சிலை யெழுபது மூலமும், 1915/002
௳
கடவுள் துணை
சிலையெழுபது
சிலையெழுப தென்பது: சிலையை எழுபது செய்யுளால் கூறுவது என இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாய் இந்நூற்குக் காரணக்குறி யாயிற்று. சிலையென்னும் பலபொரு ளொரு சொல் இங்கே வில்லை யுணர்த்தி நின்றது. உணர்த்தவே முடி,கொடி, குடை முதலிய மற்றைய வங்கங்களையும் பெறுமென்ப தென்னை? “ஒரு மொழி யொழிதன் னினங் கொளற் குரித்தே” என்றதனாலறிக. [1]இதனாற் புலப்படுவதி யாதெனின், அதற்குரிய வருணத்தை விளக்கும்; அது க்ஷத்திரிய வருணமென்க. அவ் வருணத்திற் கிஃ துரித் தென்ப தென்னை? தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் “படையுங் கொடியுங் குடையு முரசும் - நடை நவில் புரவியுங் களிறுந் தேருந் - தாரு முடியு நேர் வன பிறவுந் - தெரிவு கொள் செங்கோ லரசர்க் குரிய” என்னும் எக-வது சூத்திரத்தானும். “வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுந் - தாரு மாரமுந் தேரும் வாளு மன் பெறு - மரபினே னோர்க்கு முரிய” என் னும் அ௩-வது சூத்திரத்தானும், “(அன்ன ராயினு மிழிந்தோர்க் கில்லை” என்னும் ௮௪-வது சூத்திரத்தானு) மறிக. (வில்லி யென்பதனால், வேடர் விற்பெற விலையோ வெனின் ? பெறினும் அதனால் விஜயத்தைப் பெற்று, மற்றையவங் கங்களோடும் உலகத்தைக் காத்த லவர்கட் கில்லையென மறுக்க.) “முடி முதலிய சிறந்த உறுப்புகளிருக்க வில்லைக் கூறுவதென்னையோ வெனின் ? (நன்று கூறினாய்) க்ஷத்திரியர்களது பிறப்பிடம் பிரமாவின்றோள்; அந்த க்ஷத்திரியர்களது தோள் சம்பந்தமாகிய கையினிடமிருந்து அத்தோட்கும் அவர்கட்கும் விஜயத்தையுங் கீர்த்தியையுங் கொடுக்க அதனால் மற்றையவங்கங்களையும் அடைகிறபடியால் [2] வில்லையே கூறலாயிற்று. எழுபதென்பது எண்களின் றொகுதி; செய்யுட்டொகையை யுணர்த்தியது. இந்நூல் செய்த தெதன் பொருட் டெனில் : பரிசுபெறற் பொருட்டென்க. இப்படி நூல்செய்வதற்கு விதியாதெனின்? முற்கூறிய தொல்காப்பியம், பொருளதிகாரம் புறத்திணை யியல் “கொடுப்போ ரெத்திக் கொடாஅர்ப் பழித்தலு - மடுத்தூர்ந்தேத்திய வியன்மொழி வாழ்த்துஞ் - சேய்வரல் வருத்தம்வீட வாயில் - காவலர்க் குரைத்த கடைநிலை யானுங் - கண்படை கண்ணிய கண்படை நிலையுங் - கபிலை கண்ணிய வேள்வி நிலையும் — வேலி னோக்கிய விளக்கு நிலையும் - வாயுறை வாழ்த்துஞ் செவிய றிவூஉம் - ஆவையின் வரூஉம் புறநிலை வாழ்த்துங் - கைக்கிளை வகையோடுளப்படத் தொகைஇ-தொக்க நான்கு முளவென மொழிப” என்னும் ௩௫-வது சூத்திரத்தில் இது “அடுத்தூர்ந் தேத்திய வியன் மொழி வாழ்த்து.” அதாவது தலைவன் எதிர்சென்று அவன் செய்தியையும், அவன் குலத்தோர் செய்தியையும் ஏற்றி, முன்னிலை படர்க்கை யென்னும் இரண்டிடத்தினுள் ஒன்றானாற் புகழும் இயன்மொழி வாழ்த்து; அவற்றில் இது படர்க்கையிற் புகழ்ந்த வியன் மொழிவாழ்த் தெனவறிக. சிலையெழுபதென்பதற்குப் பரிசுபெறுவா னொருவன் அப்பரிசு பெறு வண்ணம் ஈவான் முற்சென்று அவனையும், அவன் குலத்தோரையும், அவன் குலத்துக்குரிய வில் முதலிய அங்கங்களை எழுபது செய்யுளாலேற்றிப் படர்க்கையிற் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்தாகிய நூலெனப் பொருள் கூறுக.[3]
பாடினோனைப் பாயிரம். ௨-வது கவியினும், நூல் ௧௭-வது கவியினும், ஈந்தோனை நூல் ௬௪-வது கவியினும் காண்க. இப்பிரபந்தம் பாயிரம், நூல் ஆகிய இரண்டனுள் “தெய்வ வணக்கமுஞ் செய்பொருட் டொகையும்” செப்புதலால் பாயிரஞ் சிறத்தலின் பாயிரத்தைக் கடவுள் வணக்கம், குலவுற்பவம், குலமாக்ஷிமை முதலியவற்றுடன் கூறி, அக்குலமாக்ஷிமை யானது படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறு உறுப்பினைக்கொண்ட அரசியலாதலின் ; அவ்வாறனுள் படை அரண் இவ்விரண்டும் முன்னும் மற்றைய நான்கும் அரசுறுப்பிலாக அரசெனப் பின்னும், அவை நீலைபயப்பத் துதித்தலாகிய வாழ்த்தை ஈற்றினும் வைத்து, முறையே நூலைப் படை, அரண், அரசு, வாழ்த்து, என நான் குறிப்பினதாகக் கூறியிருக்கிறார் என வறிக.
அரசியலா என்பதைத் திவாகரம் கஉ-வது பல்பெயர் கூட்டத்தொரு பெயர்த்தொகுதி “படையுங் குடியுங் கூழு மமைச்சு-மரணு நட்பு மரசியலாறே” என்னும் அ௫-வது சூத்திரத்தா னுணர்க; நாயனாரும். “படை குடி கூழமைச்சு நட்பர ணாறு=முடையா னர, சரு ளேறு” என்றாரென்க. சிலை-ஆகுபெயர்.
இந்நூல் சரஸ்வதி அநுக்கிரகம் பெற்ற மஹான் வாக்காதலின் அதற்குச் சிற்றறிவுடைய என்னால் எழுதிய உரையில் வழுவிருப்பின் மூதறிவோர் யாவரும் ஆய்ந்து களைந்து கனம் பண்ணி உபயோகித்துக்கொள்வார்களென அவர்களது மேலான கனத்தைக் கோருகிறேன்.
பேழைக்குடி, ம.துரைசாமி நாயகர்.
௳
கடவுள் துணை
சிலையெழுபது
மூலமும் உரையும்.
