சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்
சிறுகதைப் படைப்பின்
உள் விவகாரம்
மேலாண்மை பொன்னுச்சாமி
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை - 600017.
முதற் பதிப்பு : மே , 1994 இரண்டாம் பதிப்பு : நவம்பர், 2007 உரிமை : ஆசிரியருக்கு
- கங்கை வெளியீடு
- கங்கை வெளியீடு
- விலை : ரூ. 60.00
TITLE SIRUKATHAI PADAIPPIN
ULL VIVAKARAMAUTHOR MELANMAI PONNUSAMY LANGUAGE TAMIL SUBJECT Criticism on Short Story Writing EDITION Second Edition, November, 2007 PAGES xvi + 184 = 200 Published by GANGAI PUTHAGA NILAYAM
23, Deenadayalu Street,
Thyagaraya Nagar,CHENNAI - 600 017
Tel: 24342810, 24310769PRICE : Rs.60.00
- Laser Typeset at:
- M.H. Computers, Chennai-600 071
- Printed at: Padmavathi Offset., Chennai - 2.
சமர்ப்பணம்
முற்போக்கு மனோபாவம் கொண்ட
யதார்த்த சிறுகதை எழுத்தாளர்களுக்கு
அடிஉரமாகவும், ஒளிகாட்டியாகவும்
விளங்கிய தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள்
புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி
இருவருக்கும்.
முன்னுரையாய்...
சில வார்த்தைகள்
சிறுகதை இலக்கியம் குறித்துத் தீர்ப்பு கூறுகிற தகுதி எனக்கு உண்டா? ‘இதுதான் சிறுகதை, இப்படித்தான் சிறுகதை’ என்று இலக்கணம் வகுக்கும் அருகதை எனக்கு உண்டா?
தெரியவில்லை.
அப்படி எதுவும் சொல்லவும் நான் முயலவில்லை. சிறுகதை எழுதுகிற முயற்சியில் ஈடுபடுகிறபோது நேர்கிற பிரச்னைகளை– விவகாரத்தை– பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்.
எந்த ஒரு படைப்பாளியும் ‘கதையின் கதைகள்’ கூறுவார். வெற்றி பெற்ற இனிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். ஆனால், படைப்பு முயற்சிகளில் நேர்ந்த சறுக்கல்களை– தோல்விகளை– யாரேனும் சொல்லுவார்களா? சொல்கிற மனத்துணிவு வருமா?
வரவேண்டும் என்பது என் விருப்பம்.
எந்த ஒரு படைப்பாளியும் ஆலமரமாக நிற்கக் கூடாது. காலடியில் ஒரு புல் பூண்டைக்கூட முளைக்க விடாது, ஆலமரம். வாழை அப்படியல்ல. கன்றுகளை வளர்த்துத் தரும்.
மக்கள் நேயப் படைப்பாளிகள் வாழைகளாகவே இருந்து வந்திருக்கிறார்கள். மாக்ஸிம் கார்க்கி தமது அணி அலங்கார நடை குறித்த சுயவிமர்சனத்தை கட்டுரைகளிலேயே எழுதியிருக்கிறார். அவரது சித்தரிப்பு முறையில் நிகழ்ந்த கேலிக் கூத்தை செக்காவும், லியோ டால்ஸ்டாயும் சுட்டிக் காட்டி பரிகசித்ததை மிகுந்த தன்னம்பிக்கையோடு வாசகர்களோடு பகிர்ந்திருக்கிறார்.
இந்த நூலில் நானும் எனது தோல்விகளை– சறுக்கல்களை– பகிரங்கப்படுத்தியிருக்கிறேன். இதனால் என்னைப் பற்றிய மதிப்பீடு சிதையும் என்ற அச்சம் எனக்கில்லை.
வாழ்க்கையும், மக்களும் வெறும் களிமண்ணாக இருந்த என்னை வார்த்து, செதுக்கி, எழுத்தாளனாக்கியிருக்கிற போது, நான் இழந்து போக எந்த ‘இமேஜை’யும் சொத்தாகக் கொண்டிருக்க நியாயமில்லை.
இந்த நூலில் நான் பகிர்ந்துள்ள படைப்பனுபவங்கள், இளம் எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேருக்குப் பயன்பட்டால்கூட எனக்குச் சந்தோஷம்தான்.
இப்படியொரு கட்டுரை நூல் எழுத வேண்டும் என்று நான் நினைத்ததுமில்லை. அப்படியோர் திறமை எனக்குள் இருப்பதாக நம்பியதுமில்லை.
