உள்ளடக்கத்துக்குச் செல்

சிலை யெழுபது மூலமும், 1915/008

விக்கிமூலம் இலிருந்து

உமையருள்பெற்றோரெனற் சிறப்பு.

உமையருள் பெற்றோரென்ற சிறப்பென்பது—உமையாளின் அருளைப் பெற்றவர்கள் எனலின் பெருமை. அது அடுத்தவற்குத் தாழ்வு வராதென்னுந் தன்மைக்கு முதற்காரணமாதலின், இங்கே அடுத்தவர்க்குத் தாழ்வின்றெனற் சிறப்புக்குப்பின் வைத்துக் கூறினார்.

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

கலைமகடன்மைந்தரெனக் கலைஞானம் பெறுகையினால் கடலசூழ் பூமித், தலைமகடன் மைந்தரெனச் சகமுழுது மரசாளுந் தன்மையானீ டலைமகடன் மைந்தரென வாக்கத்தாற் றழலிலவ தரித்த றன்னால், மலைமகடன் மைந்தரென வரமளிக்க பெறும்வனியர் மகிமை யென்னே. (௬௩)

(இ-ள்) தழலில் அவதரித்தல் தன்னால் மலைமகள் தன் மைந்தர் என - அக்கினியில் பிறந்ததினால் பார்வதி தன்புத்திரர்களென, வரம் அளிக்கப் பெறும் வனியர்- வரங்கொடுக்கப் பெறுகின்ற வன்னியர்கள், கலை ஞானம் பெறுகையினால் கலைமகள் தன் மைந்தரென - கலைக்கியானங்களை அடைகின்ற தன்மையால் சரஸ்வதியின் புத்திரர்கள் எனவும், சகம் முழுதும் அரசு ஆளுந்தன்மையால் பூமித் தலைமகள் தன் மைந்தர் என உலகமுழுவதையும் அரசாளுகின்ற தன்மையினாலே பூமிதேவியின் புத்திரர்கள் எனவும், ஆக்கத்தால் நீடு அலைமகள் தன் மைந்தர் என - ஐசுவரியத்தை அடைந்திருக்கின்ற தன்மையினால் இலக்ஷுமியின் புத்திரர்கள் எனவும் (ஆகிறார்கள் ஆதலால்) மகிமை என் - இவர்கள் மகிமையை என்ன சொல்லுகிறது! எ-று.

கருத்து. வன்னியர்கள் அக்கினியிற் பிறந்ததால் பார்வதியானவள் தன் புத்திரர்களென வரங்கொடுக்கப் பெறுகின்ற காரணத்தைக்கொண்டும், கலைக்கியானங்களை அறிந்திருத்தலால் சரஸ்வதியின் புத்திரர்கள் எனவும், உலகமுழு வதையும் அரசாளுகிறதினால் பூமிதேவியின் புத்திரர்கள் எனவும், ஐசுவரியத்தை யடைந்திருக்கின் றதனால் இலக்ஷுமியின் புத்திரர்கள் எனவும் யாவரும் சொல்லுகின்றார்கள் ஆதலால் இவர்கள் மகிமையை என்ன சொல்லுகிறது என்பதாம்.

அஷ்டஐசுவரியச்சிறப்பு.

அஷ்டஐசுவரியச் சிறப்பென்பது—எட்டு ஐசுவரியத்தின் பெருமை. அது உமையருளைக் கொண்டும் ஆதல் வேண்டியிருத்தலின், இங்கே உமையருள் பெற்றோரெனற் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

வேறு,

சாகரத்துலகினிட்டைச் சம்புமா முனியி யற்றும்
யாகவுற் பவராம்வன்ய ரியாவையும் புரக்குமாறு
வகன மக்கள் சுற்றமடிமைபொன் மணிநெல்லேகம்
ஆகரசாட்சி யோடெட் டயிச்சுவரியம் பெற்றாரே. (௬௪)