பாயிரம்.
பாயிரமென்பது.— வரலாறு. அது நூலுக்கு முன் சொல்வது. முகவுரை யெனினும், பாயிரமெனினும், நூன்முக மெனினும் ஒக்கும். அதை “ஆயிரமுகத்தா னகன்றா தாயினும், பாயிரமில்லது பனுவ லன்றே.” என்பவாகலின், மாநகர்க்குக் கோபுரமே போலும், இங்கே நூலுக்கு முதலில் வைத்து எட்டுக் கவிகளால் பாயிரங் கூறினார்.
கடவுள் வணக்கம்.
கடவுள் வணக்கமென்பது :—தெய்வத்தை வணங்கிக் கொள்ளுதல். அது, இந்நூல் நிறைவுபெறற் பொருட்டாதலின் இங்கே பாயிரத்துக்கு முதலில் வைத்துக் கூறினார்.
கொச்சகம்.
திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவி
ளம்ப, மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந்
தோன்வாமத் துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்
பத் தோன்றிவரந்,தருவளஞ்செய் விகடசக்ரத் தந்
திமுகன் றாடொமுவாம்.
(க)
இதன் பதப்பொருள். திருவளரும் வன்னியர் - செல்வம் நிறைந்திருக்கின்ற வன்னியர்களது, செம்சிலை எழுபதினை விளம்ப - (குலத்துக்குரிய) அழகிய சிலை எழுபதென்னும் பிரபந்தத்தைச் சொல்ல, மருவளர் பைங்கடுக்கையும் வெண்மதியும் மிலைந்தோன் - வாசனை தங்கிய பசியகொன்றை மாலையையும் வெள்ளிய சந்திரனையும் அணிந்த சிவபெருமானும், வாமத்து உருவளரும் வரை மடந்தை - (அவரது) இடது பாகத்து வடிவமைந்து விளங்கும் பார்வதி தேவியாரும், உவந்து அளிப்பத்தோன்றி - களிப்பினோடு பெறப்பிறந்து, வரந்தரு வளஞ்செய் - (பக்தர்கள் விரும்பும் ) வரங்களைத் தரும் வளப்பத்தினைச் செய்யாநின்ற, விகட சக்ரதந்திமுகன்தாள் - விகடசக்ர விநாயகரது பாதங்களை, தொழுவாம் - யாம் வணங்குவாம் என்றவாறு.
கருத்து. சிலையெழுபது என்னும் இப்பிரபந்தத்தைச் சொல்ல விகட சக்ரவிநாயகர் பாதத்தை வணங்குவாம். என்பதாம்.
இவ்விநாயகருக்கு விகட சக்ர விநாயகரெனப் பெயர் வந்த காரணத்தைக் காஞ்சிப் புராணத்துட் காண்க.
அஷ்ட ஐசுவரியமு முடையவராகையால், திருவளரும் வன்னியர் என்றார். இதை ௬௪-வது கவியிற்காண்க. இதுவன்றி ௪௮-வது கவியில் மாவசையாப் பெருஞ் செல்வரென்றதனாலு முணர்க.
இதில் வன்னியரென்பது :— சோம சூரியாக்கினி யென்னும் க்ஷத்திரிய குலத்தோர் மூவரையும் முக்குலத்தோ ருண்டென்பதென்னை? திருவிளையாடல் திருவாலவாய்க் காண்டம் திருவாலவா யானபடலம்.
“வெள்ளநீர் வறப்பவாதி வேதியன் ஞாலமுன்போ
லுள்ளவாறு திப்ப நல்கி யும்பரோ டிம்பரேனைப்
புள்ளொடு விலங்கு நல்கிக் கதிருடற் புத்தேண் மூவர்
தள்ளருமாபின் முன்போற்றமிழ்வேந்தர் தமையுந் தந்தான்.’
என்னும் க௨ -வது கவியில் “கதிருடற் புத்தேண் மூவர் தள்ளருமரபின் முன்போற் றமிழ்வேந்தர் தமையுந்தந்தான். என்றதனாலுணர்க. கதிருடற் புத்தேளிர் மூவராவார் முச்சுடரை. என்னை! திவாகரம் க௨-வது பல்பெயர் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி “முச்சுடராதித்தன் சந்திர னங்கி” என்னும் கக-வது சூத்திரத்தால் சூரியன் சந்திரன், அக்கினி என வுணர்க. தமிழ் வேந்தராவார், சேர, சோழ,பாண்டியரை, இவர்களிற் சேரன் அக்கினிகுலமென்க. அம்மூவேந்தருட் சேரன் அக்கினிகுல மென்ப தென்னை! ஸ்ரீவில்லிபுத்தூராழ்வார் பாரதம் ஆதிபருவம் திரௌபதி மாலையிட்ட சருக்கம்
“இவன்சல் லியனென் றுரைசான்ற விகல்வேன் மன்னர்க் கேறனையா, னிவன்றன் பகைவர் யாவரையு மிமையோராக்கு மெழினீல, னிவன்றண்டமிழ் சேரடல்வழுதி யிவன்றே ரிரவி குலவளவ, னிவன்செந் தழலோன் மரபாகி யீரே ழுலகும் புகழ்ச்சேரன்”
“என்னும்” ச௫-வது கவியில் “இவன் செந்தழலோன் மரபாகி யீரே ழுலகும் புகழ்ச்சேரன்” என்றதனா லுணர்க. திவாகர நிகண்டு முதலிய நூற்களிற் கூறியிருக்குமோ வெனின்; கூறியே யிருக்கின்றது. என்னை! தமிழ்வேந்தர் மூவருக்கும் முறையே பெயர் சொல்லவந்த பொழுது முன்னும் பின்னும் சேரனையும் பாண்டியனையும் இன்னகுல மென்று தோன்றாது வாளாகூறி, மத்தியிற் சோழன் பெயரைக் கூறும்போதுமாத்திரம் சூரியகுலமென்று தோன்ற சூரியனென ஒரு பெயரிருக்கிறது; இருக்கவே சூரியனுக்கு ஒளிகொடுப்பது அக்கினியாலால், முதலிற் கூறுஞ் சேரன் அக்கினிகுலமென்றும் சூரியனால் ஒளிபெறுவது சந்திரனாதலால் இறுதியிற்கூறும் பாண்டியன் சந்திரகுலமென்றும் தானே குறிப்பாலுணர்த்துதலா லுணர்க. வன்னி, தழல், அக்கினி, அகிங், கனல், சுசி என்பன ஒரு பொருட் சொற்கள். அப்படி யாகுங்கால் சேரன் குலத்தார் சிலையெழுப தென்றே கூறலாமே யெனின் அதற்கன்று ; சேரன் குலத்தார் சிலையெ ழுபதென்று கூறின், மற்றைய விரண்டுகுலமுங் குறிப்பால டங்கி யிருப்பினும் வெளிப்படையிற் பொருந்தா? வன்னியரென்பதோ இயற்கையிற் சேரன் குலமாயினும் மற்றைய இரண்டு குலத்தையுந் தழுவிக்காட்டு மென்னுங் கருத்தால் இந்நூலாசிரியர் வன்னியர் சிலையெழுப தென்றே கூறினாரென வுணர்க. மற்றைய விரண்டு குலமுஞ் சேரன் குலத்தி லடங்கு மென்ப தென்னை! குலசேகரப்பெருமாள் சொன்ன திராவிட வேதத்தில் ௨௬-வது தேட்டருந்திறல் அழகிய மணவாளர் விஷயம்.
