சிலை யெழுபது மூலமும், 1915/009
வாழ்த்து.
வாழ்த்தென்பது - துதித்தல். அது இந்நூலும் இந்நூலுட்கூறும் வம்சமும். இவ்வம்சத்துக்குரிய இராஜ்ஜியபாரமும், இராஜ்ஜியபாரத்துக்குக் காவலாகிய அரணும், அரணுக்குப் பலத்தைத்தரும் வின் முதலிய படைகளும், ஊழி ஊழியாக அனவரதமும் நிலைத்து விளங்கல் வேண்டும் என எண்ணிக் கடவுளைத் துதித்தல் பரிசு தருபவன் முன்னிலையிலாதலின், இங்கே பரிசுதருந் தகமையையுடைய அரசுக்குப்பின்வைத்துப் பரிசுதரல், வாழ்த்து என இரண்டு சிறப்பாக நான்கு கவிகளால் கூறினார்.
பரிசுதரற் சிறப்பு.
பரிசுதரற் சிறப்பென்பது:— பரிசு கொடுத்தலின் பெருமை. அது துதித்தலைக்கொள்ளும் அரசின தாதலின் இங்கே அரசுறுப்பாகிய வில்லின் புகழ்க் கூறுதற் சிறப்பைத்தழுவி வாழ்த்துறுப்புக்குக் காரணமாக முதலில் வைத்துக் கூறினார்.
வேறு.
அவிக்கா தரங்கூர் புனிதர் மகிழ்ந்தருள்வன்னியரை யாம்புகழச், செவிக்காரமுத மெனக்கேட்டுச் சிந்தை யுவந்து சீர்தூக்கிப், புவிக்காயிரம்பொ னிறைநீக்கிப் பொற்றண்டிகைபூ டணத்தோடு, கவிக்காயிரம்பொன் பரிசளித்தான் கருணகரத்தொண்ட வன்னியனே.
(இ - ள்.) அவிக்கு ஆதரம் கூர் புனிதர் - அவிர்ப் பாகத்துக்கு இச்சை மிகுந்த தேவர்கள், மகிழ்ந்து அருள் வன்னியரை - மகிழ்ந்து கிருபையைச் செய்யாநின்ற வன்னியர்களை, யாம்புகழ - யாம் (அவர்களது குலத்துக்குரிய அரசியிலை வில் முதலிய அங்கங்களைக்கொண்டு புகழ, கருணாகர தொண்ட வன்னியன்) தொண்டமண்டலத்தை ஆளும், கருணாகரச் சோழ னான வன்னியன், செவிக்கு ஆர் அமுதம் எனக்கேட்டு - காதுக்கு நிறைந்த தேவ அமிர்தம் எனக்கேட்டு, சீர் தூக்கி - கவியின் உறுப்பு முதலியவைகளை ஆராய்ந்து, சிந்தை உவந்து - மனம்மகிழ்ந்து, புவிக்கு இறை ஆயிரம் பொன் நீக்கி, (எம்மால், அனுபவஞ் செய்துவருகிற) பூமிக்காக (வருஷந்தோறும் கொடுக்கவேண்டிய பகுதியில்) ஆயிரம் பொன்னைத் தள்ளிக்கொடுத்து, பொன் தண்டிகை பூடணத்தோடும் - பொன் பல்லக்கு பலவித ஆபரணங்களோடும், கவிக்கு ஆயிரம் பொன் பரிசு அளித்தான் - கவியொன்றுக்கு ஆயிரம் பொன்னாக (எழுபத்தொன்பதினாயிரம் பொன்னும்) பரிசு கொடுத்தான். எ-று.
கருத்து. யாம் வன்னியர்களை அவர்களது குலத்துக்குரிய அரசியலை வில்முதலிய அங்கங்களைக் கொண்டு புகழ தொண்டமண்டலத்தை யாளும் கருணாகரச் சோழ வன்னியனானவன் தேவ அமிர்தமெனக்கேட்டு, கவியின் உறுப்பு முதலியவைகளை ஆராய்ந்து மகிழ்ந்து, எம்மால் அனுபவஞ்செய்து வருகிற பூமிக்காக வருஷந்தோறும் செலுத்தும்வரியில் பொன் ஆயிரம்நீக்கி, பல்லக்கு ஆபரணங்களோடும் கவியொன்றுக்குப் பரிசு ஆயிரம் பொன்னாக எழுபத்தொன்பதினாயிரம் பொன்னும் கொடுத்தான் என்பதாம்.