(இ-ள்.) சாகரத்து உலகில் - சமுத்திரம் சூழ்ந்த உலகத்தில், நிட்டைசம்பு மாமுனி இயற்றும் யாக உற்பவர் ஆம் வன்யர் - யோக நிஷ்டையைக் கொண்ட சம்பு வெனும் மஹா இருடியினாலே செய்த யாகத்திற் பிறந்தவர்களாகிய வன்னியர்கள், யாவையும் புரக்கும் ஆறு- சர்வத்தையும் காக்கும் வழியாக, வாகனம் - (தேர் யானை குதிரை முதலிய) வாகனங்கள் என்ன, மக்கள் - புத்திரர்கள் என்ன, சுற்றம் - பந்துக்கள் என்ன, அடிமை - அடிமைகள் என்ன, பொன் - பொன் என்ன, மணி -(மாணிக்கம் வைரம் முதலிய) இரத்தினங்கள் என்ன, நெல் - நெற்கள் என்ன, ஏகம் ஆகு அரசாட்சி ஓடு - ஏகமாகிய அரசாட்சி [அதாவது ஏகசக்கிராதிபத்தியத்துடன்] (ஆகிய) எட்டு ஐச்சுவரியங்களையும் பெற்றவர்களாகிறார்கள். எ-று.

கருத்து. வன்னியர்கள்; வாகனம், மக்கள் பந்து, அடிமை, பொன், இரத்தினம், நெல், ஏக சக்கிராதிபத்தியம் ஆகிய இவ்வெட்டு ஐசுவரியங்களையும் உடையவர்கள் ஆகிறார்கள் என்பதாம்.

தசாங்கச்சிறப்பு.

தசாங்கச் சிறப்பென்பது:— பத்துவித அங்கத்தின் பெருமை. அது அஷ்ட ஐசுவரியத்தோடும் இருத்தலே மேலானதாதலின், இங்கே அஷ்ட ஐசுவரியச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

கொச்சகம்

வளங்குலவு பண்ணாடு மதக்களிறாண் புலித்துவசம், விளங்குமக மேருமனோ வேகரதமும்முரசு, களங்கறுகங்காநதிவெங் கனற்பரிவாடாமாலை, துளங்கலிற்பொற்சிலை பெற்றோர் துதிபெற்ற வன்னியரே. (௬௫)

(இ-ள்.) துதி பெற்ற வன்னியர் - யாவரும் துதிக்கப் பெறுகின்ற வன்னியர்கள், வளம் குலவு பண்ணாடு - வளப்பத்தைக் கொண்டு விளங்கா நின்ற தமிணாடும், மதக்களிறு - மதத்தைக் கொண்ட பட்டத்துயானையும், ஆண்புலித்துவசம் - ஆண்புலிக்கொடியும், விளங்கு மகமேரு-விளங்கா நின்ற மஹாமேரு மலையும்; மனோவேகரதம் - மனோவேகத்தைக் கொண்ட இரதமும், மும்முரசு - மும்முரசும், களங்கு அறுகங்காநதி - (மூழ்குபவர்களது) குற்றத்தை நீக்கா நின்ற கங்கைநதியும், வெம் கனல் பரி - வெவ்விய அக்கினிக் குதிரையும், வாடாமாலை - பொன்னரிமாலையும், துளங்கல் இல் பொற்சிலை - அசைதலில்லாத அழகிய விற்பெற்ற காஞ்சீநகரும் (ஆகிய) (இப்பத்தங்கங்களையும்) பெற்றோர் - பெற்றவர்கள் ஆகிறார்கள்.

கருத்து. வன்னியர்கள் தமிணாடும், யானையும், ஆண் புலிக்கொடியும், மஹம்மேரு மலையும், மனோ வேகத்தைக் கொண்ட இரதமும், மும்முரசும், கங்கா நதியும், அக்கினிக் குதிரையும், பொன்னரி மாலையும், காஞ்சீ நகரும் ஆகிய பத்தங்கங்களையும் உடையவர்கள் என்பதாம்.

