பட்டினப்பாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமூலம் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Meykandan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 212: வரிசை 212:


:வளிநுழையும் வாய்பொருந்தி
:வளிநுழையும் வாய்பொருந்தி
:யோங்குவரை மருங்கி னூண்டா துறைக்குங்
:யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங்
:காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
:காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
:செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
:செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்

01:21, 22 மே 2010 இல் நிலவும் திருத்தம்



சோழன் கரிகாற் பெருவளத்தானைக்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பாடியது.

அகப்பாடல்

திணை: பாலைத்திணை

துறை:செலவழுங்கல் துறை

கூற்று: தலைவன் கூற்று

கேட்போர்: நெஞ்சுக்குக் கூறியது

(பிழையில்லா மெய்ப்பதிப்பு)

பட்டினப்பாலை-மூலம்

வசையில்புகழ் வயங்குவெண்மீன்
றிசைதிரிந்து தெற்கேகினுந்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா // 05 //
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்
விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின் கமழாலைத்
தீத்தெறுவிற் கவின்வாட
நீர்ச்செறுவி னீணெய்தற்
பூச்சாம்பும் புலத்தாங்கட்
காய்ச்செந்நெற் கதிரருந்தும்
மோட்டெருமை முழுக்குழவி
கூட்டுநிழற் றுயில்வதியுங் // 15 //
கோட்டெங்கிற் குலைவாழைக்
காய்க்கமுகிற் கமழ்மஞ்ச
ளினமாவி னிணர்ப்பெண்ணை
முதற்சேம்பின் முளையிஞ்சி
யகனகர் வியன்முற்றத்துச் // 20 //
சுடர்நுதன் மடநோக்கி
னேரிழை மகளி ருணங்குணாக் கவருங்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் // 25 //
விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக்
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி // 30 //
பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங்
கழிசூழ்படப்பைக் கலியாணர்ப்
பொழிற்புறவிற் பூந்தண்டலை
மழைநீங்கிய மாவிசும்பின்
மதிசேர்ந்த மகவெண்மீ // 35 //
னுருகெழுதிற லுயர்கோட்டத்து
முருகமர்பூ முரண்கிடக்கை
வரியணிசுடர் வான்பொய்கை
யிருகாமத் திணையேரிப்
புலிப்பொறிப் போர்க்கதவிற் // 40 //
றிருத்துஞ்சுந் திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
வறநிலைஇய வகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி
யேறுபொரச் சேறாகித்
தேரோடத் துகள்கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயின் மாசூட்டுந் // 50 //
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவி
னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு
மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம் // 55 //
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
முதுமரத்த முரண்களரி
வரிமண லகன்றிட்டை
யிருங்கிளை யினனொக்கற்
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமைப் புழுக்குண்டும்
வறளடும்பின் மலர்மலைந்தும் // 65 //
புனலாம்பற் பூச்சூடியு
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்
கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் // 70 //
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ
திருஞ்செருவி னிகன்மொய்ம்பினோர்

கல்லெறியுங் கவண்வெரீஇப்
புள்ளிரியும் புகர்ப்போந்தைப்
பறழ்ப்பன்றிப் பல்கோழி // 75 //
யுறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல்விளை யாடக்
கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லி னரண்போல
நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய // 80 //
குறுங்கூரைக் குடிநாப்ப
ணிலவடைந்த விருள்போல
வலையுணங்கு மனன்முன்றில்
வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த
வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் //85 //
சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை யிரும்பரதவர் // 90 //
பைந்தழைமா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா
துவவுமடிந் துண்டாடியும்
புலவுமணற் பூங்கானன்
மாமலை யணைந்த கொண்மூப் போலவுந் // 95 //
தாய்முலை தழுவிய குழவி போலவுந்
தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கு
மலியோதத் தொலிகூடற்
றீதுநீங்கக் கடலாடியு
மாசுபோகப் புனல்படிந்து // 100 //
மலவனாட்டியு முரவுத்திரை யுழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு
மகலாக் காதலொடு பகல்விளை யாடிப்
பெறற் கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும்
பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் // 105 //

துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்து
மட்டுநீக்கி மதுமகிழ்ந்து
மைந்தர் கண்ணி மகளிர் சூடவு
மகளிர் கோதை மைந்தர் மலையவு // 110 //
நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக்
கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும்
பாட லோர்த்து நாடக நயந்தும்
வெண்ணிலவின் பயன்றுய்த்துங்
கண்ணடைஇய கடைக்கங்குலான் //115 //
மாஅகாவிரி மணங்கூட்டுந்
தூஉவெக்கர்த் துயின்மடிந்து
வாலிணர் மடற்றாழை

வேலாழி வியன்றெருவி
னல்லிறைவன் பொருள்காக்குந் // 120 //
தொல்லிசைத் தொழின்மாக்கள்
காய்சினத்த கதிர்ச்செல்வன்
றேர்பூண்ட மாஅபோல
வைகறொறு மசைவின்றி
யுல்குசெயக் குறைபடாது // 125 //
வான்முகந்த நீர் மலைப்பொழியவு
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவு
நிலத்தினின்று நீர்ப்பரப்பவு // 130 //
மளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
யருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி //135 //
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை // 140 //
யேழகத் தகரோ டுகளு முன்றிற்

