சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015/005
நன்றியுரை :
என்னைப் பட்டய படிப்பில் சேர வழிநடத்திய முனைவர் திருமதி கலைமகள் (இளங்கலை ஆசிரியர் - காயிதே மில்லத் கல்லூரி, அண்ணாசாலை) அவர்களுக்கு முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் எப்போதும் முன்னேற நினைத்து சென்னைப் பல்கலைக்கழக தமிழிலக்கிய துறையில் சேர வழிநடத்திய முனைவர் திருமதி கலைமகள் அவர்களுக்கும், செல்வி சத்தியவதி (ஆசிரியர்கள்) அவர்களுக்கும் என் நன்றிகள் பல.
தமிழ் இலக்கிய துறையில் சேர்ந்தவுடன் என்னுடைய முனைவர் பட்டத்தை, முனைவர் திரு.வீ.அரசு அவர்களிடம் தான் செய்ய வேண்டும் என்பது என் அவா. அதற்கு முன்பே பட்டயப்படிப்பிலே அவ்வாய்ப்பு கிடைத்தற்கும், என்னைப் பலவகையிலும் நெறிப்படுத்திய அவருக்கும் என் நன்றிகள்.
தமிழ் இலக்கிய துறையில் பணியாற்றும் பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்கள் நெறியாளர் இல்லையெனினும், விவர அட்டவணை போன்றவற்றைத் தானே எடுத்துக் கொடுத்தும், பல வழிகளைக் கூறியும் என்னை வழி நடத்திய அவருக்கும் நன்றிகள்.
கீழ்த்திசை சுவடி நூலக காப்பாட்சியர் திரு.சௌந்தரபாண்டியன் அவர்கள் சுவடியினை வழங்கியும், பதிப்பில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தும் வழி நடத்திய அவருக்கும் நன்றி.
அங்கு பணியாற்றும் திரு.தியாகராஜன் அவர்களும் பலமுறை அவருக்கு தொந்தரவுகள் நான் கொடுத்த போதிலும் இன்முகத்துடன் பல அறிவுரைகளை வழங்கிய வழி நடத்திய அவருக்கும் நன்றி.
நன்றி கூறுவதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது என் குடும்பத்தினருக்கு. இது தொடர்பாக நான் செல்லுகையில் சிறப்பாக செய் என்றே என் தந்தை ஊக்கப்படுத்தினார். என் தாயின் ஒத்துழைப்பு இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. தன் உடல் நிலை சரியில்லாத போதிலும் எனக்காகவே சிந்திக்கும் ஜீவன். என் சகோதருமான திரு.பார்த்திபன் அவர்களும் தடைதரும் எந்த வினாக்களையும் தொடுக்காமல் என்னை ஊக்கப்படுத்தினார். என் தங்கையும் என் தோழியுமான கேசவள்ளி அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தையில் முடிக்க முடியாது. குடும்பத்தில் ஒருத்தியான என் தோழி அருள்ஜோதிக்கும் என் நன்றி, மறைவான நண்பர்களுக்கும் நன்றி, நன்றிக்கான நன்றியல்ல. எண்ணத்தின் பதிவு.
என்றும் வித்தியாச விரும்பி
(பெ.சுபா)