இதில். காஞ்சீ நகரானது விற்பெற்ற நகரெனக்குறிக்க வேண்டி “துளங்களில் பொற்சிலை” என்றார் என்க. தசாங்கமாவது-நாடு, நகர், மலை, ஆறு யானை, குதிரை, தேர், மாலை, முரசு, கொடி, இதை தி-௧௨-தி. “ஆறு மலையும் யானையுங், குதிரையும் -நாடு மூருங் கொடியு முரசுந் - தாருந் தேருந் தசாங்கமெனப்பெறும்” என்னும் க௪௬-வது. சூ.க.

இப்படி தசாங்கங் கூறவந்தவர் சேரனுக்குரியது வஞ்சி நாடு, கருவூர் நகர், விற்கொடி, கொல்லிமலை, பொருனையாறு, பாடலங்குதிரை, போந்தின்மாலை, யானை, தேர், முரசு.

சோழனுக்குரியது சோழநாடு, உறையூர் நகர், புலிக்கொடி, நேரிமலை, காவிரியாறு, கோரங்குதிரை, ஆத்திமாலை, யானை, தேர், முரசு.

பாண்டியனுக்குரியது பாண்டியநாடு, மதுரைநகர், மச்சக்கொடி, பொதியமலை, வையையாறு, கனவட்டங்குதிரை, வேப்பமாலை, யானை, தேர், முரசு.

சூரிய குலச் சோழன் கிளைபலவில் ஒன்றாகிய [1]தொண்டைமானுக் குரியது தொண்டைமானாடு, காஞ்சீபுரம்நகர், புலிக்கொடி, நந்திமலை, பெண்ணையாறு ஆதொண்டைமலை, யானை, குதிரை, தேர், முரசு;

இம்முக்குலத்தவர்களும் ஆதியில் அக்கினி குலத்தவர்களுக்கு உருத்திரபுரம் நாடும், நகரும், சிலாநதி, புலிக்கொடி இரத்தின இரதம், அக்கினிக்குதிரை, அறமாலை, யானை, முரசு; சூரியகுலத்தவர்களுக்கு அயோத்தியை நாடும் நகரும், சர் யுநதி, கொடி, இரதம், குதிரை, மாலை, யானை, முரசு; சந்திர குலத்தவர்களுக்கு, அஸ்தினாபுரம் நாடும் நகரும், கங்கைநதி, இவர்கள் கொடி மாலை சமயம்போல் பலவிதமாக இருக்கிறது. இரதம் குதிரை, யானை, முரசு; இம்மூவருக்கும் பொது வில் மலை இமயமென்று சொல்லப்படுகிற மஹம்மேருவே என்க. மன்வந்தரங்களினாதியாய் இன்னும் இம்முக்குலத்துள்ளாகியமற்றைய வரசர்களுடைய தசாங்கங்களைச் சொல்லப் புகின் அதிகமாக விரியும். நிற்க, இவைகளுள் இந்நூலின் மேற்கோள்காட்டிய திருவிளையாடற் கவியில் “தள்ளருமபின் முன்போல் தமிழ் வேந்தர்தமையுந் தந்தான்” எனக்கூறியது போல, இன்னூலின் ௫௪ - வதுகவியில் “சகல வளமுந் தமிழ் வேந்தர் இமையப் பொருப்பர் பண்ணாடர்” எனக்கூறியிருக்கிறபடியால், தமிழ்வேந்தர் மூவருள் அக்கினிகுலத்தோனாகிய சேரனது தசாங்கத்தைச் சொல்லலாம்; அப்படியல்ல சம்புகுலமென்றுதோன்ற திவாகர நிகண்டுமுதலிய நூற்களில் சோழனுக்கு மாத்திரம் செம்பியனெனப் பெயர்கொடுப்பின் மற்றையவிரண்டு குலத்தைத்தழுவுமென்னுங் கருத்தால் கூறியிருக்கிறதுபோல சோழனது தசாங்கத்தையே கூறிவிடலாம்; அல்லது பாண்டியனது தசாங்கத்தையாவது அப்படி ஆக்கலாம்; இவைகளைவேறே நீக்கி வேறே ஒவ்வொரு குலத்துக்கும் தனித்தனியே உற்பத்தி புராணங்களுள் கூறியிருக்கிறது போலவாவது சொல்லிவிடலாம்; அப்படியாக இத்தசாங்கத்திலேயோ முற்கூறிவந்த பகுப்புகளில் ஒவ்வொரு பகுப்பிலும் ஒன்று, அல்லது இரண்டுமூன்றும் கூறாதவையும் எடுத் தாளப்பட்டு முடிவில் பத்தாக்கித், தசாங்கங் கூறப்பட்டிருக்கிறதே அஃதென்னையோவெனின்? நன்று கூறினாய்! பூவுலகத்தில் அரசர்களுக்குள் மூன்றுதரம் உள. அவையாவன சக்கிரவர்த்தி, மஹாராஜா சிற்றாசர் என. இவைகளில் சக்கிரவர்த்தி மஹாராஜா இரண்டையும் ஒன்றாக்கி முடிமன்னர் அல்லது பெருநிலமன்னர் என்றும், சிற்றரசரைக் குறுநில மன்னர் என்றும் இருதரமாகக் கூறுவாறுமுளர். இப்பூவுலகத் தரசர்களுள் மூன்றுதரமுண்டென்பது என்னை? ஞானவாசிட்டம் ஐந்தவர்கதை.

