உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை  PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




செவ்வி

பேரா.தொ. பரமசிவன்

நேர்காணல்கள்

சந்தியா பதிப்பகம்
சென்னை-83.

செவ்வி
© தொ.பரமசிவன்
தொகுப்பு : ச. நவநீத கிருஷ்ணன்

முதற்பதிப்பு : 2013
பிரதிகள் : 1000 ● அளவு : டெமி ● தாள் : 60 gsm ● பக்கம் : 104
அச்சு அளவு : 11 புள்ளி ● விலை : ரூ.75/-
அச்சாக்கம்: சென்னை மைக்ரோ பிரிண்ட் பி.லிமிட்,
சென்னை-29.

சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044 : 24896979


ISBN : 978-93-81343-44-9


SEVVI
© Tho. Paramasivan
Compiled by: Sa. Navaneetha Krishnan

Printed at Chennai Micro Print Pvt Ltd.,
Chennai - 29.

Published by
Sandhya Publications
New No. 77, 53rd Street, 9th Avenue, Ashok Nagar,
Chennai - 600 083. Tamilnadu. Ph : 044 - 24896979

Price Rs. 75/-

sandhyapathippagam @ gmail.com
sandhyapublications@yahoo.com

www.sandhyapublications.com



சந்தியா பதிப்பகம்


ஏறக்குறைய கிறிஸ்து பிறப்பதற்கு எண்ணூறு வருடங்கள் முன்பே ஆதிச்சநல்லூரில் நாகரிகம் மிகுந்த மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இதனை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர். ஜாகர் என்பவர்தான். 1876 ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் ஆராய்ச்சிக்காக வந்த அவர் கண்டு பிடித்தது தான் இந்தத் தொல்தமிழர்களது நாகரிகம். அந்த ஜாகர், தான் கண்டுபிடித்தவற்றில் பலவற்றை ஆதாரத்துக்காக ஜெர்மனுக்கே எடுத்துச் சென்றுவிட்டார். அப்பொருட்கள் இன்னமும் ஜெர்மனியில் உள்ள பெர்லின் அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வாழ்ந்த தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால்... அதை உருக்குவதற்கான உலைகளை எங்கு வைத்திருந்தார்கள்... அதை செதுக்குவதற்கும் சீராக்குவதற்கும் எத்தகைய தொழில் நுட்பங்களைக் கையாண்டார்கள்... அப்படியாயின் இவர்களது நாகரிகம்தான் மற்ற அனைத்து நாகரிகங்களுக்கும் முற்பட்ட நாகரிகமாக இருந்திருக்க வேண்டும்.

பேரா. தொ. பரமசிவன்
(தமிழக அரசியல் 08-07-2010 இதழில் பாமரன்
எழுதிய கட்டுரையிலிருந்து.....)

நன்றி...


ஆ. தனஞ்செயன் | லெனா. குமார் | பிரிட்டோ கீற்று நந்தன் | முத்துக்குட்டி | அப்பணசாமி மணா | ஷோபா சக்தி | சங்கர ராமசுப்பிரமணியன் ஆர்.ஆர்.சீனிவாசன் | பாமரன்


இதழ்கள்

மாற்றுவெளி | கீற்று இணையதளம் | தீராநதி காலம் | சன்டே இந்தியன் | தலித் முரசு தமிழக அரசியல்

முன்னுரை


நண்பர்களே வணக்கம்,

இந்த முன்னுரையை மிகுந்த கூச்சத்துடனே நான் எழுதுகிறேன். இந்த நேர்காணல்களின்வழி நான் இயங்குகின்ற கருத்தியல்தளத்தை நான் என்னுடைய சொற்களால் வெளிப்படுத்தி இருக்கிறேன். எனவே இவை ஆய்வுக் கட்டுரைகள் ஆகா.

என்னுடைய கருத்தியல்தளம் பெரும்பாலும் மனிதவாசிப்பு சார்ந்தது. மனிதவாசிப்பு என்பது உரையாடல் மரபு சார்ந்தது. தமிழர்களின் அறிவுத்தொகுதி பெரும்பாலும் உரையாடல் மரபிலேயே வெளிப்படுகிறது. ஒரு மரத்தச்சரிடம் அறுகோணத்தின் சமன்பாடு பற்றிக் கேட்டால் அவருக்கு அதை சமன்பாட்டுவிதியாகச் சொல்லத்தெரியாது. ஆனால் அதை 'நாலுக்கு மூனு நடுவுல பாதி' என்று உரையாடல் மரபிலே போகிற போக்கில் சொல்லிவிடுவார்.

தமிழர்களுடைய மரபுவழி அறிவுத்தொகுதியினை உரையாடல் மரபிலும் அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவே மீட்டெடுக்க முடியும். அதையே நான் செய்திருக்கிறேன். என்னுடைய கண்டுபிடிப்பு அல்லது பங்களிப்பு என்று சொல்லிக்கொள்வதற்கு வேறெதுவும் இல்லை. என்னை நேர்காணல் செய்த இதழாளர்களுக்கும், அவைகளை வெளியிட்ட இதழ்களுக்கும் என் அன்பு உரித்தாகுக.இந்த நேர் காணல்களை தேடித்தொகுத்த இரா. சித்தானை, பேராசிரியர் ச. நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றி. இந்நூலை வெளியிடும் சந்தியா பதிப்பகத்தாருக்கும் நான் நன்றியன்.

10.06.2013, திங்கள்கிழமை
பாளையங்கோட்டை

தொ. பரமசிவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=செவ்வி&oldid=1800082" இலிருந்து மீள்விக்கப்பட்டது