சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015
சிலையெழுபது
கம்பர்
சுவடியியலும் பதிப்பியலும்
பட்டயப் பேற்றிற்காக
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு
அளிக்கப் பெறும் பதிப்பேடு
எண் 43010520
பதிப்பு
பெ. சுபா
நெறியாளர்
முனைவர் வீ.அரசு
பேராசிரியர் - தலைவர்
©
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்
2015
முதற் பதிப்பு 2006
மறுபதிப்பு 2015
பிரதிகள் 250
சிலையெழுபது
© தமிழ்நாடு அரசு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்
பதிப்பாசிரியர்:
பெ.சுபா
வெளியீடு :
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்
சென்னை-5.
விலை: ரூ.177/-
மறுபதிப்பு அச்சிட்டோர்:
இராயப்பேட்டை எழுதுபொருள் மற்றும் அச்சு
மற்றும் அவை சார்ந்த உபபொருட்கள்
உற்பத்தியாளர்கள் தொழிற் கூட்டுறவு சங்கம்.
எண். 26, கோயா அருணகிரி முதல் தெரு,
இராயப்பேட்டை, சென்னை-14.
✆: 044-28481803, 28485670
முனைவர். தா. கார்த்திகேயன், இஆப.,
ஆணையர், தொல்லியல் துறை
தமிழ் வளர்ச்சி வளாகம், ஆல்சு சாலை.
எழும்பூர், சென்னை-600 008.
தொ/நிகரி : 044 28190023
இமெயில்: tnarch@.nic.in,
archcommissioner@gmail.com
வலைதளம் : www.tnarch.gov.in
பதிப்புரை
1869ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் அரசினர் கீழ்த்திசை ஓலைச்சுவடி நூலகம் மற்றும் ஆய்வு மையம் சுவடியியல் துறையின் வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் ஓலைச் சுவடிகளைச் சேகரித்தல், தொகுத்தல், ஆராய்தல், பதிப்பிக்கப்படாத அரிய சுவடிகளை நூலாக வெளியிடுதலை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
உலகளவில் சுவடியியல் ஆய்வுக்கு பெயர் பெற்ற இந்நூலகம் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் முதலிய மொழிகளில் 72,314 சுவடிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இங்குள்ள சுவடிகள் இலக்கணம், இலக்கியம் மட்டுமின்றி ஏறத்தாழ இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் அரசியல்நிலை, குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், சமூகநீதி, சமுதாயப் பழக்கவழக்கங்கள், மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாடு, அக்கால மொழி அமைப்பு, மொழிநடை, நாகரிகம், ஆடை அணிகலன்கள் முதலானவற்றை அறிந்து கொள்ள பயன்படும் வரலாற்று ஆவணங்களாக திகழ்கின்றன.
கி.பி. 1812ஆம் ஆண்டுக்கு முன்பு சுவடியியல் பணிகளிலுள்ள பல்வேறு இடர்ப்பாடுகள் மற்றும் பொருளாதாரச் சிக்கல் காரணமாகத் தனிநபர்கள் சுவடி பதிப்பு பணிகளை மேற்கொள்ளுவது மிகவும் கடினமான செயலாக இருந்தது. மேலும் வியாபார நோக்கிலான படைப்புகள் அல்ல என்பதனால் சுவடிப் பதிப்பு நூற்களை அச்சிட்டு வெளியிட தனியார் நூல் வெளியிட்டாளர் மற்றும் அச்சகத்தார் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
கி.பி. 1812இல் “திருக்குறள்-நாலடியார்” எனும் இரண்டு நூல்களும் ஒரே பதிப்பாக வெளிவந்ததைத் தொடர்ந்து பலருக்கும் எளிதில் பார்க்கவும் படிக்கவும் கிடைக்கும் வண்ணம் சுவடிகளைத் திரட்டிப் படியெடுத்து, செப்பம் செய்து நூலாகவோ, பிற ஊடகம் வாயிலாகவோ, தெளிவாகவும் சரியாகவும் தரும் சுவடிப் பதிப்பு பணி பெரும் வளர்ச்சி பெற்றது. இதனால் பல சுவடிகள் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டன.
தமிழக அரசின் ஊக்கம் காரணமாகத் தொல்லியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஒரு சில பல்கலைக்கழகங்கள் சுவடிப் பதிப்பு பணியில் முழு ஈடுபாட்டுடன் இயங்க தொடங்கின.
சுவடிப் பதிப்பில் தனக்கென தனி ஒரு இடத்தைப் பெற்றுள்ள அரசினர் சுவடி நூலகத்தின் முதல் பதிப்பு பணி கி.பி. 1921ஆம் ஆண்டு ‘பத்ய சூடாமணி - உரையுடன்’ எனும் சமஸ்கிருத நூலுடன் தொடங்கியது. தமிழ்மொழியில் முதல் பதிப்பு 1950ஆம் ஆண்டு வெளிவந்தது. இவ்வாண்டு கப்பல் சாஸ்திரம், அனுபவ வைத்தியம், உபதேச காண்டம், சிவஞான தீபம், சோழன் பூர்வ பட்டயம், கொங்கு தேச ராஜாக்கள் சரித்திரம் என ஒன்பது நூல்கள் வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து பழமை மற்றும் கலாச்சாரத்தை வெளிபடுத்தும் வகையில் பன்மொழி சுவடிகளை பதிப்பித்து நூலாக வெளியிட்டு வருகிறது இந்நூலகம்.