மைந்தரொருபதுளராகி மறைநூனிறைந்து வளர்ந்ததற்பின்
றந்தை தாயரிறந்ததேகத் தனையர் கைலைத்தல மெய்தி
சிந்தை செய்வார் நல்குரவு தீரவுயர் வன்னியராவோ
மந்தநிலை சற்றாதலினாலதிகநிலை மன்னவராவோம்”

என்னும் ௯- வ கவியாலும்,

அதுவுஞ்சிறிதாம் புவியனைத்துக் கரசராவோ மதுசற்றா
னித்துன்னிய விந்திர ராவோ நிகழ்த்துமதுவு நெடிதல்ல
பதுமஞ் செறியுமயனாதல் பழுதில்பதவியெனத்துணிந்தா
ருதிதமனத்துப் பதின்மரு மொத்துயரும் பதுமாதனத்திருந்து.

என்னும் எ-வது கவியானும் உணர்க.

இருதரப்பகுதியை திருத்தொண்டர் புராண வரலாறு,

“திரு மறையோர் புராணமவை பதின் மூன்று
     சிவவேதிய ரானைவழிப்பட்ட புராண மீரிரண்டு
குரைகழன்மா மாத்திரரொன் றறுவர் முடிமன்னர்
     குறுநில மன்னவரைவர்
வணிகர்குலத் தைவா
இருமை நெறி வேளாளர் பதின்மூவ ரிடைய
     ரிருவற் சாலியர்குயவர் தயிலவினையாளர்
பாதவர்சான்றார் வண்ணார் சிலைமறவர் நீசர்
     பாணரிவு ரோரொருவராம் பகருங்காலே.”

என்னும் ௨௬ -வது கவியாலுணர்க.

