= அஃது ஒழிந்துநிற்றலேயன்றிக் கொல்லுங் களரியிற் கொலைஞர் வருமாறு போல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது, எ-று.



; உரை விளக்கம்:
; உரை விளக்கம்: ஏதிலர்- அருள்யாதும் இல்லார். முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பம் செய்து வந்தபொழுதும், இன்று என்மேல் பகையாய்த் துன்பம்செய்து வாராநின்றது. இனி, யான் ஆற்றுமாறு என்னை என்பதாம்.




வரிசை 106: வரிசை 113:
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்.]<br /> </big></B> </FONT>
<FONT COLOR=" "><B><big>[தொடரமைப்பு: யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்.]<br /> </big></B> </FONT>


; இதன்பொருள்:


; இதன்பொருள்:யான் காலைக்குச் செய்த நன்று என்கொல்= (காலையும், மாலையும் அவர் கூடியஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன அவற்றுள்) யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது;
; உரை விளக்கம்:
:மாலைக்குச் செய்த பகை எவன்= மாலைக்குச் செய்த அபகாரம் யாது, எ-று.


; உரை விளக்கம்: கூடியஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால்' 'நன்று என்கொல்' என்றும், கூடியஞான்று இன்பம் செய்துவந்த மாலை, அஃதொழிந்து இஞ்ஞான்று அளவில் துன்பம் செய்யாநின்றது என்னும் கருத்தால், 'பகையெவன்கொல் என்றும் கூறினாள். பகை- ஆகுபெயர் தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.





00:11, 15 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்

பரிமேலழகர் உரை

அதிகாரம் 123. பொழுது கண்டு இரங்கல்

அதிகார முன்னுரை
அஃதாவது, மாலைப்பொழுது வந்துழி அதனைக்கண்டு தலைமகள் இரங்குதல். 'கனா முந்துறாத வினையில்லை' என்பது பற்றிப் பகற்பொழுது ஆற்றியிருந்தாட்கு உரியதாகலின், இது கனவுநிலையுரைத்தலின் பின் வைக்கப்பட்டது.


குறள் 1221 ( மாலையோ)

(பொழுதொடு புலந்து சொல்லியது. )


மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும் ( ) மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்

வேலைநீ வாழி பொழுது. (01) வேலை நீ வாழி பொழுது.


[தொடரமைப்பு: பொழுது, நீ மாலையோ அல்லை, மணந்தார் உயிர் உண்ணும் வேலை.]


இதன்பொருள்
பொழுது= பொழுதே!
நீ மாலையோ அல்லை= நீ முன்னாள்களின் வந்த மாலையோவெனின், அல்லை;
மணந்தார் உயிர் உண்ணும் வேலை= இருந்தவாற்றான் அந்நாட்காதலரை மணந்த மகளிர் உயிரை உண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய், எ-று.


உரைவிளக்கம்
முன்னாள்= கூடியிருந்தநாள். அந்நாள் மணந்தார் எனவே, பின் பிரிந்தாரதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச்சொல். "வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங் காலை" (கலித்தொகை, நெய்தற்கலி-2)என்றாற்போல ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாய் இருந்தாய் என்பாரும் உளர்.


குறள் 1222 ( புன்கண்ணை)

(தன்னுட் கையாற்றை அதன் மேலிட்டுச் சொல்லியது. )


புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல் ( ) புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்

வன்கண்ண தோநின் றுணை. (02) வன்கண்ணதோ நின் துணை.


[தொடரமைப்பு: மருள்மாலை, புன்கண்ணை, நின் துணை எம் கேள் போல் வன்கண்ணதோ.]


இதன்பொருள்
மருண்மாலை= மயங்கிய மாலாய்;
புன்கண்ணை= நீயும் எம்போலப் புன்கண் உடையாய் இருந்தாய்;
நின் துணை எம் கேள் போல் வன்கண்ணதோ= நின் துணையும் எந்துணை போல வன்கண்மையுடையதோ, கூறுவாயாக, எ-று.


உரை விளக்கம்
மயங்குதல் பகலும் இரவும் தம்முள்ளே விரவுதல்; கலங்குதலும் தோன்ற நின்றது. புன்கண்-ஒளியிழத்தல். அதுபற்றித் துணயும் உண்டாக்கிக் கூறினாள். எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. எமக்குத் துன்பம் செய்தாய், நீயும் இன்பம் உற்றிலை என்னும் குறிப்பால் வாழி என்றாள்.


குறள் 1223 ( பனியரும்பிப்)

( ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.)


பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித் ( ) பனி அரும்பிப் பைதல் கொள் மாலை துனி அரும்பித்

துன்பம் வளர வரும். (03) துன்பம் வளர வரும்.


[தொடரமைப்பு: பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித் துன்பம் வளர வரும்.]
]


இதன்பொருள்
பனி அரும்பிப் பைதல்கொள் மாலை= காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை;
துனி அரும்பித் துன்பம் வளர வரும்= இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்துதோன்றி அதற்குளதாம் துன்பம் ஒருகாலைக்கொருகால் மிக வாரா நின்றது, எ-று.


உரை விளக்கம்
குளிர்ச்சி தோன்ற மயங்கி வருமாலை என்னும் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி-உயிர்வாழ்தற்கண் வெறுப்பு. அதனால் யான் ஆற்றுமாறு என்னை என்பது குறிப்பெச்சம்.