“அல்லிமாமலர் மங்கைநாதனரங்கன் மெய்யடி யார்கட, மெல்லையி லடிமைத் திறத்தினிலென்று மேவுமனத்தனாங், கொல்லிகாவலன் கூடல்னாயகன் கோழிக்கோன் குலசேகரன், சொல்லினின்றமிழ் மாலைவல்லவர் தொண்டர் தொண்டர்களாவரே.”
“என்னும் ௧௦-வது பாசுரத்தில் இவர் அக்கினி குலமாகிய சேரன் குலத்தாராகவிருந்தும் சூரியகுலமென்பது தோன்ற கோழிக்கோ னென்றும், சந்திரகுலமுந் தானெனத் தோன்ற கூடல் காவலனென்றுங் கூறியவாற்றா னுணர்க, உருத்ர வன்னியன், இக்ஷ்வாகு, புரூரவர முதலினோர் வம்சங்களையுங் காட்டுமோ வெனின் காட்டுமென்க. என்னை? இந்நூலில் ஆக்னேயக் கருத்தையொட்டி “சம்புகோத்திரவரெனப்” பல விடங்களிற் சொல்லி யிருப்பதால் உருத்ர வன்னியன் முதலியோரையும், மேற்படி குலசேகரப் பெருமாள சொன்ன கண்ணபுரத்தொளிர் காகுத்தன்றாலாட்டு.
“கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்
தங்குபெரும் புகழ்ச்சனகன் றிருமருகா தாசரதி
கங்கையினுந் தீர்த்தமலி கணபுரத்தெங் கருமணியே
யெங்கள்குலத் தின்னமுதே யிராகவனே தாலேலோ.”
என்னும் ௩-வது பாசுரத்தில் இராமனை எங்கள் குலமென்றா ராதலின் இட்சுவாகு முதலியோரையும், மேற்படி சேய்வளர் காக்ஷியின்சீரை கோதைபோல் தாய் தேவகி பெறாத் தாழ்வெணிப் புலம்பல் “முந்தை நன்முறை யன்புடை மகளிர் முறைமுறைத் தத்தங் குறங்கிடையிருத்தி - யெந்தையே யென்றன் குலப்பெருஞ் சுடரே யெழுமுகிற் கணத் தொழில்கவ ரேறே - யுந்தை யாவனென் றுரைப்பநின் செங்கேழ்விரலி னுங்கடைக் கண்ணினுங் காட்ட - நந்தன் பெற்றன னல்லுணர் வில்லா நங்கள் கோன்வசு தேவன் பெற்றிலனே”
என்னும் ௩-வது பாசுரத்தில் நங்கள்கோன் வசுதேவன் என்றதனால் புரூரவர் முதலியோரையும் காட்டியதையுணர்க, இதன் எ-வது கவியில் “வன்னியிறைக் குலத்தி லுதித்தவரே” என்றும், நூல் முதற் கவியில் “அணிவனிய குலவரசர்” என்றும், ௪-வது கவியில் “வனிய குலவரசர்” என்றும், எ-வது கவியில் “சுசியுதித்தோர்” என்றும், க௨ -வது கவியில் “அக்கினிகுலத்தரசர்” என்றும், க௫-வது கவியில் “வன்னியமன்னர்” என்றும், ௨௦-ல் “உறழ்தோளார் வன்னிமன்னர்” என்றும், ௨க -ல் “வனிய குலவரசர்” என்றும், ௨௩-ல் “திண்ணமுறு வன்னிமன்னர்” என்றும், ௩௨-ல் “சயங்கூற வன்னிமன்னர்” என்றும், ௩௩-ல் “வேதியர்க்குதவு வன்னிமன்னர்” என்றும், ௩௪-ல் “புகழ் வனிய வரசர்” என்றும் ௩௬-ல் “வயமுறு வன்னிய வரசர்” என்றும், ௩எ-ல் “வீரவன்னிமன்னர்” என்றும், ௩௮-ல் “வன்வன்னிமன்னரெனு மேன்மக்கள்” என்றும், ௪௦-ல் “சீராரும் வன்னிமன்னர்” என்றும், ௪க-ல் “தழலிடை வந்தவதரித்தோர்” என்றும், ௫க-ல் மூன்று குலத்தினுள் “தூய்தாங்கனற் றோன்றும், பன்னும் புகழ்கொளரசர்களே” என்றும் ௫௨-ல் “மிக்கோர் வன்னிமன்னர்” ௫௫-ல் “வன்னியரசர் சமுகம்” என்றும், ௫௯-ல் “வன்னிவேந்தர்” என்றும், ௬௨-ல் “வனிய நிருபர்” என்றும், ௬௬-ல் “வன்னியரசன்றி” என்றும் பிரித்துக் கூறியிருக்கின்றதே யெனில்? அதற்கு இதன் ௮-வது கவியில் “மலயமன்னர் குன்றவர் பல்லவர்” என்றும், நூல் ௬-ல் “படிப்புரக்க வவதரித்த பண்ணாடர்” என்றும், ௮-ல் “இறைவர் பண்ணாடர்” என்றும், ௨௩-ல் “வாழ்விக்கும் பண்ணாடர்” என்றும், ௪௩-ல் “அரசாள்வது பண்ணாடர் தந்தொழிலே” என்றும், ௪௫-ல் “நவில் பண்ணாட்டாரே” என்றும், ௫௦-ல் “மங்கையர்கோன் சொலத்தகு பல்லவராயன் மரபிற்றோன்றி” என்றும், ௫௩-ல் குணத்தோர் பண்ணாடரே என்றும், ௫௫-ல் “தமிழ்வேந்தர் இமையப் பொருப்பர் பண்ணாடர்” என்றும், ௫௬-ல் “பண்ணாடர் தமது பெரும்பதி யிருப்பால், என்றும், ௬௬-ல் “நாடு பலவினுக்கரசு பண்ணாடு” என்றும், ௬எ -ல் “வீர பண்ணாடர் வில்லை” என்றும், மற்றைய கவிகளில் பொதுவில் “வன்னியர்” என்றும், ௩௧-வது கவியாகிய கொடிச் சிறப்பில் “அடர்ப் புவி மூன்றினுந் தாமே அரசியற்றும்படிதாவ” என்றும் கூறி யிருப்பதால் பொதுவாயதெனவே துணிக. மிகுதிபற்றிச் சிறப்பென லாகாதோவெனில்? அறியாது கூறினாய்! மதுதெளிவெனச் சொல் முதுமொழி நல்லாய் [4] அக்கினிக்குள் சூரியனும் சூரியனுக்குள் சந்திரனும் அடங்குதலின் உற்று நோக்குங்கால் முழுமையும் அக்கினியின் மயமேயன்றி வேறுயாது? நீயே கூறுக. அதுபோல அவ்வக்கினி குலமே மற்றையது மென்பார் மிகுதியுமமைத்துக் கூறினரென வுணர்க. இக்காரணங்களால் வன்னிய ரென்னும் பதம்: யுகங்கடோறும் [5] ஆதியில் பிரமாவினாலேயே தோன்றி தமிழ்வேந்தர் மூவருள் சேரன் குலத்துக்காகி, பிறகு சோழ பாண்டியர்களைத் தழுவிக்காட்டி மற்றைய தேசத்தரசர்களுக்கு மாயதோர் மொழியென வுணர்க.