அவையிற்றை இந்நூலில் தொல் காப்பிய சூத்திரங்கள் போல படை கொடி குடை முரசு களிறு புரவி தேர்வாள் முடி முதலிய மஹாராஜாக்களுக்குரிய அங்கங்கனின் சிறப்பையும், இத்தசாங்கத்துக்கு முன்கூறிய ௯௪-வது கவியாகிய அஷ்ட ஐசுவரியச் சிறப்பில் “ஏகமாகரக்ஷியோ டெட்ட யிச்சுவரியம் பெற்றாரே” என்றதுடன் ௪௨-வது கவியில் ஆக்கினை சக்கிரச் சிறப்பாகிய மகாராஜாவிற்கு மேற்பட்ட சக்கிரவர்த்தியின் அங்கத்தையுங் கூறியிருக்கின்றமையால், ஒத்துப்பார்க்குமிடத்து சக்கிரவர்த்தி முதல் மேலிருந்து கீழிறக்கி மஹாராஜா குறுநிலமன்னர் வரையிலும், குறுநில மன்னர் முதல் கீழிருந்து மேலேற்றி மஹாராஜா சக்கிரவர்த்திவரையிலும் ஒரே தரமாக்க உலக முழுமையும் அரசாக்ஷி செய்து வருகிற க்ஷத்திரிய ரென்னும் வன்னியர்களாதலின்; தனியே ஒரு இடத்துக்குரிய தசாங்கத்தைக் குறிப்பிட்டால் அவ்வவ்விடத்தை தவிர மற்றைய விடங்களையுந் தழுவாது என்னுங் கருத்தால் எல்லாத்தசாங்கங்ளையும் ஒன்றாகக்கூட்டி அவ்வவ் விடங்களுக்கும் உரியவர்கள் என்னும் தன்மை தோன்றும் வண்ணம் பொதுவில் நிதானித்து ஒவ்வொரு பகுப்பிலும் தலைமை உடையது எதுவோ அதைத் தனித் தனி ஆய்ந்தெடுத்து அவைகளையும், மேன்மை தோன்றும்படி தேவர்களால் கொடுக்கப்பட்டவைகளையும் சேர்த்துத்தசாங்கங்கூறினார் என அறிக. அவ்வங்கங்களில் தலைமையுடையவற்றை அடுத்த ௬௬ - வது கவியாகிய அரசின் சிறப்பிற் கூறியிருக்கின்றார். அதைக்கொண்டு மற்றையவைகளையும் உணர்ந்து கொள்க

அரசின் சிறப்பு.

அரசின் சிறப்பென்பது :- தலைமையுடைமையின் பெருமை. அது தசாங்கத்தைக் குறித்தே யாதலின், இங்கே தசாங்கச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

அறுசீர்க்கழி நெடிலடியாசிரியவிருத்தம்.

நாடுபலவினுக்கரசு பண்ணாடு நகர்க்கரசு நலஞ்சேர்கச்சி, நீடுவரைகளுக்கரசு மாமேரு நதிக்கரசு நிறைநீர்க்கங்கை, பீடுபெறு சிலைக்கரசவ் வுருத்திரன் வெஞ்சிலையகிலும் பெரிது காக்கச், சூடுமணி முடியரசுக் கரசுவன்னி யரசன்றிச் சொலவேறுண்டோ. (௬௬)

(இ-ள்.) நாடு பலவினுக்கு அரசு பண்ணாடு - (முற்கூறிய அங்கம் பத்தும் ஆராயுங்கால்) நாடுகள் பலவற்றுள்ளும் தலைமையுடையது தமிணாடும், நகர்க்கு அரசு நலம் சேர் சச்சி நகரங்கள் யெவற்றினுக்குந் தலைமையுடையது நன்மைகள் நிறைந்த காஞ்சீ நகரமும், நீடுவரைகளுக்கு அரசு மாமேரு - உயர்ந்து விளங்கும் மலைகள் எவற்றினுக்குந் தலைமையுடையது மஹா மேரு மலையும், நதிக்கு அரசு நிறை நீர்க்கங்கை - நதிகள் எவற்றினுக்குந் தலைமையுடையது நீர் நிறைந்த கங்கா நதியும், சிலைக்கு அரசு பீடு பெறு அ உருத்திரன் வெம்சிலை - விற்கள் எவற்றினுந் தலைமையுடையது பெருமிதங் கொண்ட அவ்வுருத்திரனுடைய வில்லும் ஆதலின், (இவைகளோடு) அகிலம் பெரிதுகாக்க - உலகத்தை மிகவும் காவல் செய்யும்படி, அரசுக்கு - தலைமையுடைமைக்கு, மணி முடிசூடும் வன்னி அரசு அன்றி - இரத்தின கிரீடந்தரிக்கும் வன்னியர்கள் இராஜ்ஜியபாரஞ் செய்தலை யல்லாமல், வேறு சொல உண்டோ - வேறு சொல்வதற்கு இடம் இருக்கிறதா? (சொல்வீர்களாக) எ - று.

கருத்து. வன்னியர்களுடைய இராஜ்ஜியபாரமே தலைமையுடையது என்பதாம்.

