செம்பொற்சிலை யெழுபது, 1896/001
௳
கடவுள் துணை.
செம்பொற்சிலையெழுபது.
பாயிரம்.
கொச்சகம்.
கடவுள் வணக்கம்,
திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப
மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந் தோன்வாமத்
துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரம்
தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொமுவாம்.
(௧)
அறுசீர்க்கழி நெடிலாசிய விருத்தம்.
நூற்பெயரும், ஆக்கியோன் பெயரும்.
முந்தைநாள் வீரசம்பு முனிசெய்மா மகத்திற்போந்த
சந்ததியார் சீரோது கெனத்தகு முதியோர் கேட்ப
இந்தணி சடிலத்தெம்மா னிணைக்கழல் பரா அயிசைத்தான்
செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவாமிந்நூல்.
(௨)
வேறு.
கச்சித்தலத்தின் சிறப்பு.
மெச்சுந்தரங்கக் கடலுலகின் மிளிருந்தலங்கண் மிகவெனினும்
இச்சித்தவர்தங் குறைவெயின்மு னிமம்போற்கடி தற்கியலாவே
பச்சைவண்ணத் திருமாலும் பவளவண்ணச் சோதியும்வாழ்
கச்சித்தலத்தைப் புரையுமெனக் கழறத்தலங்கள் காணேமால்.
(௩)
வேறு.
கோத்திரச் சிறப்பு.
சாத்திர மறைகள்சொற்ற தனிநிய மம்வாழாதோர்
சூத்திரந் தவறில்வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப்பாளர்
மாத்திரை யளவுஞான மறைப்பின்மா தவங்கூர்சம்பு
கோத்திர வரசர்க்கொப்பக் கூறுவ தெவரைமாதோ.
கொச்சகம்.
உற்பவச் சிறப்பு.
திங்கண்மும்மழைபிலிற்றச் செழித்துயிர்கணனிமல்க
அங்கமோராறுமறை யந்தணராகுதியோங்கத்
துங்கமனுநெறிதழைப்பத் துகளறுவன்னியினின்றும்
பங்கயனுமுதலிவரைப் படைத்துலகுபடைத்தானால்.
(௫)
குலச்சிறப்பு.
விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி
உதிகுலத்தோ ராதலினு லுயர்குலத்தோ ராமிவர்க்கத்
துதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும்
நதிகுலத்தோர் களுமெங்ங னாட்டினிலொப் பாவாரே.
(௬)
இதுவுமது.
மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர்
நிறைக்குலந்தி லுதித்தாலென் னிதிபடைத்தா லென்னான்காம்
முறைகுலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி
இறைக்குலத்தில்[1] உதித்தவரே யிகபரனென் றியம்புவரே.
(௭)
படைத்துணைத்தலைவர் குலச்சிறப்பு.
விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையமன்னர் குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற ரென்னுடையார் பகரீரே.
(௮)
பாயிர முற்றிற்று.
- ↑ உதித்தவரே யிகபரன் என்பது பால்வழுவமைதி.