நூற்பெயரும், ஆக்கியோன் பெயரும்.
நூற்பெயரும் ஆக்கியோன் பெயரும் என்பது நூலினது பெயரும் அதைச் செய்தவன் பெயரும் முதலியன. அது வடநூல் வழக்குப்பற்றி தானே நாந்திக்கூறிக் கொள்ளுதலின் இங்கே கடவுள் வணக்கத்தின் பின்வைத்துக் கூறினார்.
அறுசீர்கழிநெடிலா சிரிய விருத்தம்
முந்துநாள் வீரசம்பு முனிசெய்மா மகத்திற் போந்த, சந்ததியார் சீரோது கெனத்தகு முதியோர் கேட்ப, இந்தணி சடிலத்தெம்மா னிணைக்கழல் பராஅ யிசைத்தான், செந்தமிழ்க் கம்பன்செம்பொற் சிலை யெழு பதுவா மிந்நூல். (௨)
(இ-ள்.) (கருணாகரச் சோழன் கம்பரைப் பார்த்து.) முந்துநாள் - ஆதியில் — வீரசம்பு முனிசெய் மாமகத்தில் போந்த சந்ததியார் சீர் - விஜயத்தைக்கொண்ட சம்புமுனிவரால் செய்யப்பட்ட மகத்தாகிய யாகத்தில் வந்த உருத்திர வன்னிய மகாராஜன் முதலியோர்) சந்ததியர்களாகிய (வன்னியர்களது) சிறப்பைச் சொல்லும் நீர்செய்த பிரபந்தத்தை) ஒதுவா - சொல்லுக என்று சொல்ல, தகு முதியோர்கேட்ப -(அப்பொழுது அவனது சபையில் தங்கிய) தகுதியுடைய பெரியோர்கள் கேட்டு மகிழும்படியாக — செந்தமிழ்க் கம்பன் செவ்விய தமிழை ஆய்ந்தகம்பரானவர் — இந்து அணி சடிலத்து - சந்திரனைத் தரித்த சடாபாரத்தினை யுடைய, எம்மான் இணைக்கழல்பரா இய் - எமது பிரானாகிய பரமசிவனது இரண்டு பாதங்களையுந் தொழுது, செம்பொன் சிலை எழுபது ஆம் இந்நூலில் இசைத்தான் - மிக்க அழகினையுடைய சிலையெழுப தென்னும் பெயர்கொண்ட இப்பிரபந்தத்தைச் சொன்னார் எ-று. கருத்து. கம்பரானவர் கருணாகரன் சபையில் பெரியோர் கேட்டு மகிழும்படி சிலை யெழுபதென்னும் இப்பிரபந்தத்தைச் சொன்னா ரென்பதாம்.
கம்பரென்பதனால் ஆக்கியோன் பெயரும், முந்துநாள் வீரசம்பு முனிசெய்மாமகத்திற் போந்த சந்ததியாரென்றதனால் முன்னூலின் வழியும், செந்தமிழென்றதனால் அது வழங்கு நிலமாகிய வடவேங்கடந் தென்குமரி மேல்கீழ் கடல் எல்லையும், சிலையெழுபதென்றதனால் நூற்பெயரும், சீர் என்றதனால் அந்நூற்குரிய வருணத்தவர்களது சிறப்பைத் தொகுத்துக் கூறுதல் என்னும் யாப்பும், அதனை விளக்கிக்காட்டுதல் நுதலிய பொருளும், அப்படிக் காட்டியவற்றை விளங்க அறிந்து கொள்ளுதல் பயனும், தகுமுதியோர் கேட்பவென்றதனால் கேட்போரும், ஆகிய எட்டினையும் வெளிப்படையினும், கருணாகரச்சோழன் ஆண்டநாள் காலமும், அவன் முன்னிலை அவையும், பரிசு பெறுதல் காரணமும் ஆகிய இம் மூன்றையும் குறிப்பினும் எச்சமாக்கிக் கூறினர் எனவுணர்க.
கச்சித்தலத்தின் சிறப்பு
கச்சித்தலத்தின் சிறப்பென்பது;—காஞ்சி நகரத்தினது பெருமை. அது இந்நூலரங்கேற்றிய நகரமாகையால் இனி பின்னரும் எடுத்தாளும் பொருட்டு முன் விகட சக்ர விநாயகனை வணங்கிக்கொண்டது போல இங்கே காலம், களன், காரணம் ஆகிய மூன்றையுங் குறிக்க வேண்டி ஆக்கியோன் பெயருக்கும் நூற் பெயருக்கும் பின் வைத்துக் கூறினார்.
வேறு
மெச்சுந்தரங்கக் கடலுலகின் மிளிருந்தலங்கண் மிகவெனினு, மிச்சித்தவர்தங் குறைவெயின் முன்னி மம்போற்கடிதற்கியலாவே, பச்சை வண்ணத் திருமாலும் பவளவண்ணச் சோதியும்வாழ், கச்சித் தலத்தைப் புரையுமெனக் கழறத் தலங்கள் காணேமால். (௩
(இ-ள்.) தரங்கக் கடலுலகில் - அலைகள் பொருந்திய சமுத்திரஞ் சூழ்ந்த இவ்வுலகத்தில், மிளிரும் தலங்கள் மிகஎனினும் - விளங்கும் க்ஷேத்திரங்கள் பல என்று சொல்லினும், இச்சித்தவர் தங்குறை - இச்சித்தவர்கள் தங்கள், குறைகளை - வெயில் முன் இமம்போல் கடிதற்கு இயலா - சூரியனானவன் தன் முன் உண்டாகும் பனியை நீக்குமாறுபோல விலக்குதற்கு முடியாது (ஆதலால்)-பச்சை வண்ணத் திருமாலும் - மரகதவண்ணனாகிய விஷ்ணுவும், -பவளவண்ணச் சோதியும் - பவள வண்ணனாகிய சிவபெருமானும், - வாழ் - வாழும் - மெச்சும் கச்சித்தலத்தைப் புரையுமெனக் கழற யாவருந் துதிக்கும் (இச்சித்தவர்கள் தங்கள் குறைகளைச் சூரியனானவன் தன் முன்னுண்டாகும் பனியை நீக்குமாறுபோல் விலக்குவதற்கியைந்த) இக் கச்சித்தலத்தை யொக்குமென்று சொல்ல, தலங்கள் காணேம்.— க்ஷேத்திரங்கள் அறியேம். எ-று ஆல்— ஏ - அசைகள்.