‘செம்மலர்’ மாத இதழுக்குத் துணையாசிரியராக இருந்து மாதந்தோறும் உதவி செய்யப்போவேன். ‘செம்மலர்’ எனது நாற்றங்கால். என்னை முளைக்க வைத்து, பயிராக வளரச் செய்து, பண்படுத்தி, என்னை எனக்கும், உலகுக்கும் காட்டிய இதழ். அதற்காக பணியாற்றுகிற போது, எனது இமேஜைப் பற்றி எண்ணியே பார்க்க மாட்டேன்.
அப்படித்தான்... செம்மலரின் தேவைக்காக ஒரு கட்டுரை எழுதினேன். அப்புறம் சில மாதங்கள் கழித்து இரண்டு கட்டுரை எழுதினேன். பேரா. கதிரேசன் அவர்கள், ‘இதைத் தொடர்ந்து எழுதுங்களேன்’ என்றார். தோழர் அ. குமரேசனும், தி. வரதராசனும் ஊக்குவித்தார்கள்.
எழுத ஆரம்பித்தேன்.
அப்படி எழுதிய கட்டுரைகளைத்தான் இப்போது எடுத்து, மறுபடி பல திருத்தங்களுடன் எழுதி... இந்த நூலாக வடிவம் கொண்டிருக்கிறது.
நூலை எழுதியவன் நான்தான் என்றாலும், எழுதத்தூண்டிய– உற்சாகப்படுத்திய– தோழர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இந்தக் கட்டுரைகளை எழுதும் காலத்திலேயே என்னை விமர்சித்த தோழர்களும் உண்டு. அந்தத் தோழர்களுக்கும் ‘என் நன்றி’களைச் சொல்லியாக வேண்டும். ஏனெனில், இந்தத் தோழர்கள்தான், எனது மனச்சாட்சியாக நின்று என்னை நெறிப்படுத்தியிருக்கிறார்கள். அப்படியொரு தோழர் எழுத்தாளர், ச. தமிழ்ச்செல்வன்.
இது பொதுவாக சிறுகதை எழுத்தாளர்கள் நிறைய அரும்புகிற காலம். குற்றாலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ‘சிறுகதை பயிற்சி முகாம்’ நடைபெற்றது. அந்த மூன்று நாளில் பங்கெடுத்துக் கொண்ட தோழர்கள், சிறுகதைப் படைப்பில் எத்தனை ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதை என் மனசால் உணர முடிந்தது.
அப்படிப்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு இந்த நூல் நிச்சயமாக உதவியாக இருக்கும் என்று நினைத்தேன்.
பயிற்சி முகாமில் பகிர்ந்து கொள்ள இயலாமல் போன நிறைய விஷயங்கள் இந்த நூலில் இடம் பெற்று இருப்பதை முகாமின் நாளிலேயே உணர்ந்தேன்.அந்த மாதிரியான இளம் படைப்பாளிகளுக்கு இந்த நூல் சிறிய வெளிச்சமாக இருந்தால்கூட... என் உழைப்பு உரிய பலனைப் பெற்றுவிட்டதாக மகிழ்வேன்.
உரைநடை இலக்கிய வகையிலேயே சிறுகதை வடிவம், மிகுந்த நுட்பமான கலைவடிவம். ஏகப்பட்ட வாழ்வியல் ஞானமும், மொழிப் பயிற்சியும், இலக்கியத் தேர்ச்சியும் உள்ள ஒருவரால்தான், சிறுகதை வடிவத்தில் வெல்ல முடியும்.
ஒரு விஞ்ஞானிக்குரிய உணர்ச்சியற்ற கண்டிப்பான வாழ்க்கையறிவும், ஒரு கலைஞனுக்குரிய ‘வாடிய பயிர் கண்டு வாடுகிற’ கனிந்த கலை மனமும், ஓர் புரட்சி இயக்கத் தலைவனுக்குரிய சமுதாயப் பொறுப்புணர்வும் இணைந்து கலந்த ஒரு மனம் வேண்டும், சிறுகதையாளனுக்கு.
இவையெல்லாவற்றையும் விட, அவன் உள்ளும் புறமுமாய் அசலான மனிதனாக இருக்க வேண்டும். நல்ல மனிதனாக இல்லாத ஒருவனால்... உயர் கலைஞனாக எழவே முடியாது; நின்று நிலைக்கவும் முடியாது.
அடிப்படையில் நல்ல மனிதனாக இருக்கிற ஒருவன், மனிதகுலத் துயரையும், விடுதலையையும் தனது துயராகவும், விடுதலையாகவும் உளப்பூர்வமாகக் கருதுவான். அப்படிப்பட்டவனின் சமூக அக்கறையும், இலக்கிய அக்கறையும்தான் சிருஷ்டிப்புத் தன்மைமிக்கதாகப் பரிணாமம் கொள்ள முடியும்.