குறுந்தொடை நெடும்படிக்காற்
கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்
புழைவாயிற் போகிடைகழி
மழைதோயு முயர்மாடத்துச் //145 //
சேவடிச் செறிகுறங்கிற்
பாசிழைப் பகட்டல்குற்
றூசுடைத் துகிர்மேனி
மயிலியன் மானோக்கிற்
கிளிமழலை மென்சாயலோர் // 150 //
வளிநுழையும் வாய்பொருந்தி
யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங்
காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் // 155 //
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து
மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய
மலரணி வாயிற் பலர்தொழு கொடியும் //160 //
வருபுன றந்த வெண்மணற் கான்யாற்
றுருகெழு கரும்பி னொண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வாலரிசிப் பலிசிதறி // 165 //
பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரிய // 170 //
ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும்
வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
மிசைக்கூம்பி னசைக்கொடியு// 175 //
மீன்றடிந்து விடக்கறுத்
தூன்பொரிக்கு மொலிமுன்றின்
மணற்குவைஇ மலர்சிதறிப்
பலர்புகுமனைப் பலிப்புதவி
னறவுநொடைக் கொடியோடு // 180 //
பிறபிறவு நனிவிரைஇப்
பல்வேறு ருருவிற் பதாகை நீழற்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்

செல்லா நல்லிசை யமரர் காப்பி
னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் // 185 //
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங்
குடமலைப் பிறந்த வாரமு மகிலுந்
தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங்
கங்கை வாரியுங் காவிரிப் பயனு // 190 //
மீழத் துணவுங் காழகத் தாக்கமு
மரியவும் பெரியவு நெரிய வீண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி
னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு
மேமாப்ப வினிதுதுஞ்சிக் // 195 //
கிளைகலித்துப் பகைபேணாது
வலைஞர்முன்றின் மீன்பிறழவும்
விலைஞர் குரம்பை மாவீண்டவுங்
கொலைகடிந்துங் களவுநீக்கியு
மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு // 200 //
நல்லானொடு பகடோம்பியு
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும்
புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசையுழவர் // 205 //
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நன்னெஞ்சினோர்
வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவு மொப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது // 210 //
பல்பண்டம் பகர்ந்துவீசுந்
தொல்கொண்டித் துவன்றிருக்கைப்
பல்லாயமொடு பதிபழகி
வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற்
சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு // 215 //
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்துனி துறையு
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் // 220 //

கொடுவரி்க் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி
யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிபுக் காங்கு
நுண்ணிதி னுணர நாடி நண்ணார் // 225 //
செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித்
துருகெழு தாய மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா // 230 //
ளுகிருடை யடிய வோங்கெழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத்
தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் // 235 //
பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச
மாக்க ணகலறை யதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சம முருக்கித்
தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி
வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி // 240 //
மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவிய மயங்கி நீரற்
றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங் // 245 //

கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி
யந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்
பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் // 250 //
பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு
மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச் // 255 //
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு
மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங்
கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங் // 260 //
கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி
விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி
லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் //265 //
கொடுவிலெயினர் கொள்ளை யுண்ட
வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு
மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப்
பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற // 270 //

மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே
வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத்
தான்முன்னிய துறைபோகலிற்
பல்லொளியர் பணிபொடுங்கத்
தொல்லருவாளர் தொழில்கேட்ப // 275 //
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர்
மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண்
மாத்தானை மறமொய்ம்பிற்
செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் // 280 //
புன்பொதுவர் வழிபொன்ற
விருங்கோவேண் மருங்குசாயக்
காடுகொன்று நாடாக்கிக்
குளந்தொட்டு வளம்பெருக்கிப்
பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் // 285 //
கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயிறொறும் புதைநிறீஇப்
பொருவேமெனப் பெயர்கொடுத்
தொருவேமெனப் புறக்கொடாது // 290 //
திருநிலைஇய பெருமன்னெயின்
மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி
விசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற்
பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு // 295 //
முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ்
செஞ்சாந்து சிதைந்த மாப்பி னொண்பூ
ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்
றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய
வேலினும் வெய்ய கானமவன் // 300 //
கோலினுந் தண்ணிய தடமென் றோளே.

சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை முற்றும்

இப்பாடலின் மொத்த அடிகள்: 301 (முந்நூற்றொன்று)

பாவகை: வஞ்சிப்பா (வஞ்சிநெடும்பாட்டு என்றும் இதனை அழைப்பர்: தமிழில் உள்ள வஞ்சிப்பா வகையில் மிகப் பெரியது இதுவே)

வெண்பா

முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
இச்சக் கரமே யளந்ததாற்- செய்ச்செய்
அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
கரிகாலன் கானெருப் புற்று.
இந்தவெண்பா பொருநராற்றுப்படையின் இறுதியிலுள்ள மூ்ன்றாவது வெண்பாவாகவும் உள்ளது.

முக்கியச் செய்திகள்

பெயர் விளக்கம்:
நச்சினார்க்கினியர் கூறுவது:
"இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையாகலின், இதற்குப் பட்டினப்பாலை யென்று பெயர் கூறினார்.
பாலையாவது பிரிதலும் பிரிதனிமித்தமும் கூறுவது.
இப்பாட்டு , வேற்றுநாட்டகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவழுங்கிக் கூறியது; (தொல். கற்பு. சூ. 5). இது, முதலும் கருவுங் கூறாது உரிப்பொருளே சிறப்பக் கூறியது".
வினைமுடிபு:
"https://ta.wikisource.org/w/index.php?title=பட்டினப்பாலை&oldid=4695" இலிருந்து மீள்விக்கப்பட்டது