கருத்து. இவ்வுலகத்தில் காஞ்சி க்ஷேத்திரம் ஒன்றுமே தன்னை விரும்பியவர்களுக்கு எல்லா வின்பத்தையுங் கொடுக்க வல்லதென்பதாம்.
இதில் சிவன் விஷ்ணு இருவருக்கும் காஞ்சிபுரியுரிமை யுடைமையாதலை நூலின் ௫௦-வது கவியிற்காண்க.
கோத்திரச் சிறப்பு
கோத்திரச் சிறப்பென்பது வம்சத்தின் மூலபுருஷர் பெருமை. அது, அம்மூலபுருஷரின் சந்ததியார் சிறப்பே இந்நூலாதலின் இங்கே இந்நூலரங்கேற்றிய நகரமாகிய கச்சித் தலத்தின் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம் வாழாதோர், சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப்பாளர், மாத்திரை யளவுஞான மறைப்பின் மாதவங்கூர் சம்பு, கோத்திர வரசர்க் கொப்பக் கூறுவ தெவரை மாதோ. (௪)
(இ-ள்.) தனிமறை சாத்திரங்கள் சொற்ற - ஒப்பற்ற வேத சாத்திரங்கள் சொன்ன, தவறில் சூத்திரம் நியமம் வழாதோர் - தவறில்லாச் சூத்திர நியம (வழிகளில்) வழுவாதவர்களும், —வன்னிதோன்றும் மெய்ப்புகழ் காப்பாளர் - அக்கினியிற்றோன்றும் உண்மையான புகழைக் காக்கின்றவர்களும், மாத்திரை அளவும் ஞானம் மறைப்பு இல மாதவங்கூர் சம்புகோத்திர அரசர்க்கு - இமைப்பொழுதேனும் ஞானபோதம் நீங்காத மகத்தாகிய தவமிகுந்த சம்பு கோத்திரவர்களுமாகிய (வன்னியரென்னும்) அரசர்களுக்கு, எவரை ஒப்பு கூறுவது - யாரைச் சமமாகச் சொல்வது. எ-று. மாதோ அசை.
கருத்து. வன்னியர்கள் சம்புகோத்திரவர்களென்பதாம். சூத்திரங்கள் - ௬.
என்பவைகள். இவைகள் அந்தந்த பெயரைக் கொண்ட இருடிகளால் சொல்லப்பட்டன.
உற்பவச் சிறப்பு.
உற்பவச்சிறப்பென்பது முதல் முதல் வம்சமுண்டான பெருமை. அது இவ்வம்ச மூலபுருஷனுண்டாவதற்கு முன்பேயிருத்தலின் இங்கே கோத்திரச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
கொச்சகம்.
திங்கண்மும்மழைபிலிற்றச் செழித்துயிர் கணனிமல்க
அங்கமோராறுமறை யந்தணரா குதியோங்கத்
துங்கமனுநெறி தழைப்பத் துகளறுவன்னியினின்றும்
பங்கயனு முதலிவரைப் படைத்துலகு படைத்தானால்.
(இ-ள்) பங்கயனும் - (முற்கூறிய சம்பு விருடிக்கு முன்பாகவே) பிரமதேவரும், திங்கள் மும்மழை பிலிற்ற- மாத மும்மாரி பொழியவும், -உயிர்கள் செழித்து நனி மல்க உயிர்கள் செழிப்பையடைந்து மிகவும் விளங்கவும், அந்தணர் ஓர் ஆறு அங்கமறை ஆகுதி ஓங்க - பிராமணர்களது ஆறு அங்கத்தினையுடைய வேதாகுதி வளரவும், துங்க மனு நெறி தழைப்ப - உயர்வாகிய மனுமுறை பரவும்படியாகவும், துகள் அறு வன்னியில் நின்றும் - குற்லமில்லாத அக்கினியினின்றும், முதல் இவரைப் படைத்து - படைப்பு ஆதியில் இவ்வன்னியர்களை உண்டாக்கி — உலகுபடைத்தான் - (பிறகு மற்றைய மனிதர் முதலிய) உயிர்களையும் உண்டாக்கினார். (எ-று), ஆல்-அசை.
கருத்து. பிரமாவானவர் சம்புவிருடிக்கு முன்பாகவே மாதமும்மாரி பொழியவும் அதனால் உயிர்கள் செழித்துப் பல்கவும், வேதாகுதிகள் வளரவும், மனுநெறி பரவவும், அக்கினியினின்றும் க்ஷத்திரியராகிய இவ்வன்னியரை உண்டாக்கிய பிறகு மற்றய மனிதர் முதலிய உயிர்களையும் உண்டாக்கினார் என்பதாம்.
இதில் முதலில் அரசன் ஏற்பட்டு முறை நியமித்து நடத்தப் பிறகு குடிகள் அதன்வழி நடக்கிறதாகையால் அதைக் கொண்டு “பங்கயனு முதலிவரைப் படைத்துலகு படைத்தான்” என்றார். இதைக் குமரகுருபரசுவாமிகள் அருளிய நீதிநெறி விளக்கம்.
“இகழி நிகழ்ந்தாங் கிறைமக னொன்று
புகழினு மொக்கப் புகழ்ப — இகன்மன்னன்
சீர்வழிப்பட்டதே பன்புதை மற்றென்செய்மம்
நீர்வழிப் பட்டபுணை”
என்னும் ௪௪-வது பாட்டிற்காண்க. அன்றியும் மனுஸ்மிருதி எ-வது அத்தியாயம் அரசன் சிறப்பு; அரசன் சிறுவனாயிருந்த போதிலும் அவனை மனிதனென்று அவமானஞ் செய்யக்கூடாது; ஏனெனில் மேலான தேவர்களின் கூட்டமே அந்த அரசன் உறவாயிருக்கிறதல்லவா“? என்னும் ௮ - வது சுலோகத்தின்கீழ்” அக்கினியானது அஜாக்கிரதையாய்த் தன்கிட்ட வந்தவனை மாத்திரந் தகிக்கும்; அரசனாகிற அக்கினி கோபித்துக் கொண்டால் தனம் தான்யம் புத்ர மித்ர களத்ராதிகளோடும் அழித்துப் போடும் “என்னும் ௯-வது சுலோகத்தானும்”, அவ்வரசன் காரியா காரியங்களையும் தன் சக்தியையும் தேசகாலங்களையும் நன்றாக யோசித்துத் தரும சித்தியின் பொருட்டு அநேக ரூபத்தை எடுத்துக் கொள்ளுகிறான். அதாவது தனக்குப் பலஹீன காலத்தில் அடங்கி இருப்பான் பலமுள்ள போது போர்க்கு வருவான்” என்னும் ௧௦-வது சுலோகத்தாலும்; “எந்த அரசன் தயையினால் பொருளும் சத்ரு ஜெயமும் உண்டாகிறதோ, அவன் தேஜோரூபனல்லவா? ஆதலால் பொருளை விரும்பினவனும் சத்துரு ஜெயத்தை விரும்பினவனும் ஜீவித்திருப்பதை விரும்பினவனும் அவனை எதிர்க்கக் கூடாது “என்னும் ௧௧-வது சுலோகத்தானும்” அவ்வரசனோடு எவன் புத்தியில்லாமையால் துவேஷித்துவக் கொள்ளுகிறானோ அவன் தானாகவே அழிந்து போகிறான் அரசனும் அவன் அழிகிறதைக் குறித்து யோஜிக்கிறான் என்னும் ௧௨ - வது சுலோகத்தானும்; ஆதலால் “அவ்வரசன் எதை அனுஷ்டிக்கும் படியாயும் நீக்கும்படியாயும் ஏற்பாடு செய்கிறானோ அதை ஒருவரும் தடுக்கக்கூடாது” என்னும் ௧௩-வது சுலோகத்தானும் அறிக.