இக்கருணாகரன் தொண்ட மண்டலம் ஆண்ட சோழன் என்பதைப் படிக்காசுப் புலவரால் செய்யப்பட்ட தொண்டமண்டல சதகம்,
“பண்டையோர் நாளையிலோ ரேழ்கலிங்கம் பரணி கொண்டு, செண்டையு மேருவிற்றீட்டு வித்தோன் கழற் செம்பியன் செய், தொண்டை நன்னாடு புரக்கின்ற கோனந்தித் தோன்றலெங்கள், வண்டையர் கோனங் கருணாகரன் றொண்ட மண்டலமே”
என்னும் 92-வது கவியிற்காண்க. அதுவுமன்றி,
முதலாவது குலோத்துங்க சோழனிடம் மந்திரியாகவும், சேனைத் தலைவனாகவுமிருந்த இக்கருணாகரத்தொண்டமான் கலிங்கத்தின் பேரிற் போருக்குச் சென்று ஜெயம் பெற்றுத் திரும்பியவனாகையால், ஜெயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி, காளிக்குக் கூளி கூறியது 30-வது கவியில்,
“இறைமொழிந்தளவி லெழுக லிங்கமவை
யெறிவ னென்றுகழ றொழுதன
மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல
திலகன் வண்டைநக ரரசனே
௸ 52, 53, 54-வது கவிகளில்
தண்ணாரின் மலர்த்திர டோளபயன்
றானேவிய சேனை தனக்கடையக்
கண்ணாதிய சோழன் சக்கிரமாங்
கருணாகரன் வாரண மேற்கொளவே”
தொண்டையர்க்கரசின் முன்வருஞ்சுரவி
துங்கவேள்கொடி யுயர்த்தகோன்
வண்டையர்க்கரசு பல்லவர்க்கரசு
மால்களிற்றின்மிசை கொள்ளவே
மறித்தோடி யெவ்வரசுஞ் சரியவென்று
வருமனுக்கைப் பல்லவர்கோன் வளவர் வேந்த
னெறித்தோடை யிலங்குநடைக் களிற்றின் மேற்கொண்
டிரைவேட்ட பெரும்புலி போலிகன் மேற்செல்ல”
என்று வருவனவற்றில், குலோத்துங்கனும், கருணாகரனும் பல்லவச்சோழ அரசர்களென்பதும், கருணாகரன் தொண்டைமான் என்னும் பட்டம் பெற்றவனென்பதும், மன்னர்களுடைய வரலாற்றையும் வெற்றித்திறத்தையும் புகழும் பரணிப் பிரபந்தத்தில் காண்க.
வாழ்த்துச்சிறப்பு.
வாழ்த்துச் சிறப்பென்பது :— துதித்தலின் பெருமை. அது பரிசுபெற்ற பிறகு சொல்லுத லாதலின், இங்கே பரிசுதரற் சிறப்புக்குப்பின் ஈற்றில்வைத்து மூன்று கவிகளால் கூறினார்.
.
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
கனுமறையெனுமிது வளர்கவே தரணியிலறஈனி
விளைகவே, மனுகெறிவகையுயிர் பெருகவே மணிமுத
லியவள ல வே, கனமுறை மையின்மழை பொழி
கவே. களையற ட் தழைகவே, இனமொடு சுரபி
கள் பெருகவே.யிணையறுபுலிவிரு. தயர்கவே. (௬௯)
(இ-ள்.) தனுமறை எனும் இதுவளர்க -தனுர். வேதமென்கிற இந்நூல்: நீடூழி நிலைத்திருக்கக்கடவது; தாணியில் அறம் நனி விளைக - இவ்வுலகத்தில் தருமங்கள் மிகவும் பலிதமாகக் கடவன ; மனுகெறிவகை உயிர் பெறுக - மனுதரும சாஸ்திர மார்க்கங்களை உயிர்கள் பெற்று வாழக்கடவன; மணி முதலிய வளம் நிறைக - இரத்தின முதலிய வளப்பங்கள் நிறைந்து விளக்கக்கடவன; கனம் முறைமையின் மழை பொழிக - மேகங்கள் முறையோடும் தவறாது மழைபொழியக்கடவன; களை அற உயர் பயிர் தழைக - களைகளில்லாது உயர்ர்து பயிர்கள் செழிக்கச் கடவன ; இனமொடு கரபிகள் பெருக - கூட்டக்களோடும் பசுக்கள் விருத்தியாகக் கடவன; இணை அறு புலி விருது உயர்க - ஒப்பில்லாத புலிக்கொடி உயர்ந்து, தோன்றக்கடவது. எ-று,
ஏ - பலவும் அசைகள்.