வாழ்க்கையின் மறுபடைப்பாக வருகிற சிறுகதை, மோதிர முகத்தில் தாமரைப் பூவை உருவாக்குவதைப் போல... ரொம்ப ரொம்ப நுட்பமான கலை.
இந்தக் கலை, இந்தக் காலத்தில் பெரும் சூறாவளியையும், புயலையும், பூகம்பத்தையும் எதிர் கொள்ளுகிறது.யதார்த்த வாதம் பெரும் சோதனைக்காளாகியிருக்கிறது. பொதுவுடைமை நாடுகளின் பின்னடைவு காரணமாக, சோசலிச யதார்த்த வாதத்தைச் சாடியவர்கள், எல்லை கடந்து வந்து யதார்த்த வாதத்தையும் ஏளனப்படுத்திப் பார்க்கிறார்கள்.
மேஜிகல், ரியலிஸம், அந்தஇஸம், இந்தஇஸம் என்று பேர் சொல்லிக் கொண்டு, தமிழ்ச் சிறுகதைக் கலையையே நாசக்காடு பண்ண முயற்சி செய்கிற காலம், இது.
யதார்த்த வாதம் என்பது, வாழ்வின் நிஜஉணர்வுகளை நிஜமான கலை மனத்தோடு பிரதிபலிப்பதுதான். சிறுகதையில் வாழ்வின் உண்மைகளைப் பேசுகிற யதார்த்த வாதத்தைப் பரிகசிப்பது, எல்லை கடந்த அத்து மீறலான முயற்சி.
ஜனநாயக உணர்வு கொண்ட, மனித நேயமிக்க படைப்பாளிகள் இந்த அசுரச் சூழலில் யதார்த்த வாதத்தையும், சோசலிச யதார்த்த வாதத்தையும் பாதுகாக்க வேண்டிய இலக்கியப் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில், அதன் மூலம்தான் யதார்த்த வாதத்தின் மூலம் சிகரச் சாதனை நிகழ்த்தியிருக்கிற தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தைக் காப்பாற்ற முடியும்.
அப்படிப்பட்ட கோட்பாட்டுப் போரில், இந்த நூலும் ஓர் ஆயுதமாகப் பயன்பட்டால்... ரொம்பச் சந்தோஷம்.
இந்தக் கட்டுரைகளையும் நூலாக வெளியிட முடியும் என்று நான் கற்பனைகூட செய்ததில்லை.
தொடர் கட்டுரைகளாகப் பிரசுரித்து, ஏராளமான வாசகர்களிடம் இதுபற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்திய ‘செம்மலர்’ மாத இதழின் ஆசிரியருக்கு எனது இதய பூர்வமான தோழமை நன்றிகள்.தொடர் கட்டுரைகளை எழுதிய போது உழைத்த உழைப்பு வேறு. இப்போது அக்கட்டுரைகளை முன்வைத்துக் கொண்டு, ஏறக்குறைய முழுதாக திருத்தி எழுதினேன். இதற்கு உழைத்த உழைப்பில், பெரிய நாவலே எழுதியிருக்கலாம்.
இந்தத் தொடர் கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்து, நகல் எடுத்துத் தந்த தோழர் ப. முருகன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
ஒரு வேண்டுகோள். உங்களிடம் இந்த நூல் முழு வடிவத்தில் அழகாக வருகிறது. இதிலும் விமர்சனத்துக்குரிய குறைகள் இருக்கலாம், நிறைகளும் இருக்கலாம்.
வாசித்து முடித்துவிட்டு யோசனையோடு மௌனமாகி விட வேண்டாம். குறை– நிறை இரண்டையும் ஒரு கார்டில் சுட்டிக் காட்டினால் நல்லது. இரண்டுமே என்னைச் செதுக்கிக் கொள்ளப் பயன்படும்.
- நன்றி!
மேலாண்மறைநாடு
626127
காமராசர் மாவட்டம்
என்றும் உங்கள்
மேலாண்மை. பொன்னுச்சாமி
இரண்டாம் பதிப்பின்
முன்னுரை
இது இளம் படைப்பாளிகளிடம் ஏராளமாக அறிமுகமான நூல். ஏகப்பட்ட பாராட்டுகளை பெற்றுத்தந்த நூல்.
மறு பதிப்பு காண்பதற்கு இத்தனை ஆண்டுகள் காத்திருந்திருக்கிறது.