ஆறங்கமாவன, மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தோபசிதி, நிருத்தம், சோதிடம் என்பன! தி-௧௨ வ-தி. “ஆறங்க மந்திரம் வியாகரண நிகண்டு சந்தோபசிதி நிருத்தஞ் சோதிடம்” என்னும் சூ-க. வடநூலார் மந்திரத்தைக் கல்பம் என்றும், நிகண்டை சிக்ஷை என்றும் வழங்குவர்
குலச்சிறப்பு.
குலச்சிறப்பென்பது: —வம்சத்தின் பெருமை. அது வம்சம் தோன்றியபின் அமைதலின் இங்கே இரண்டு கவிகளால் உற்பவச் சிறப்புக்குப் பின் வைத்துக் கூறினார்.
விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி உதிகுலத்தோ ராதலினு லுயர் குலத் தோ ராமிவர்க்குத் துதிகுலத்தோ ரொவ்வாரேற் சோலும்வணிக குலத்தோரும் நதிகுலத்தோர் களுமெங்ங னுட்டினிலொப் பாவாரே. (௬)
(இ-ள்) நாட்டினில் - உலகில், சொல்லும் விதிகுலத்தோர் - யாவரும் புகழும் பிராமணர்கள், சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்த-அழகு பொருந்தச் செய்யும் யாகத்திற்குச் சிறந்திருக்கின்ற, வன்னி உதிகுலத்தோர் ஆதலின் - அக்கினியே பிறந்த குலத்தவராகையால், உயர் குலத்தோராம். உயர்வாகிய ஜாதியர்களாகும்;—இவர்க்கு அத்துதி குலத்தோர் ஒவ்வாரேல் இவ்வன்னியர்களுக்கு, (இவரில் உயர்ந்திருக்கின்ற) அப்பிராமணர்களும் ஐசுவரியத்தினாலன்றி ஜாதியினாலும் ஒப்பாகார்களானால், வணிக குலத்தோரும் - (இவரிற்றாழ்ந்திருக்கின்ற) செட்டி ஜாதியாருங், நதிகுலத்தோர்களும் - வேளாள் ஜாதியாரும்,— எங்ஙன் ஒப்பாவார் - எவ்விதம் ஒப்பாகுவர்கள் (எ-று.) ஆல் -ஏ - அசைகள்.
கருத்து.வன்னியர்கள் காரணத்தால் இவரில் உயர்ந்த பிராமணர்களினும் சிறந்தவர்களாகிறார்கள் என்பதாம்.
இதில் பின் வருணமுறை பிறழ்ந்து வருமிடங்கடோறும் இங்ஙனம் அமைத்துக்கொள்ளல் வேண்டும் என்பார். முதலில் பிராமணர்களையும், இரண்டாவது க்ஷத்திரியர் என்னும் வன்னியர்களையும், மூன்றாவது வைசியர் என்னும் செட்டியார்களையும், நான்காவது சூத்திரா் என்னும் வேளாளர்களையும் வருணமுறை பிறழாது வைத்தார் என்க.
இதுவுமது.
மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர், நிறைக்குலந்தி லுதித்தாலென் னிதிபடைத்தா லென்னான்காம் முறைகுலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி, இறைக்குலத்தில் உதித்தவரே யிகபரனென் றியம்புவரே. (௭)
(இ-ள்.) மறைக்குலத்தில் உதித்தால்என் - பிராமணஜாதியிற் பிறந்தால் என்ன? —மறை உணர்ந்தால்என் - வேதங்களைத் தெரிந்தால் என்ன? —நிறைவணிகர் குலத்தில் உதித்தால் என் -நிறைக்குரிய செட்டி ஜாதியிற் பிறந்ததால் என்ன? —நிதிபடைத்தால் என்-மிக்க தன சம்பத்தைப் படைத்ததால் என்ன? -முறை நான்கு ஆம்குலத்தில் உதித்தால் என் - முறையே நான்காவது ஜாதியாராகிய வேளாள ஜாதியிற் பிறந்ததால் என்ன? —முயற்சி செய்தால் என்-(உழவு தொழில் முதலிய பல) முயற்சிகளைச் செய்ததா லென்ன?- [இம்மூன்று ஜாதியிற் பிறந்து அவ்வச்சாதி நடைகளாலடையும் பிரயோசனங்களில் ஒரு விசேடமும் இல்லை என்றபடி] வன்னி இறைக் குலத்தில் உதித்தவரே - வன்னிய ரென்று சொல்லுகிற க்ஷத்திரிய ஜாதியிற் பிரந்தவர்களோ! (அப்படி அல்லர்) இகபரன் என்று - இவ்வுலகத்திற்குக் கடவுள் என்று, இயம்புவர் யாவரும் சொல்லுகின்றவர்கள் ஆகிறார்கள் (எ-று) ஏ-அசை
இகபரன் பால்வழுவமைதி.
கருத்து. வன்னியர்கள் இவ்வுலகத்திற்குக் கடவுள் என்று யாவரும் சொல்லுகின்றவராகிறார்கள் என்பதாம்.