இதவும் அது.
வேறு.
அவிசொரி வேள்வியைப் பாடினமே யயோ நிசம்
பவர் தமை வாழ்த்தனமே, யவனிக்கிறைவமைப்பாடின
மே யறமெண்ணான்குற. -வாழ்த்தினமே, தவளக் கவிகை
யைப் பாடினமே தழல்வெம் புரவியை வாழ்த்தினமே,
தவமிகு வனியரைப் பாடினமே. தனிநெடுஞ் சிலையினை
வாழ்த்தினமே. (௭௦)
(இ-ள்.) அவிசொரி வேள்வியைப் பாடினம் : நெய்சொரியாநின்ற யாகத்தைப் பாடினோம், அயோனி சம்பவர் தமை வாழ்த்தினம் - அயோரி உற்பவர்களைத் துதித்தாம்; அவனிக் கு இறைவரைப் பாடினம் - பூவுலகத்துக்கு அரசர்களைப்பாடினாம்; அறம் எண்ணான்கு உற வாழ்த்தினம் - தருமங்கள் முப்பத்திரண்டும் பொருந்தும் படித்துதித்தாம், தவளக்கவிகையைப் பாடினம் - முத்துக்குடையைப் பாடினாம்; வெம்தழல் புரவியை வாழித்தினம் - வெவ்விய அக்கினிக்குத்திரையைத் துதித்தாம்; தவமிகு வனியரைப்பாடினம் - தவமிகுந்த வன்னியர்களைப் பாடினாம்; தனி நெடும் சிலையினை வாழ்த்தினம் - ஒப்பற்ற நீண்ட வில்லைத் துதித்தாம். எ-று.
இதுவும் அது.
கொச்சம்.
பூவாழி மறைவாழி புகல்செம்பொற் கிலைவாழி
பாவாழி சுடர்வாழி பகர்சம்பு முனிவாழி
மாவாழி யகளங்க வனியர் பெருந்தமர்வாழி
கோவழி யிவர்தனிச்செங் கோல்வாழி வாழியவே.
(இ-ள்.) பூவாழி- பூமிவாழக்கடவது; மறைவாழி - வேதங்கள் வாழக்கடவன: புகல்செம்பொன் சிலைவாழி- சொல்லுகின்ற மிக்க அழகினையுடைய சிலையெழுபதென்னும் இப்பிரபந்தம் வாழக்கடவது; பாவாழி - இதன் உள்ளுறுப்பாகிய கவிகளும் வாழக்கடவன; சுடர்வாழி - (அக்கினி சூரியன் சந்திரன் என்னும்) மூன்று சுடர்களும் வாழக்கடவன; பகர்சம்பு முனிவாழி - யாவரும் சொல்லுகின்ற சம்பு இருடியானவர் வாழ்க்கடவர்; மாவாழி - இலட்க்ஷுமி வாழக்கடவள்: அகளங்க வனியர் பெருந்தமர்வாழி - களங்கமில்லாத குணத்தினையுடைய வன்னியர்களது பெரிய சுற்றத்தவர்கள் வாழக்கடவர்கள்; கோவாழி - இவர்களது அரசு வாழக்கடவது; தனிச்செங்கோல் வாழி வாழிய - ஒப்பற்ற செங்கோல் வாழக்கடவது வாழக்கடவது. எ-று
சுபம்! சுபம்!!
சிலை எழுபது
முற்றிற்று.