இப்போதும் இளம் படைப்பாளிகளிடம் நல்ல வெளிச்சமும் அனுபவமும் வழங்கக்கூடிய நூல்.
இந்த நூலின் சிறப்பம்சமே இதன் அசல் தன்மைதான்.
நூலை வெளியிடுகிற கங்கை புத்தக நிலையத்திற்கு எனது நன்றிகள்.
- நன்றி!
மேலாண்மறைநாடு
626127
இராஜபாளையம் வழி
விருதுநகர் மாவட்டம்
04562/271233
9942610700
என்றும் உங்கள்
மேலாண்மை. பொன்னுச்சாமி
ஆசிரியரின் பிற நூல்களும், பிற விபரங்களும்
பெயர் | : | மேலாண்மை பொன்னுச்சாமி |
ஊர் | : | மேலாண்மறைநாடு. 626127 — தமிழ்நாடு சிமெண்ட்ஸ் முக்கு ரோடு — விருதுநகர் மாவட்டம். |
பெற்றோர் | : | அமரர்கள் ச. செல்லச்சாமி—அன்னபாக்கியம். |
வயது | : | 56. பிறந்த ஆண்டு 1951. |
கல்வி | : | ஐந்தாம் வகுப்பு |
முதல் சிறுகதை | : | “செம்மலர்” இலக்கிய இதழில் பிரசுரமான சிறுகதை “பரிசு” 1972. |
1. முதல் தொகுப்பு : மானுடம் வெல்லும் 1981.
- (நூற்றுக்கணக்கான கடிதங்களில் வேண்டியும், எந்தப்
- பதிப்பகமும் சீந்தாமல், வீட்டில் வளர்த்த வெள்ளாடு
- கிடாய்களை விற்ற பணத்தில் போட்ட தொகுப்பு)
இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் :
2. சிபிகள் (சிறுகதைத் தொகுப்பு)
3. பூக்காத மாலை
4. மானுடப் பிரவாகம்
5. பூச்சுமை
6. தாய்மதி
7. காகிதம்
8. கணக்கு
9. விரல்
10. உயிர்க் காற்று
11. என் கனா
12. மனப்பூ
13. ஒரு மாலை பூத்து வரும் (சிறுகதைத் தொகுப்பு)
14. அன்பூ வாசம் (சிறுகதைத் தொகுப்பு)
15. வெண்பூ மனம்
16. மானாவாரிப் பூ
17. ராசாத்தி
18. மின்சாரப் பூ
19. பூமனச்சுனை
20. பூ மாயன்
21. பூக்கும் மாலை (சிறுகதைத் தொகுப்பு)
1. ஈஸ்வர... (குறுநாவல் தொகுப்பு)
2. பாசத் தீ
3. தழும்பு
4. கோடுகள்
5. மரம் (குறுநாவல் தொகுப்பு)
1. முற்றுகை... (நாவல்)
2. இனி
3. அச்சமே நரகம்
4. ஆகாயச் சிறகுகள்
5. ஊர்மண்
6. முழுநிலா
1. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் (இலக்கியக் கட்டுரை நூல்)
பெற்ற பரிசுகள் :
ஜனரஞ்ஜனி இதழின் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (சுயம்)
கல்கி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (சிபிகள்)
கல்கி சிறுகதைப் போட்டியில் மீண்டும் முதல் பரிசு (அரும்பு)
கல்கி பொன்விழா நாவல் போட்டியில் முதல் பரிசு (முற்றுகை)வாசுகி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (பூச்சுமை)
தமிழ் அரசி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (தாய்மதி)
இதயம் பேசுகிறது சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (விரல்)
ஆனந்தவிகடன் பவள விழா ஆண்டில் முத்திரைப் பரிசுகள் பெற்ற சிறுகதைகள் — 6
- (முட்டை வேட்டை, சித்தாந்தம், பூமனசுகள், மழலைச் சுமை, பூமனத்தீ, கடைசிப் பால்)
ஆனந்தவிகடன் பவள விழா ஆண்டில் முத்திரைப் பரிசுகள் பெற்ற குட்டிச் சிறுகதைகள் — 6
ஆனந்தவிகடன் பவள விழா ஆண்டில் ஓவியத்திற்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (அன்பூவாசம்)
முத்திரைப் பரிசுகள் பெற்ற மொத்தச் சிறுகதைகளையும் வாசகர்கள் பரிசீலித்து தேர்வு செய்து தனிப்பரிசு — 1 (பூ மனசுகள்)
ஆனந்தவிகடன் இதழின் ‘தண்ணீரைத் தேடி’ எனும் பொதுத் தலைப்பில் சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு— (பூமனச்சுனை)
இலக்கியச் சிந்தனை மாதாந்தரப் பரிசுகள் — 8
இலக்கியச் சிந்தனையின் வருடாந்தரப் பரிசு — 1
பெற்ற விருதுகள் :
பூச்சுமை சிறுகதைத் தொகுப்பு: கோவை லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய விருது.