இதில் பல நூற்களிலும் பிராமணர்களுக்காறும், வைசியர்களுக்கு ஆறும், சூத்திரர்களுக்கு ஆறும் தொழில்கள் கூறியிருக்க, இங்கே ஒவ்வொன்றும் ; வன்னியரென்னும் க்ஷத்திரியர்களுக்கு உரிய தொழில்கள் ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், வென்றி என்ற ஆறனுள் ஒன்றையுங் குறிக்காது “வன்னி இறைக்குலத்தி லுதித்தவரே இகபரனென் றியம்புவரே” என்று கூறிய தெங்ஙனமெனின்; பிராமணர்களுக்கு ஓதலும், செட்டியார்களுக்குப் பொருளீட்டலும், வேளாளர்களுக்கு உழுதலும் சிறத்தலால் ஒவ்வொன்று கூறி அரசர்களுக்கு அவர்களது அறுதொழில்களுள் “புரை தீரப்பெரும் பார் புரத்தல்” என்னும் செங்கோன் முறைமையே சிறத்தலின் அதைபின் அரசில் செங்கோற்சிறப்பு முதலியவைகளால் தெரிவிப்பா மென்னுங் குறிப்பாகவே கூறினா ரென்க. அரசருக்குரிய அறுதொழில் தி - கஉ-வ-தி அரசு றறுதொழி லோதல் வேட்டல் - புரைதீரப் பெரும்பார் புரத்த லீதல் - கரையறு படைக்கலங் கற்றல் விசயம் “என்னும் எ௩-வது சூத்திரத்தானும், மற்றைய மூவருணத்தவர்க்கும் அவ்வாறு தொழிலென்பதை அரசின் க௩ - வது கவியினுரையினும், பொதுவில் நால்வருக்கும் ஒவ்வொன்றே சிறந்த வென்பதை அதிவீர ராமபாண்டியன் சொன்ன நறுந்தொகை என்னும் வெற்றி வேற்கை “வேதியர்க் கழகு வேதமு, மொழுக்கமும் என்னும் ௪-வது சூத்திரத்தானும், “மன்னவர்க் கழகு செங்கோன் முறமை” என்னும் ௫-வது சூத்திரதானும், “வைசியர்க் கழகு வளர்பொருளீட்டல்” என்னும் ௬-வது சூத்திரத்தானும், “உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல்” என்னும் எ-வது சூத்திரத்தானும் உணர்க. பிராமணர்களுக்கு அடுத்து க்ஷத்திரியர்களைக் கூறவேண்டியிருக்க ஈற்றிற் கூறிய தென்னையோவெனின் இவர்களையன்றி மற்றையர் யாவரும் இவர்கள் ஆக்கினையிற் றங்கிய வென்பார் ஈற்றில் வைத்துக் கூறினாரென்க. இகபரன் - அதாவது உலகத்திற்குக் கடவுள் என்று கூறிய தென்னையோ வெனின் இவ்வருணத்திற்குரிய செங்கோன் முறைமை அரசினும், அரசு, அரண்படை முதலியவைகளினும் சிறத்தலின் அதை இங்கே படை, அரண், அரசு முதலாக வகுத்தவர் படையை இருபத்தெட்டுக் கவிகளானும் அரணை இரண்டு கவிகளானும் கூறி, அரசு முப்பத்தெட்டுக் கவிகளால், சிங்காதனம், முடிதரித்தல். புயகேயூர கிரீடம், குடை, செங்கோல், அரத்தினெறி, ஆக்கினைச் சக்கரம்,செல்வாக்கு, மாசகற்றல், பெருந்தன்மை, இதயவண்மை, இராச சமுகம், பதியிருத்தல், மன்னர் சூழ்தல், மொழி தவறாமை, கொடைவளம், வள்ளற்றன்மை, அடுத்தவர்க்குத் தாழ்வின்றெனல், உமையருள் பெற்றோரெனல், அஷ்ட ஐசுவரியம் தசாங்கம் என்பன முதலாக, முப்பத்து நான்கு சிறப்புகளோடும் அதன் இருபத்தொன்பதாவது கவியில் “அரன் மாலிந்திரன் குகன் வேளென வன்னி வேந்தர் சிறந்திருப் பதை இம் மேதினியே விளம்பிடுமால்” என்று கூறியிருக்கின்றாரல்லவா? பூம்பாவைபோல் வாய்! நீயே நன்குணர்ந்து கூறுவாயாக. இவை முதலாய மேம்பா டுடையவர்களைக் கடவுளென்பதில் ஐயமென்னை யுளது. அன்றியும் அரசனுக்கு இறையெனப் பெயர் வந்தது கடவுட் டன்மையினாலாதலின் அக்குலத்து வந்தவர்களும் கடவுளென்பார் “வன்னியிறைக்குலத்தி லுதித்தவரே” என்றும் அவர்களே “இகபரனென் றியம்புவரே” என்றுங் கூறினாரென்க. அரசனைத் தெய்வமெனப் பிறர் கூறுவரோ யெனின் கூறினாரென்க. அதைக் கற்புடை மகளிற்குக் கணவனே தெய்வமாதல் போலும் புதல்வற்குப் பெற்றோரே தெய்வமாதல் போலும் முனிவர்களுக்குக் குருவே தெய்வமாதல் போலும் யாவருக்கும் அரசனே தெய்வமென்னுங் கருத்தைக் கொண்ட நீதிநெறி விளக்கம்.
“குலமகட்குத் தெய்வங்கொழுநனே மன்ற- புதல்வர்க்குத் தந்தையுந் தாயு-மறவோர்க்-கடிகளே தெய்வமனைவோர்க்குந் தெய்வ-மிலைமுகப்பைம்பூ ணிறை” என்னும் உஎ - வது கவியாலுணர்க. அன்றியும் மகாபாரதம் சாந்திபர்வம் வீட்டு மனை கண்ட சருக்கம் “அரசனே யுலகினுக்கு யிராசனே தரும-மரசனே பெருங் கடவுளு மவனிலை யென்னில்-விரைசெய் மாலையாய் மின்னனார் கற்புமெய்ப் பொருளு -முரைசெய் முன்னரே தீர்தரு மென்கோலோ வுளவாம்” என்னும் ௫க-வது கவியிற்காண்க. நாயனாரும் “முறை செய்து காப்பாற்று மன்னவன் மக்கட் - கிறையென்று வைக்கப்படும்” என்றார் என்க. இக்கடவுளென்னுந் தன்மையே வன்னியர்களுக்குப் பள்ளிகளெனும் பேர்வழங்கி வருகின்றதென்க. என்னை ! [6] பள்ளி யென்பது - கடவுளாலயத்தின் பெயர் அது அதில் தங்குதல் போலு மாகிய கடவுளுக்காகி, அக்கடவுட்டன்மையைக் கொண்ட அரசனுக்கும், அவன் வம்சத்தவர்களுக்கும் ஆகுபெயராகி வழங்கி வருகின்ற தென்க.
படைத்துணைத்தலைவர் குலச்சிறப்பு.
படைத்துணைத் தலைவர் குலச்சிறப்பென்பது படைத்துணைக்குத் தலைமையாயவர் வம்சத்தின் பெருமை அது குலபுருடர்கள் வீரப்பிரதாப முதலிய செயல்களால் வலியடைந்து துணை சேர்த்துக் கொள்ளுதலின் இங்கே சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.
விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார் நடையுடையார் மிடியுடைய நாவலர்மாட் டருள்கொடையார் குடையுடையார் மலையமன்னர் குன்றவர்பல் லவர்மும்முப் படையுடையார் வனியர்பிற ரென்னுடையார் பகரீரே. (௮)
(இ-ள்) வன்னியர் - வன்னியர்களானவர்கள். —விடையுடையார் - (நடுவு நிலைமையில் வழுவாது) உத்தரஞ் சொல்பவர்களும், வரமுடையார் - தெய்வானுக்ர கங்களை யுடையவர்களும், —வேந்தர் கோ எனல் உடையார் - இராஜாதி இராஜர் என்று (யாவரும் சொல்லுந்) தரமுடையவர்களும், —நடையுடையார் (மேலான) ஒழுக்கத்தினை யுடையார்களும், மிடி உடைய நாவலர்மாட்டு அருள் கொடையார் - வறுமையையுடைய புலவர்களிடத்து கொடுக்கும் கொடையினை யுடையவர்களும், குடை யுடையார் - (சந்திரவட்டக்) குடையினையுடையவர்களும், மலையமன்னர் குன்றவர் பல்லவர் மும்முப்படை உடையார்- மலைய மன்னர் குன்றவர் பல்லவர் என (மூவகுப்போராய்) மூன்று மூன்று படையினையுடையவர்களும் (ஆகிறார்கள்) பிறர் என் உடையார் - மற்றையோர் (இவ்வங்கங்களில்) எதை உடையவர்கள், பகரீர் - சொல்லு வீர்களாக (எ-று.) ஏ - அசை
கருத்து: வன்னியர்கள் நடுவுநிலைமை யுடையவர்களும், தெய்வானுக்கிரக முடையவர்களும், ராஜாதி இராஜரென்று யாரும் சொல்லுந் தரமுடையவர்களும், ஒழுக்கத்தினை யுடையவர்களும், வித்வான்களுக்குக் கொடுக்கும் கொடையினை யுடையவர்களும், முத்துக்குடையினை யுடையவர்களும், மலையமன்னர் குன்றவர் பல்லவர் என மூவகுப்போராய் மூன்று மூன்று படையினை யுடையவர்களும் ஆகிறார்கள் என்பதாம்.
[7] மலைய மன்னரெனவே. பாண்டிய குலத்தவரையும், குன்றவரெனவே -(மலை நாடராகிய) சேரர் குலத்தவரையும், பல்லவ ரெனவே-சோழர் குலத்தவரையும் மும்முப்படையெனவே - மூலம், துணை, கூலிஎன ஒவ்வொன்றுக்கும் மும்மூன்றாகவும் குறிப்பிட்டார்.
ஒன்பது படைத் துணைவர்கள் - நத்தமன், சுருதிமன் மலையமன் என மூன்று; குறவர், வேடர் ஏனாதி என மூன்று; மீனவர் அவிரியர் கூடைகட்டி என மூன்று ஆக ஒன்பது. இதைக் காஞ்சிபுர சாசனத்துட் காண்க. இப்படைத் துணைவர்கள் சாலிவாகன சஹாப்தம் எ௱௩- க்கு முன் சிலகால மிருந்தத் தெரியவருகிறதென்க.
இதுவரையினும் நூலுக்குப் பாயிரங்கூறி
இனி நூல் கூறுவராயிற் றென்க.
பாயிரம் முற்றிற்று.
நூல்.
நூலென்பது:— நூல்போலுந் தன்மையுடையது. அது இவ்வருணத்திற் குரிய அரசியலை அமைத்தலின் இங்கே பாயிரத்திற்குப் பின்வைத்துப் படை, அரண், அரசு வாழ்த்து என நான்கும் உறுப்பாக, எழுபத்தொரு கவிகளால் கூறினார்.
நூல் உவமையாகு பெயர்.
- ↑ உதாரணம். சோற்றையுண்டா னெனவே, கறி முதலியவற்றையும்; பாக்கைத்தின்றா னெனவே, வெற்றிலை சுண்ணாம்பு முதலியவற்றையுங் காட்டு மாறுபோல, வில்லைக் கூறவே மற்றைய முடி, கொடி, குடை முதலிய அங்கங்களையுங் காட்டிய தென்க.
- ↑ படைக்கலம் பயிறலில் விற்றொழில் சிறந்தது. அப்படி அரசர்களுக்குரிய தொழில்களி னொன்றாகிய படைக்கலம் பயிறலில் விற்றொழிலே சிறந்த தென்பதை மகாபாரதம் சாந்தி பருவம் வீட்டு மனைக்கண்ட சருக்கம் “சுரு மாமகம் பயிலுதல் சிலைமறை தொடர்தல்,விருதி னோடுநாற் படைகளு மளிக்குதன் மேவார்ப் - பொருத ழித்தனல் லுயிர்களைப் பொதுமையிற் புரத்தய் இருநி திக்குழா மீதன் மன்னவர்குல வியல்பே “என்னும் ௩௯- வது கவியில் சிலைமறை தொடர்தல் என்றதனாலும் ஸ்மிருதி யாதிகளாலுமறிக.
- ↑ க்ஷத்திரிய வருணமென்னும் முதற் பொருட்கு வில் முதலியவைகள் சினைப்பொருள். சிலைகளிலாது முதலும் முதலிலாது சினைகளும் இல்லை; யாதலால் சினைப்பொருள்களைக் கூறவே முதலே ஆயது. இதைத்தொல்காப்பியஞ் சொல்லதிகாரம் வேற்றுமையியல் “முதலுஞ் சினையும் பொருள் வேறுபடாஅ - நுவலுங்காலை சொற்குறிப்பினவே” என்னும் ௬-வது சூத்திரத்தாற் காண்க.
- ↑ க்ஷத்திரியகுல மூன்றனுள் முதன்மையுடையது அக்கினி குலம்; அக்குலத்துக்குரிய அரசியலாகிய படை முதலிய வுறுப்புகளே மற்றைய விரண்டுகுலத்துக்கு மாதலாலும், அதனால் சூரியகுலச் சிலையெழுபது சந்திரகுலச் சிலையெழுபது என வெடுக்கின் சொன்னதையே சொல்லவேண்டி வருதலின் கூறியது கூறல் கூற்ற மாதலோடும் பொருத்த மின்மையாலும் அக்கினிகுல மொன்றற்கே கூறின் மற்றையதும் அடங்குமென்பார் கூறினா ரென்பாரு முளர். அப்படி அமைக்கினு மமைக்க.இக்ஷ்வாகு முதலியோர் சூரியகுலத்தவரும், புரூரவர் முதலியோர் சந்திரகுலத்தவரும் ஆவர்.
- ↑ இதை இதன் ௫-வது கவியினுங்காண்க.
- ↑ இந்தப் பள்ளிகள் என்னும் மொழியானது பாலா அதாவது காப்பவன் என்னும் மொழியினின்று மருவினதாகவும், சிலர் பல்லவர் என்னும் மொழியினின்று மருவினதாகவும் ஊகிக்கிறார்கள்.
- ↑ மலையென்பது பொதிகைமலை