பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
Ravidreamsbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:26, 24 மார்ச்சு 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (+கூகுள் ஒளிவழி எழுத்துணரி உரை)
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24? இடைக்காலத்தில் இவர் வளர்த்துக் கொண்ட ஐம்ப தாண்டு பெரும் புலமையின் விளைவாக ஐம்பது நூல்கள் வெளிவந்து மலையாள இலக்கியப் பயிரைச் செழுமைப் படுத்தின இவரது நூல்கள் அனைத்தும் புத்திலக்கியப் படைப்புக்கள் அல்லவெனினும் அவை புத்திலக்கியச் சிந்தனைக்கு வலுவூட்டுவன என்பதில் ஐயமில்லை. பல்வேறு துறைகளைப் பற்றிய நூல்களை இன்று எழுதிக் குவிததுள்ள இவர் தொடக்கத்தில் தலைசிறந்த "வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்' என்ற முறையிலேயே அறிமுகமாகி புகழ்பெற்றார் இன்றுமrட இவரளவுக்கு வாழ்க்கை வரலாறுகளைச் சுவைபடச் சித்தரிக்கும வேறு மலையாள எழுததாளாகளைக் காண்பதரிது மென் ஆஃப் லெட்டர்ஸ்' என்ற ஆங்கில நூலின் ,பாணியில் மலையாளத்தில் "கேரள பாஷா ப்ரணயிகள்' (கேரள மொழி காதலர்கள்) என்ற தலைப்பில் வாழ்க்கை வர லாற்றுத் தொடர் நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட் டார் வாழ்க்கை வரலாற்றைச் சுவைபடக் கூறுவதோடு அவர் தம் படைப்புக்களையும் திறமபடத் திறனாய்வு செய்வது இவரது இயல்பு இதன் மூலம் இந்நூல்கள் வாழ்க் கை வரலாற்று நூல்களாகவும் அதே சமயத்தில் தலை சிறந்த திறனாய்வு நூல்களாகவும் அமைந்தன. அவற்றுள் மிகச் சிறநத திறனாய்வு நூலாக 'மகாகவி கே. சி' என்ற வாழ்க்கை வரலாற்று நூல் இன்றும் அறிஞர்களால் போறறப்படுகிறது. தனித் திறனாய்வு நூல்கள் பலவற்றையும் இவர் எழுதியுள்ளார் காய்தல் உவத்தல் இன்றி நடுவு நிலைமை யில் நின்று திறனாய்வு செய்வதோடு புத்துலகத் திறனாய் வுப் போக்கிற்கேற்ப புது வழி வகுத்துத் திறனாய்வு செய் வதும் இவரிடமுள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும் 'சாகித்திய சer" | மிஸ்ர காந்தி" ஸ்வர்ண ரஸ்மிகள்'