குறள் 1224 ( காதலரில்வழி)

( இதுவுமது)


காதல ரில்வழி மாலை கொலைக்களத் ( ) காதலர் இல்வழி மாலை கொலைக் களத்து

தேதிலர் போல வரும். (04) ஏதிலர் போல வரும்.


[தொடரமைப்பு: மாலை, காதலர் இல்வழி, கொலைக்களத்து ஏதிலர் போல வரும். ]


இதன்பொருள்
மாலை= காதலர் உள்ளபொழுதெல்லாம் என்னுயிர் தளிர்ப்ப வந்தமாலை;
காதலர் இல்வழி= அவரி்ல்லாத இப்பொழுது;
கொலைக்களத்து ஏதிலர் போல வரும்= அஃது ஒழிந்துநிற்றலேயன்றிக் கொல்லுங் களரியிற் கொலைஞர் வருமாறு போல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது, எ-று.


உரை விளக்கம்
ஏதிலர்- அருள்யாதும் இல்லார். முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பம் செய்து வந்தபொழுதும், இன்று என்மேல் பகையாய்த் துன்பம்செய்து வாராநின்றது. இனி, யான் ஆற்றுமாறு என்னை என்பதாம்.


குறள் 1225 ( காலைக்குச்)

(இதுவுமது )


காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான் () காலைக்குச் செய்த நன்று என்கொல் எவன்கொல் யான்

மாலைக்குச் செய்த பகை. (05) மாலைக்குச் செய்த பகை.


[தொடரமைப்பு: யான் காலைக்குச் செய்த நன்று என்கொல், மாலைக்குச் செய்த பகை எவன்கொல்.]


இதன்பொருள்
யான் காலைக்குச் செய்த நன்று என்கொல்= (காலையும், மாலையும் அவர் கூடியஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன அவற்றுள்) யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது;
மாலைக்குச் செய்த பகை எவன்= மாலைக்குச் செய்த அபகாரம் யாது, எ-று.


உரை விளக்கம்
கூடியஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால்' 'நன்று என்கொல்' என்றும், கூடியஞான்று இன்பம் செய்துவந்த மாலை, அஃதொழிந்து இஞ்ஞான்று அளவில் துன்பம் செய்யாநின்றது என்னும் கருத்தால், 'பகையெவன்கொல் என்றும் கூறினாள். பகை- ஆகுபெயர் தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.


குறள் 1226 ( மாலைநோய்)

(இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவுக்கு உடம்பட்டது என்னை என்றாட்குச் சொல்லியது.)


மாலைநோய் செய்தன் மணந்தா ரகலாத ( ) மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை யறிந்த திலேன். (06) காலை அறிந்தது இலேன்.


[தொடரமைப்பு: மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்.]


இதன்பொருள்
உரை விளக்கம்


குறள் 1227 ( காலையரும்பி)

(மாலைப்பொழுதின்கண் இனையை ஆதற்குக் காரணம் என்னை என்றாட்குச் சொல்லியது.)


காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி ( ) காலை அரும்பிப் பகல் எல்லாம் போது ஆகி

மாலை மலருமிந் நோய். (07) மாலை மலரும் இந் நோய்.


[தொடரமைப்பு: இந்நோய், காலை அரும்பிப், பகல் எல்லாம் போது ஆகி, மாலை மலரும்.]


இதன்பொருள்
உரை விளக்கம்

குறள் 1228 ( அழல்போலு)

(இதுவுமது )


அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன் ( ) அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி ஆயன்

குழல்போலுங் கொல்லும் படை. (08) குழல் போலும் கொல்லும் படை.


[தொடரமைப்பு: ஆயன் குழல், அழல் போலும் மாலைக்குத் தூதாகி, கொல்லும் படை.]

இதன்பொருள்
உரை விளக்கம்


குறள் 1229 ( பதிமருண்டு)

( இதுவுமது )


பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு ( ) பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு

மாலை படர்தரும் போழ்து. (09) மாலை படர்தரும் போழ்து.


[தொடரமைப்பு:மதி மருண்டு மாலை படர்தரும் போழ்து, பதி மருண்டு பைதல் உழக்கும். ]


இதன்பொருள்
உரை விளக்கம்


குறள் 1230 ( பொருண்மாலை)

(இதுவுமது )


பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை () பொருள்மாலையாளரை உள்ளி மருள் மாலை

மாயுமென் மாயா வுயிர். (10) மாயும் என் மாயா உயிர்.


[தொடரமைப்பு: மாயா என் உயிர், பொருள்மாலையாளரை உள்ளி மருள்மாலை மாயும்.]


இதன்பொருள்
உரை விளக்கம்


பார்க்க:

திருக்குறள் அதிகாரம் 124.உறுப்புநலனழிதல்
திருக்குறள் அதிகாரம் 122.கனவுநிலையுரைத்தல்
திருக்குறள் பொருட்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் காமத்துப்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் அறத்துப்பால் பரிமேலழகர் உரை
திருக்குறள் பொருட்பால் இயல் 1.அரசியல்
திருக்குறள் பொருட்பால் இயல் 2.அங்கவியல்
திருக்குறள் பொருட்பால் இயல் 3.ஒழிபியல்
[[]]  : [[]]  : [[]]  : [[]]