இந்நூலகத்தின் பதிப்புகள் மறுபதிப்பாக வெளியிடப்படுவதில்லை என்ற குறையைப் போக்கும் வகையிலும் சுவடியிலிருந்து பதிப்பித்து வெளியிடப்படும் நூல்கள் பிற துறை நூல்களைப் போல எளிதில் பொதுமக்களை ஈர்ப்பதில்லை இவை ஆராயச்சியாளர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடியவை என்னும் தவறான கருத்து நிலவி வருவதை நீக்கும் வகையில் கீழ்காணும் 14 நூற்கள் உள்ளது என்பதால் அதனை மறுபதிப்பாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.
1. மருத்துவப் பெயரகராதி, 2. பாண்டிய மண்டல வரலாறுகள், 3. தொண்டை மண்டல வரலாறுகள், 4. முத்தையேந்திரர் குறவஞ்சி, 5. விசுவாமித்ர சுவாமி வாக்கியம், 6. தமிழர் மருத்துவம், 7. வைத்திய அகராதி, 8. கொங்கு மண்டல வரலாறுகள், 9. சோழ மண்டல வரலாறுகள், 10. சிலையெழுபது, 11. வீர சைவத் தீர்க்கை விதிப்பாடல், 12. சைவ சதகம், 13. வடமொழி அகர வரிசை அட்டவணை - தொகுதி 1, 14. வடமொழி அகர வரிசை அட்டவணை - தொகுதி 2
அரிய இந்நூற்களை மறுபதிப்பாக வெளியிட அனுமதி அளித்த தமிழக அரசுக்கும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நூல்களை மறுபதிப்பாக வெளிக் கொணர்வதற்கு சீரிய முயற்சி மேற்கொண்ட சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ரா. கண்ணன், இஆப.. அவர்களுக்கும் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலின் பிற்சேர்க்கையாக மூலசுவடியின் நகலை இணைக்க அறிவுரை வழங்கி இந்நூல்கள் மறுபதிப்பாக வெளிவருவதின் முழுப் பெருமையும் அவரையே சாரும். மேலும் இந்நூல்களை பதிப்பித்து வெளியிட்ட அன்றைய பதிப்பாசிரியர்களின் முயற்சி பெரும் பாராட்டுதலுக்குரியது.
இந்நூலினை சிறப்பாக வெளியிட பன்முகமாக பணி புரிந்த தொல்லியல் துறையின் தொல்லியல் துணை கண்காணிப்பாளர் திருமதி சீ. வசந்தி அவர்களுக்கும், திரு. இரா. சிவானந்தம், கல்வெட்டாய்வாளர் மற்றும் அரசினர் கீழ்த்திசை ஓலைச்சவடி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நூலகர் திரு. இர. சந்திரமோகன் அவர்களுக்கும், இந்நூலைச் செம்மையாக அச்சிட்டு வழங்கிய இராயப்பேட்டை எழுதுபொருள் மற்றும் அச்சகத்தாருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுவடியியல் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள ஆர்வம் பெற்றவர்கள் மற்றும் புதிய நூற்களைப் படைக்கத் தேவையான தரவு வேண்டி அணுகுபவர்கள் என பலதரப்பட்ட உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வாசகர்கள் அரிய இந்நூற்களை படித்து பயனடைய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முனைவர். தா. கார்த்திகேயன், இஆப.,
ஆணையர், தொல்லியல் துறை
இடம் : சென்னை
நாள் : /03/2015
நெறியாளர் சான்றிதழ்
முனைவர் வீ.அரசு,
பேராசிரியர் - தலைவர்,
தமிழ் இலக்கியத் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்,
மெரினா வளாகம்,
சென்னை -600 005.
‘சிலையெழுபது’ எனும் தலைப்பிலான ஓலைச்சுவடியைச் “சுவடியிலும் பதிப்பியலும்” எனும் பட்டயம் பெறுவதற்காக பெ.சுபா அவர்கள் என் மேற்பார்வையில் பதிப்புச் செய்தார் என்றும், இப்பதிப்பு இவர்தம் தனி முயற்சியில் உருவானது என்றும் சான்றளிக்கிறேன்.
நெறியாளர்
(முனைவர் வீ.அரசு)
நாள் : 15.5.06
இடம் : சென்னை-5.
பதிப்பாளர் உறுதிமொழி
பெ.சுபா
முதுகலை இரண்டாம் ஆண்டு,
தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்,
மெரினா வளாகம்,
சென்னை-600 005.
‘சுவடியிலும் பதிப்பியலும்’ என்னும் பட்டயப் பேற்றிற்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப் பெறும் ‘சிலையெழுபது (D 282 T.D.158) எனும் தலைப்பிலான இப்பதிப்பேடு முற்றிலும் என் தனிமுயற்சியில் உருவானது என்று உறுதியாக உறுதியளிக்கிறேன்.
பதிப்பாளர்
(பெ.சுபா)
நாள் : 15.5.06
இடம் : மெரினாவளாகம்
சமர்ப்பணம்
என் குடுப்பத்தினற்கு
உள்ளடக்கம்
பக்கம்
| 1 |
| 4 |
| 5 |
| 1 |
பின்னிணைப்பு
| 31 |
| 36 |
| 46 |
| 47 |
| 50 |