பூக்காத மாலை : (சி. தொ.) சென்னை அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது.
உயிர்க் காற்று : (சி. தொ.) பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
மனப்பூ: (சி.தொ.) தமிழக அரசின் இலக்கிய விருது.
ஒரு மாலை பூத்து வரும் (சி. தொ.) தமிழக அரசின் இலக்கிய விருது.
மானாவாரிப் பூ : (சி. தொ.) அமரர். தமிழர் தந்தை. சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது.
அன்பூவாசம் : (சி. தொ.) திருப்பூர் தமிழ்ச் சங்க விருது.
அன்பூ வாசம் : (சி. தொ.) பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
ஊர்மண் : நாவல் — பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது.
கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாட்டில் ‘சிறந்த இலக்கியப் படைப்பாளி’ விருது.
அருட்திரு அமுதன் அடிகளார் இலக்கிய விருது.
வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் “மாட்சிமைப் பரிசு” என்கிற கேடயம்.
கூடுதல் சிறப்புகள் :
“சிபிகள்”— எம்.எஸ். பல்கலைக் கழகத்தில் பாடநூலாக இருந்தது.
“முற்றுகை”— அஞ்சல் வழி இளங்கலையில் (M.K) பாடநூல்.
“பாட்டையா”— +2வில் பாடமாக இருந்தது.
“மானுடப் பிரவாகம்”— ஒன்பதாம் வகுப்பில் பாடமாக வைக்கப்பட்டு, இடையில் விடுவிக்கப்பட்டது.
“ஊர்மண்”— நாவல், ‘மானுடப் பிரவாகம்’ சிறுகதைத் தொகுப்பு, ‘தாய்மதி’ சிறுகதைத் தொகுப்பு பல தன்னாட்சி கல்லூரிகளில் பாடநூல்களாக இருக்கின்றன.
படைப்புகளில் எம்ஃபில் ஆய்வு முடித்து
- பட்டம் பெற்றோர் 10—க்கு மேல்.
- ஆய்வு செய்கிறவர்கள் — 6 பேர்
- பி.எச்.டி. பட்டம் பெற்றோர் — மூவர்
- ஆய்வில் — நால்வர்.
குடும்பம் குறித்த தகவல்கள்
குடும்பம் | : | கூட்டுக் குடும்பம் |
உடன் பிறப்பு | : | தம்பி செ. கரிகாலன் |
மனைவி பெயர் | : | பொன்னுத்தாய் |
பிள்ளைகள் | : | வைகறைச் செல்வி, வெண்மணிச் செல்வன், தென்றல். |
தம்பி மனைவி | : | ராஜலட்சுமி |
தம்பி பிள்ளைகள் | : | ராஜஅன்னம், இளவேனில். |
தொழில் | : | சிறிய பலசரக்குக் கடை, எளிய விவசாயம். |
இருப்பு | : | பிறந்த கிராமத்திலேயே இருப்பு. |
பிற சிறப்புகள்
⬤ சன் டி.வி, பொதிகை, D.D, k.T.V., ஜெயா ஆகிய தொலைக்காட்சிகளில் நேர்காணல்களும், விவாதப் பங்கெடுப்புகளும்.
⬤ பெங்களூர் தமிழ்ச்சங்க மாநாட்டில் பங்கேற்பு.
⬤ கல்கத்தாவில் இந்திய இந்தி முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் பங்கேற்பு.
⬤ டெல்லி தமிழ்ச் சங்கத்தில் உரை.
⬤ டெல்லியில் நடந்த தமிழுக்கான ஆர்ப்பாட்டத்தில் தலைமைப் பங்கேற்பு.
⬤ “செம்மலர்” இலக்கிய மாத இதழில் துணையாசிரியர்.
⬤ கலை இலக்கிய இரவுகள் நடத்துகிற சிறப்புப் புகழ் பெற்றிருக்கிற- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர். மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவர்.
பொருளடக்கம்
| 1 |
| 12 |
| 21 |
| 28 |
| 37 |
| 45 |
| 58 |
| 70 |
| 81 |
| 89 |
| 97 |
| 107 |
| 115 |
| 126 |
| 136 |
| 144 |
| 152 |
| 158 |
| 179 |