இதில். முன்கூறாத நகர் கூறி, வில்லையுங்கூறி யிருப்பதால் விற்பெற்ற நகர் காஞ்சி யென்றும், தலைமையுடைய சிலவற்றைக்கூற மற்றவைகளு மாமெனத் தெரிவித்தலுமறிக.

வில்லின்புகழ் கூறுதற்சிறப்பு.

வில்லின் புகழ்கூறுதற்சிறப்பென்பது - வில்லினது புகழைச் சொல்லுதலின் பெருமை. அது அரசுக்கு உறுதி தருதலின், இங்கே அரசின் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

வேறு.

மேவரு மேரு வொத்த வீரபண்ணாடர் வில்லைத்
தேவரே கூறல் வேண்டுந் திசைமுகனாதியாய
மூவருங்கூரல் வேண்டு முனியகத் தியனனந்தன்
வாய்வளங்கூறல்வேண்டு மற்றெவர் கூறுவாரே. (௬௭)

(இ - ள்.) வீரபண்ணாடர் - வீரத்தைக்கொண்டிருக்கின்றவர்களாகிய தமிணாடரென்னுஞ் சேர சோழ பாண்டிய வன்னியர்களது, மேவு அரு மேரு ஒத்தவில்லை - பெறுவதற்கு அரிய மகம்மேருவைப் போலும் (உயர்ந்து பருத்த)வில்லின் சிறப்பை, (அதன் பெருமை முதலியவை விளங்கத்) தேவரே கூறல் வேண்டும் - தேவர்களே சொல்லல் வேண்டும், திசை முகன் ஆதி ஆய மூவரும் கூறல் வேண்டும் - பிர்ம்மா முதலாகத் திரிமூர்த்திகளுஞ் சொல்லல் வேண்டும், முனி அகத்தியன் அனந்தன் வாய்வளங் கூறல்வேண்டும் - இருடியாகிய அகத்தியனாவது ஆதிசேடனாவது தமது வாய் வளத்தினால் சொல்லல் வேண்டும், மற்றும் எவர் கூறுவர் - வேறே யாவர் சொல்லல் வல்லவர்கள்? (அனைய தாதலால் என்னாலே சொல்ல சாத்தியமாமென்பது என்னை) என்றபடி எ-று.

கருத்து. வன்னியர்கள் வில்லின் சிறப்பைத் தேவர்களும், திரிமூர்த்திகளும், அகஸ்தியரும், அதிசேஷனும் சொல்லல் வேண்டுமே யொழிய எம்போலியரால் சொல்லி நிறைவுபெறுவதன்று என்பதாம்.

இதில் சர்வகலைகளையுந் தெரிந்தவர்களாதலோடும் ஆயுள் மிக்குடையவர்களாதலின், அநாதிகாலமாக இவ்வன்னியர்கள் செய்திருக்கும் அற்புதங்களும் தருமங்களும், உதவிகளும், விஜயங்களும் ஒவ்வொன்றுந் தனித்தனியாக அனுபோகத்துடன் ஆகம் அளவையானும், காக்ஷி அளவையானும் சொல்லல் கூடுமென்பார்; தேவரும் மூவரும் அகத்தியனுங்கூறல் வேண்டுமென்றும், கலைகள் ஆயுளோடும் இரண்டாயிரம் நாவு முடைமையால் அனந்தனும் வாய்வளங்கூறல் வேண்டும் என்றுங் கூறினார்.

இதுவரையில் அரசு கூறினவர் இனி வாழ்த்து கூறினாராயிற்றென்க.

  1. திருக்கழுக்குன்ற புரானம் நாட்டுப்படலம்.

    முக்கணான் கணநாதர்க்குண் முதன்மைத் துண்டீரணான்டு
    மிக்க துண்டீர நாடாத் தண்டகவேந்தன் றாங்கி
    தக்க தண்டகனன்னாடாய்த் தபனன் மாகுலத்துச்சோழன்
    தொக்கதார் தொண்டமான் காத்தாயது தொண்டை நாடே.

    என்னும் 2-வது கவியில் தபனன் மாகுலத்துச் சோழன் என்றதனால் உணர்க.